Monday, May 2, 2011

ஒசாமாவை கொல்ல சொன்னது ஒபாமாவின் அரசியலா?

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நள்ளிரவில் நடந்த அமெரிக்காவின் அதிரடிப் படை தாக்குதல் வெற்றி. இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி என்கிறது அமெரிக்கா. பின்லேடன் ஆப்கானிஸ்தான் காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழவதாக அமெரிக்க கூறிவந்தது பொய்யா? உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதி என்று ஒரு பிம்பத்தை அமெரிக்கா பின் லேடனுக்கு உருவாக்கி கொடுத்திருந்தது. அதனால்தான் அவர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கிறார் என்று வசனம் எழுதினார்கள்.

இப்போது அப்படி கூறியது ஒரு " கண் துடிப்பா" என்ற விவாதம் துவங்கியுள்ளது. இப்போது ஒசாமா பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தின் அருகே உள்ள இடத்திலேயே வாழ்ந்தார் என்றும், சுட்டு கொல்லப்பட்டார் என்றும் அமெரிக்க கூறுகிறது. எண்ணூறு மீட்டர் தூரத்தில் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் பாகிஸ்தான் ராணுவம்தான் அந்த இடத்தில் அவரை வைத்து பாதுகாத்து வந்ததா? பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அமெரிக்க இந்த ராணுவ நடவடிக்கையை எடுத்ததாம். யார் காதில் யார் பூ வைக்க இருக்கிறார்கள்?

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கூறுகிறார்: பாகிஸ்தான் இந்த ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து என்று.அப்படியானால் இது அமெரிக்காவும், பாகிஸ்தானும் சேர்ந்து நடத்திய தாக்குதலா? திடீரென பாகிஸ்தானில் தலைநகர் அருகே அதுவும், ராணுவ தலைமையகம் அருகே அமெரிக்கா வந்து ஒரு நள்ளிரவு தாக்குதலை நடத்துமாம், பாக். அரசுக்கு தெரியாமலே, பாக். ராணுவத்திற்கு தெரியாமலே அது நடக்குமாம். பாக். ராணுவம் தலையிடாமல் அந்த நடவடிக்கை வெற்றி அடையுமாம். எல்லோரும் நம்பவேண்டும்.

ஏப்ரல் 29 ஆம் நாளே அமெரிக்க அதிபர் ஒபமா கையெழுத்திட்ட நடவடிக்கை இது. என்ன நடவடிக்கை? ஒசாமாவை கைது செய்ய, உயிரோடு பிடித்துவர நடவடிக்கை இல்லை. " கொலை செய்ய" நடவடிக்கையில் கைஎழுத்திட்டாராம். ஏன் அவரை உயிரோடு பிடிக்க முயலவில்லை? அவர் இறந்ததும் ஏன் அவரது உடலை உலக மக்களுக்கு காட்டவில்லை? ஏன் அவசர,அவசரமாக ஒசாமா உடலை டி.ஏன்.ஏ. செய்தார்கள்? அபப்டி டி.ஏன்.ஏ. வை சில மணி நேரத்திற்குள் செய்யமுடியாது என்று நமது " தடவியல் நிபுணர் சந்திரசேகர்" கூறுகிறாரே? அப்படியானால் அதுவும் உணமையில்லையா? ஏன் அவரது உடலை ஆப்கான் கொண்டுசென்று கடலில் புதைக்க வேண்டும்?

ஒசாமா உண்மையில் அங்கே இருந்திருந்திருந்தால், அவர்தான் உலக பயங்கரவாதி என்பது உண்மையானால், அவரை உயிரோடு பிடிக்க முயலவேண்டும். அல்லது அவரது உடலை உலக நாடுகளுக்கும், ஊடகங்களுக்கும் காட்டவேண்டும். அவற்றையெல்லாம் செய்யாத அமெரிக்கா அவசர,அவசரமாக ஏன் இத்தனை காரியங்களை செய்யவேண்டும்? ஓசமா உண்மையில் உயிரோடு இருந்தாரா? இல்லை. இயற்கையாக இறந்துவிட்டார் ஏற்கனவே என்று அமெரிக்காவுக்கு தெரியுமா? அதனால்தான் இப்படி ஒரு நாடகமா? அதன்மூலம் ஒபாமாவிற்கு புதிய புகழ் வரவேண்டுமா?

ஓசம்மா தான் கொல்லப்பட்டவர் என்றால், அவர் ஏன் தனது மாபெரும் பயங்கரவாத அமைப்பை விட்டுவிட்டு தனியே தங்க வேண்டும்? அவர் ஏற்கனவே தனக்கு பின்னால் ஒரு தலைமையை ஏற்படுத்திவிட்டு, வயதான காலத்தில் தனக்கு ஒய்வு வேண்டும் என்று பாகிஸ்தான் பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தாரா? அது அமெரிக்காவிற்கு தெரிந்தும்செத்தபாம்பைஅடிப்பதுபோலஒருநடவடிகையா? 'உலகவணிகமைய"தாக்குதலை அமெரிக்காவில் நடத்தியதற்கு மூளையாக இருந்தவர் என்று கருதப்படுவதாக ஊடகங்கள் சொல்கின்றனவே? அதுவும் உறுதி செய்யப்படாததுதானா?

இத்தனை சந்தேகம் நமக்கு ஏன் வருகிறது? ஒருபுறம் டிஸ்கவரி அலைவரிசையில் ஈராக்கில் நடந்த அமெரிக்க சேட்டைகள் முழுவதும் நாடகம்தான் என்று போட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததனால் வந்ததா? ஈராக்கில் "பேரழிவு ஆயுதங்கள் இருந்தன" என்பது முழுபொய் என்று இப்போது பிரான்ஸ் நாட்டு சார்பாகவும், ஐ.நாவில் காலின் பவுல் சொன்னது பூரா போய் என்றும் இப்போது டிஸ்கவரி அலைவரிசை அமபலப்படுத்துகிறதே? அதுபோல இந்த ஒசாமா கொலையும் பின் ஒருநாள் வெளியாகுமா?

எது எப்படியோ. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒபாமாவிற்கு அமெரிக்காவில் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் எதிர் கட்சி செல்வாக்கு கூடிவருகிறது. அமெரிக்க செனட்டிலும் ஆதரவு குறைந்து வருகிறது. இப்போது ஏதாவது நாடகம் நடத்தி, தனது செல்வாக்கய் கூட்டிக்கொள்ள வேண்டும். இது அமெரிக்க அதிபருக்கு இருக்கும் கட்டாய சூழல். அதற்கு அமெரிக்கக் மக்களது நாடி, நரம்புகளை ஆராய்ந்தால், " பயங்கரவாத எதிர்ப்பு உணர்வு" அங்கே செல்வாக்கு செலுத்துகிறது. அதை இந்த கருப்பு புஷ் கையிலெடுக்க வேண்டும். இது ஒபாமாவிற்கு உள்ள நிர்ப்பந்தம்.

தானே கையெழுத்து போட்டு, மாபெரும் பயங்கரவாதியை, அதுவும் உலக பயங்கரவாதி என்று அமெரிகாவாலேயே அதீதமாக மிகைப்படுத்தப்பட்டவரை, அழித்தொழித்தார் என்ற பெரிய புகழ் சாதாரணமாக கிடைக்குமா? அவரை அதாவது அப்படி ஒரு பயங்கரவாதியை ஆப்கான் காடுகளில் போய் அழிப்பது எளிதாக சாத்தியமில்லை. அதனால்தான் அவரை பாகிஸ்தான் நகர் பகுதியில் தயார் செய்தார்களா? எப்படியானாலும் அமெரிக்க மக்களது பெரும்பான்மை ஆதரவை இன்று ஒபமா பெற்றுவிட்டார். அவருக்கும், அவரது அரசியலுக்கும் ஒரு மாபெரும் வெற்றி.

No comments:

Post a Comment