Monday, May 2, 2011

பேராசிரியர் சரஸ்வதி கைது.

ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாம் என்றபெயரில் ஒரு கொடுஞ்சிறைக்குள், தமிழக அரசு வைத்து பூட்டியுள்ளது. அந்த ஈழ அகதிகள் சிறிய, சிறிய குற்றங்கள் சாட்டப்பட்டு, அதற்கான நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து செல்லப்படுபவர்கள். அவர்கள் தொடர்ந்து தாங்கள் தங்களது குடும்பங்களுடன் சேர்ந்து இருக்க முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் தங்களது வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்றும் பல முறை தமிழக முதல்வர் கலைஞரிடம் முறையிட்டு விட்டனர். ஈவிறக்கம் இல்லாத தமிழக அரசு, அவர்களை தேவையிலாமல் விசாரணை காலத்திற்கும் பிணையில் விட மறுத்து, சிறப்பு அகதிகள் முகாம் என்ற பெயரில் பூன்னமல்லீ சிறையில் வைத்துள்ளார்கள்.

பல முறை தங்களது பிணை விடுதலைக்காக அவர்கள் பட்டினி போர் நடத்தியும் கூட, தனக்கு உள்ள புலிகள் மீதான வெறுப்பை மனதில் கொண்டு தமிழக முதல்வர் அவர்களது பிணை விடுதலைக்கு கூட இணங்கவில்லை. ஏற்கனவே ராஜிவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்கள், இதே பூந்தமல்லி சிறையில் அதாவது சிறப்பு சிறையில் தனிமைசிறையில்வைக்கப்பட்டிருந்த போது, உச்சநீதிமன்றம் அதை எதிர்த்து கருத்து சொன்னது. விசாரண காலத்தில் ஏதோ கடும் தண்டனை கைதி போல அவர்களை, பூந்தமல்லி சிறையில் தனிமை சிறையில் வைக்க கூடாது என்றது.

அதே சிறைக்கூடம்தான் இப்போது இந்த சிறிய விசாரணை கைதிகளுக்கு அடைக்கப்படும் இடமாக அமைந்திருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறலை தமிழக முதல்வர் சர்வ சாதரணமாக செய்து வருகிறார். இதை எதிர்த்து தங்களை பிணை விடுதலை செய்ய கோரி அந்த ஈழ தேச தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சோறு, தண்ணி இல்லாமல் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். இதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய கோரியும், தமிழ் உணர்வாளர்கள் நடத்திய பட்டினி போரில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர், பேரா. சரஸ்வதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பட்டினி போரில் இன்று முப்பது தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறிய தமிழக காவல்துறையினர், அவர்களை குமணன் சாவடி அருகே, பூந்தமல்லி சிறை முன்பு கைது செய்து அங்குள்ள " பூந்தமல்லி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில்" அடைத்து வைத்துள்ளனர். இதை கண்டித்தும், அகதிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தந்திகள் அனுப்ப உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment