Thursday, April 14, 2011

தங்கபாலு முகமா? முகமூடியா?

ஜெயந்தி தங்கபாலு, அதாவது தங்கபாலுவின் மனைவி தன்னிடம் தயாள சீட்டு இருந்தாலும் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி,வாக்கு சாவடி முன்பே ஊடகங்களிடம் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஏன் அவரது பெயர் விடுபட்டது? எப்படி விடுபட்டது? தங்கபாலு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர். அவரது மனைவி சாதாரண குடும்ப பெண் என்பதல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலிருந்து முடிவு செய்யப்ப்பட்ட வேட்பாளர் பட்டியலில், சென்னையில் மயிலாப்பூர் என்ற பிரபல தொகுதிக்காக கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர். அந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியில் பலர் வேட்பாளராக முயற்சித்தனர். முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் வாசன் கோஷ்டியில் சேர்ந்து ம்ய்லாவ்ரே வேட்பாளராக முயற்சித்தார். சிதம்பரம் கோஷ்டியில் சேர்ந்த கராத்தே தியாகராஜன் தனக்கு தான் மயிலாப்பூர் தொகுதி வந்து சேரும் என்று சிதம்பரத்தை நம்பி எதிர்பார்த்திருந்தார். அதற்கான வேலைகளையும் செய்ய தொடங்கிவிட்டார். ஆர்.வெங்கட்ராமன் என்ற முன்னாள் குடியரசு தலைவரின் பேத்தி தங்களது பாரம்பர்ய இடமான மயிலாப்பூர் தொகுதியை ராகுல் மூலம் கேட்டாராம். கொட்டிவாக்கம் ரவி என்பவர் தான் மீனவர் என்பதால் இந்த தொகுதியில் அதிகமாக உள்ள மீனவர்கலஹு பிரதிநிதியாக தனக்கு தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று ராகுலிடம் கேட்டிருந்தாராம்.

மேற்கண்ட அனைவருக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டு தனக்கு வேண்டிய குலாம் நபி ஆசாத் மூலம் தனது மனைவிக்கு இந்த தொகுதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வாங்கினாராம். அதுவும் கூட தங்கபளுவிற்கு வாங்க முடியாது காங்கிரஸ் கட்சியின் புரிதல்படி மாநில தலைவர் மாநிலம் எங்கும் இறங்கி தேர்தல் பணி செய்யவேண்டும் என்றும் அதனால் தங்கபாலுவின் மனைவிக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள் என்ற வரத்து வேண்டுகோள் ஆசாத் மூலமாக அகில இந்திய தலைமையிடம் எடுபட்டது என்றும் கூறினார்கள்.
அவ்வாறு ஜெயந்தி தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளராக ம்ய்லபோருக்கு அறிவிக்கப்பட்டவுடன், அதுவரை தன்னை வேட்பாளராக அர்விப்பார்கள் என்று எதிர்பார்த்த கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களிடம் குமுற, அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கபாலுவின் வீடு, காங்கிரஸ் கட்சியின்
தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமும், தங்கபாலு கொடும்பை எரிப்பும் செய்தனர். அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான மங்கள்ராஜ் அறிவிக்கப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வமான வேட்பாளர் ஜெயந்தி தங்கபளுவிர்காக பணியாற்ற தொடங்கினார். இவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்.ஆனாலும் தங்கபாலு கோஷ்டியின் வேட்பாளருக்காக இறங்கினார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்தது. ஜெயந்தி தங்கபாலு தனது வேட்புமனுவுடன் வட்டாட்சியர் அலுவலகம் வர, கராத்தே ஆட்கள் வெளியே கலவரம் செய்ய, மங்கள்ராஜ் கட்சி விசுவாசத்துடன் ஜெயந்திக்கான வேட்புமனுவிற்கு, சாட்சி கையெழுத்திட வந்து சேர்ந்தார். அப்போது ஜெயந்தி கொடுத்த வேட்புமனு பிரதிகள் வழமையாக கொடுக்க வேண்டிய நான்கு தாள்களாக இல்லாமல், இரண்டு தாள்கள்தான் இருந்தன என்று இப்போதும் மங்கள்ராஜ் கூறுகிறார்.அப்போது ஜெயந்தி கையெழுத்து போடாத ஒரு தாளில்கூட மங்கள்ராஜ் ஐத்து சொல்லி கையெழுத்து போடவைத்துளார். வழமையாக மாற்று வேட்பாளராக மாவட்ட தலைவர் மனு செய்வார் என்ற பழக்கப்படி மங்கள்ராஜ், தங்கபாளுவிடம் வினவ, அவர் நானே போட்டுவிடுகிரேனே மாற்று வேட்பாளராக என்று கூறியதை பெரிதாக அன்று எண்ணாமல் மங்கள்ராஜ் சரி என்று கூறிவிட்டார்.

ஆனால் பிறகு நடந்த கதை மன்கராஜை சிந்திக்க வைத்து விட்டது.ஜெயந்தி தங்கபாலு முன்வைத்த வேட்புமனு தாள்களில், முன்வைக்க வேண்டிய நான்கு தாள்களில் இரண்டை மட்டுமே முன்வைத்தார். அதனால் மார்ச் இருபத்தேழாம் நாள் இரவில் வட்டாட்சியர் அழைப்பு ஜெயந்தியிடம் ஒரு கைஎழ்குத்துடன் எதையோ அறிவ்த்தது என்கிறார் மங்கள்ராஜ். அதுதான் அடுத்த நாள் ஜெயந்தியின் வேட்புமனு செல்லுபடி ஆகவில்லை என்றும் மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் வேட்புமனு ஏற்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதே இது ஒரு சதி என்றும் ஒரு குற்றவாளியான தங்கபாலுவிற்கு வேலை செய்ய முடியாது என்றும் மாவட்ட தலிவர் மங்கள்ராஜ் முடிவு செய்துள்ளார். அதை காரணமாக வைத்து இப்போது தேர்தலுக்கு மறுநாள், மாநில தலிவர் தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டியான கராத்தே தியாகராஜனையும், வாசன் கோஷ்டியான எஸ்.வி.சேகரையும், ஈ.வி.கே.எஸ்.இலன்கோவம் கோஷ்டியான மங்கள்ராஜ் அவர்களையும் கட்சியிலிருந்து மாநில தலிவர் தங்கபாலு விலக்கிவிட்டார்.

இப்போது மங்கள்ராஜ் கூறும்த்கவல்கள் அதிர்ச்சியாக இருகின்றன. 25 ---10 --2010 இல் வெளியிடப்பட்ட கடைசி வாக்காளர் பட்டியலில் தங்கபாலுவின் பெயரும், தங்கபாலு மனைவி ஜெயந்தி பெயரும் இல்லை என்கிறார் மங்கள்ராஜ். அதற்கு பிறகு தங்கபாலு பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை என்கிறார்.இப்போது ஜெயந்தி பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதும், தங்கபாலு பெயர் ஒருக்கிறது என்பதும் தங்கபாலுவிற்கு தெரியாமல் நடக்காது என்கிறார் அவர். அதன்மூலம் ஜெயந்திக்கு எதிராக, அதாவது தனது மனைவிக்கு எத்ரிராக தங்கபாலு செய்த சதி இதில் தெரிகிறது என்கயார் அவர். அது மட்டுமல்ல. தங்கபாலுவின் மகன், மகள் ஆகிய இருவர் பெயரும் இரண்டு இடங்களில், இரண்டு வேவீறு முகவரிகளில் இருக்கிறது என்றும் அவர் ஆதாரம் தருகிறார்.

தங்கபாலு மகள் இந்திரா பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியில் இருக்கிறது. ஒன்று பாகம் எண் 107 இல், வரிசை எண் 413 இல் இருக்கிறது. அதே முகவரியான 32 /12 கஸ்தூரிபாய் நகரில்,இரண்டாவது முக்கிய சாலையில், அந்த எண்ணையே 32 / A -12 என்ற முகவரியில் தங்கபாலுவின் மகனான கார்த்திக் பெயர் வரிசை எண் 447 இல் இருக்கிறது. அதேபோல இந்திரா பெயர் இன்னொரு முகவரியான கஸ்தூரிபாய் நகர் ஆறாவது முக்கிய சாலையில் 108 வது பாகத்தில், வரிசை எண் 604 இல் 12 / 16 என்ற வீட்டு என்னில் இருக்கிறது. அதே எண்ணில் 24 /120 என்ற முகவரியில் வரிசை எண் 644 இல் தங்கபாலுவின் மகன் கார்த்திக் பெயர் இருக்கிறது. அதாவது தங்கபாலுவின் மகனும், மகளும் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இறக்கிறார்கள். இதுவே பெரிய குற்றம். ஆனால் அவரது மனைவி பெயரை மட்டும் வாக்காளர் பாட்டிலில் இருந்து தங்கபாலு நீக்க வைத்துள்ளார். ஒருபுறம் அன்னை சோனியாவிற்கும் துரோகம், இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்திற்கும் துரோகம், அனைத்தியு விட தனது மனைவிக்கே துரோகம் செய்ஹ்டுள்ளார் எங்கள் மாநில தலைவர் என்று மங்கள்ராஜ் கொந்தளிக்கிறார்.

No comments:

Post a Comment