Saturday, April 9, 2011

அன்னா ஹசாரே பின்னால் மக்கள் திரண்டதால்,........

ஊழலை எதிர்க்கும் அரசியல் ஆட்டத்தை ஊழலை எதிர்க்கும் மக்கள் பங்களிப்புடன் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிடைத்த வெற்றிதான், இன்று மத்திய அரசு இறங்கி வந்து வரைவு நகல் தயாரிப்பு குழுவில் பாதி விழுக்காடு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் என ஒப்புக்கொண்டது. அது காந்தியவாதி அண்ணாவிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல அவருக்கு பின்னால் திரண்ட இந்திய மக்களது மாபெரும் வெற்றி. உலக கோப்பையை இந்தியா மட்டைப்பந்து ஆட்டத்தில் பெற்றதைவிட, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் களவாண்ட அரசியல்வாதிகாய் கைது செய்வதற்கான ஒரு சட்டத்தை உருவாக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு பெரும் வெற்றிதான்.

அன்னா ஹசாரே நல்லவரா? கெட்டவரா? என்று பட்டிமன்றம் நடத்த சென்னையில் ஒரு ஹன்டேயும், மும்பையில் ஒரு சரத் பவரும் முயலலாம். ஆனால் இந்திய மக்களை பொறுத்தவரை நம்மை பொறுத்தவரை அவர் இப்போது எடுத்த கோரிக்கையும், அதை நிறைவேற்ற எடுத்த போராட்ட முறையும் பொதுமக்களை ஈர்த்தது: பல்லாயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில், பங்கு கொள்ள வைத்தது. போராட வைத்தது. இதே நிலை தொடருமானால் அடுத்து சிறை நிரப்பும் போராட்டம் என்றும், கைதுகளுக்கு அஞ்சவில்லை என்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அறிவித்து ஆனாவுடன் நின்றது ஆள்வோரை ஆட்டிவிட்டது.


நமது சென்னையில் கூட காந்தி சிலை அருகே இரவிலும் நூற்றுக்கணக்கில் கூடிய நடுத்தரவர்க்கத்தார் காவல் துறை கைது செய்வோம் ன்று பயமுறுத்திய போது, பயப்படாமல் கைதாக தயார் என்று கூறியதே அதுதான் ஒரு மக்கள் புரட்சிக்கான சூழல் கணிந்து உள்ளது என்பதை காட்டியது. அதுதான் ஆள்வோரை அஞ்ச வைத்து அடிபணிய செய்துள்ளது. எத்தனை நாள்தான் லிபியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மக்கள் எழுச்சியை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்று நமது நடுத்தர வர்க்கம் எண்ணிவிட்டது போலும்.

மக்கள் சார்புடன், மக்கள் பங்களிப்புடன் ஒரு சட்டத்தை எழுதுவது என்பது சொல்வதற்கு எளிது. ஆனால் இன்றுதான் அதற்கு ஆள்வோறது அனுமதி கிடைத்துள்ளது. உச்சகட்ட ஊழலை இந்திய ஆள்வோர் செய்த பிறப்பது அதைகண்டு மக்கள் கோபம் கொண்டு கொத்தித்த பிற்பாடு இது நடந்துள்ளது. அவர்கள்தான் ஜெயபிரகாஷ் நாராயணனின் முழு புரட்சியின் வேகத்தை பார்த்தவர்கள் ஆயிற்றே?
அதனால் சாதுர்யமாக ஒரு மக்கள் புரட்சியை தவிர்த்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment