Thursday, April 7, 2011

மீண்டும் தேசிய முன்னணி உருவாகிறதா?

கோவையில் அம்மையார் செல்வி.ஜெயலலிதா எதோ கருணாநிதி அரசை தூகிஎரிய சூளுரை விடுத்தார் என்று மட்டும் பார்க்கமுடியவில்லையே? அதற்காக எல்லா கட்சிகளையும் கொண்ட ஒரு மெகா கூட்டணியை அமைத்தார் என்று மட்டுமே சிந்திக்க முடியவில்லையே? தமிழ்நாட்டில் ஆட்சி மாட்ட்ரத்தை மாட்டுமே மனதில் வைத்து தேர்தலை சந்திக்கிறார் என்று எண்ணிப் பார்க்கமுடியவில்லையே? ஊழல் செய்கிறார் கருணாநிதி என்று மட்டுமே கொப்பப்படுவதாக தெரியவில்லையே? கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் கொதித்தேழுந்துள்ளார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லையே?

அதற்கு பதில் அல்லது அதையும் விட கூடுதலாக தமிழ்நாட்டை வீட்டு வெளியே பார்க்கும் பார்வையும் அல்லவா தெரிகிறது? எதோ இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டதால் மட்டுமே இப்படி கூறுகிறேனா? இடதுசாரிகள்தான் அவரது கூட்டணியின் அங்கமாயிற்றே? அதில் சிபியின் தா.பாண்டியன் தவிர, டி.ராஜா தவிர, தமிழர் அல்லாத ஏ.பி.பரதனும், சி.பி.எம்.இன் ஜி.ராமகிருஷ்ணன் தவிர அகில இந்திய செயலாளர் பிரகாஷ் கரந்தும் கலந்து கொண்டதை வைத்து மட்டும் சொல்ல முடியுமா? அவர்கள் இருவருக்கும் கேரளாவில் இதே நேரம் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் இந்த வட்டாரத்தில்தான் சுற்ற வேண்டும் என்பதால் கோவை கூட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று சமாதானம் சொல்லிவிடலாம்.

அது நமது கலைஞருக்கும் பெரும் தலைவலியாக தோன்றாது. ஆனால் ஏன் கோவை அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வந்தார். கோவையில் கொங்கு வேளாளர் வாக்குகளை அதிமுக அதிகமாக பெற்றாலும், ஒரு கொங்கு முன்னேற்ற கழகத்தை கலைஞர் வளைத்து போட்டிருப்பதால், என்னதான் கொங்கு இளைஞர் கழகத்தை அம்மா வளைத்து போட்டாலும் அந்த சமூக வாக்குகள் பிரிந்து எதிர்ப்புறம் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான், கொங்கு வாக்குகளுடன் நாயுடுக்கள் வாக்குகளும் வேண்டும் என்பதற்காக என்னதான் விஜயகாந்த் தன பக்கம் இருந்தாலும், வைகோ எத்ரிப்புரம் போய்விட்டாரே என்ற காரணத்திற்க்காக, சந்திரபாபு நாயுடு மூலம் அந்த தெலுங்கு வாக்குகளை பெறத்தான் செய்துள்ளார் என்று ஜெயலலிதாவின் தந்திரத்தை சுருக்கி பார்க்க முடியுமா?

இப்படி சுருக்கி தமிழ்நாட்டளவில் ஜெயலலிதாவின் சூத்திரத்தை பார்ப்பது ஒரு வகை பார்வை.அந்த பார்வைப்படி செல்வி.ஜெயலலிதா இந்த கோவை கூட்டத்தை வெறும் தமிழ்நாட்டு வெற்றிக்காக மட்டுமே நடத்தினார் என்றால், தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் தொகுதி எண்ணிக்கையை கணக்கில் வைத்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்றே நினைக்க தோன்றும். இத்தகைய ஒரு கணக்கு எங்கும் இந்திய லவில்கூட பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் கோவை கூட்டம் இத்தகைய கணக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

கோவை கூட்டத்தில் பிரகாஷ் கரத் பேசும்போது, இது தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவு அல்ல என்றும் அகில இந்திய ளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் பேசியதிலிருந்து மட்டும் நம் சிந்திக்கவில்லை. ஏன் என்றால் பிரகாஷ் கரத் இந்த கருத்தை ஒரு வாரமாகவே கூறிவருகிறார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க சந்திரபாபு நாயுடு பேசியது உண்மையில் யாரை எட்டவில்லை என்றாலும் அறிவாலயத்தின் தலைவருக்கு அத்ர்ச்சியாகவே இருக்கும். ஏன் என்றால் கருணாநிதிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் எந்த ஒரு முரண்பாடும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை.

அப்படியானால் ஏன் அவர் அப்படி பேசவேண்டும்? திமுக காங்கிரசுடன் சேர்ந்து இருப்பதால் மட்டுமே எதிர் குரலாக அபப்டி பேசினார் என எடுத்துக் கொள்ளலாமா? ள்ளது அதற்கும் மேலே ஏதாவது அரசியல் இதில் இருக்கிறதா? சந்திரபாபு நாயுடுவிற்கு ஆகாத கட்சி, எதிரான கட்சி, காங்கிரஸ் கட்சிதான். அதனால் சந்திரபாபு நாயுடு வந்தது, கலந்து கொண்டது, பேசியது எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதுதான். பக்கத்து ஆந்திராவில் காங்கிரஸ் எத்ரிப்பில் மட்டும்தான் நாயுடு நிற்கிறார்.ஆகவே இங்கே கோவையில் நடந்த அதிமுக கூட்டணி கூட்டம் அல்லது தமிழ்நாட்டு டேஹ்ர்தல் கூட்டணி வியூகம் காங்கிரஸ் எத்ரிப்பு நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது.

அதற்கு இங்குள்ள தேர்தலில் திமுக எதிர்ப்புதான் பேசவேண்டும். எப்போது சோனியா வருவது உறுதியானதோ, எப்போது கருணாநிதி எதிர்ப்பு என்று எல்லோரும் நம்பிய ராகுல் வருவது உறுதியானதோ, அதற்கு பிறகுதான் இந்த கோவை கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனால்தான் கடைசிநேரத்தில் அதிக கால அவகாசம் இல்லாமலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் கோவை கோட்டத்திற்கு வந்த தலிவர்களுக்கு நன்றி என்று ஜெயலலிதா அங்கெ பேசினார். சோனியாவும், ராகுலும் கருணாநிதியின் தேர்தல் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று எல்லோரும் சொல்லிவரும்போது அப்படி நடந்தாலும் லாபம்தான் என்று எண்ணியிருந்த ஜெயலலிதா, அவர்கள் இருவரும் வருவது உறுதியானவுடன் அவசர,அவசரமாக கோவையில் கூட்டணிகட்சி தலிவர்களின் கூட்டம் என்று அறிவித்தார். அதை பயன்படுத்தி ஒரு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியை கட்டுவதற்கான முஸ்தீபை தொடங்கி வைத்துள்ளார்.

இப்போது இந்த காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியில் இடது சாரிகளும் இருப்பதால், அது ஒரு பிஜேபி எதிர்ப்பு முன்னணியாகவும் ஆகிவிட்டது. அதாவது காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் என்ற அகில இந்திய அளவிலான முன்னணிக்கு விதை போட்டு விட்டது. அத்தகைய முன்னணி நிச்சயமாக இடதுசாரிகளையும், முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் தன்னகத்தே இழுத்து கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி ஒரு முன்னநிதானே விபிசிங்கால் தொடங்கப்பட்டது? அதற்கு பெயர் தேசிய முன்னணிதானே? அந்த முன்னணியை தொடங்கியது சென்னையில்தானே? அதற்கு கலைஞர்தானே அடிக்கல் நாட்டினார்? அந்த முன்னணி காங்கிரசை இந்தியாவிலிருந்து விரட்ட ஏற்பட்டதுதானே? அந்த காங்கிரசுடன் இப்போது கலைஞர் பிரிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் உறவுடன் கலந்து விட்டாரே?

அதனால்தான் அம்மையார் அந்த அரசியல் தந்திரத்தை கையில் எடுத்து விட்டாரா? காங்கிரஸ் கட்சி இன்று அகில இந்திய அளவில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களுக்கு வீடு கட்டும் ஆதர்ஷ் ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல் என்று சஈக்யதொடு மட்டுமின்றி, திமுக என்ற பங்காளி மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் சிக்கியுள்ளது என்பதால் நாடு தழுவிய ஒரு பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அந்த எதிர்ப்பை பயன்படுத்தி மாற்று ஒன்றை ஏற்படுத்த வலு இல்லாத நிலையில்தான் பிஜேபி.யும் இருக்கிறது. அதனால் ஒரு சரியான மாற்று இந்திய நாட்டிற்கு தேவைப்படுகிறது.

அத்தகைய சூழலில்தான் இந்த புதிய முயற்சி செய்யப்படுகிறது. நீங்கள் அந்த ம்மையாரின் செயலுக்கு தேவையில்லாமல் வக்காலத்து வாங்க பார்கிறீர்கள் என்றும் சிலர் நம்மை கேலி செய்யலாம். அவர்கள் வரலாற்றை மறந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் சல்வி.ஜெயலலிதா கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு முயற்ச்சியை செய்துவருகிறார்.அதுதான் அவர் அவ்வப்போது, சந்திரபாபு நாயுடு கட்சி தலைவர்களுடனும், சரத் யாதவ் போன்ற ஐக்கிய ஜனதா தலைவர்களுடனும், அஜித்சிங் போன்ற தலிவர்களுடனும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள். அதாவது இந்த தலிவர்கள் போயஸ் தோட்டம் வந்திருந்து பேசினார்கள் என்பது முக்கியமான செய்தி.

ஆகவே இந்த மீண்டும் ஒரு தேசிய முன்னணி என்பது பகிரங்கமாக அறிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அதை நுகர்ந்து கொள்ளும் சிறுபான்மை சமூகமும், இடது சாரி சிதனைகளும், மதச்ச்கார்பற்ற சக்திகளும், ஜெயலலிதா அம்மையார் அணிக்கு வாக்களிக்க முன்வருவார்கள். அதுவே இன்றைய ஊழல் எதிர்ப்பு அலைவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment