கழகம் ஒரு குடும்பம் என்றார் தலைவர். குடும்பமே கழகம் என்றார் பின்னால். குடும்பத்திற்குள்ளும், கோடலிக்காம்பு இருக்கும் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு அத்ஜை அடையாளம் கண்டுகொண்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். முழுமையாக வனுக எண்ணம் கொண்டவர்கள், திமுக விற்கு பொருந்துமா? திமுக கொள்கை சார்ந்த கட்சியாக இருக்க விரும்பினால், வணிகர்கள் கைக்கு அதை போகவிடலாமா? இது போன்ற கேள்விகளை திமுக வின் நண்பர்கள் சிலர் எழுப்பிக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த நண்பர்கள் எல்லோரும் " தமிழ் மையம்" அமைப்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை அடையாளம் கண்டு கொண்டது வணிக கும்பல். அதற்கு பிறகும் அவர்களது பின்னணிகளை தோண்ட மாட்டார்களா?
தனக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய ஆளும் கும்பலின் தலைமைப் பீடமான " சோனியா" கும்பலை கையில் போட்டு செயல்படாதா வணிக கும்பல்? அதுதான் "ஸ்பெக்ட்ரம் ஊழல்" வெளியே வார, அதை வைத்து வணிகர்களின் எதிரிகள் உள்ளே செல்ல, வழி எளிதாகி விட்டதாக வணிகர்கள் நினைத்தால், அதையும் தடுக்க ஒரு " குடும்பத் தலைவர்" இருக்கிறாரே? சரி. நமக்கு இனி திமுக சரிப்பட்டு வராது என்று எண்ணிய வணிக கும்பல், தங்களுக்கும், திமுக தலைமைக்கும் உள்ள முரண்பாட்டை, சண்டையை, பகையை பகிரங்கப் படுத்த நேரம் வந்துவிட்டது என்று இப்போது எண்ணுகிறார்கள். அதனால்தான் ஒரு முக்கிய " ரகசிய செய்தியை" இந்த நேரத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இன்று காலையில் வெளியிட்டு விட்டார்கள்.
இன்று காலை வணிகர்களில் இளையவர் பெண் எடுத்த வீட்டிலிருந்து வெளிவரும் அந்த " ஆங்கில பிரபல நாளேட்டில்" தங்களுக்கும், " குடும்பத் தலைவருக்கும்" உள்ள முரண்பாட்டை வெளியிட்டுவிட்டார்கள். அதாவது இன்று காலை ஆங்கில ஏடான " தி ஹிந்து" வில் முதல் பக்கத்திலேயே அந்த " அதிர்ச்சி" செய்தி. அடுத்து உள் பக்கத்தில் அடுத்த " அதிர்ச்சி" செய்தி. இவை இரண்டும் ஏன் ஒரே நாளில் வெளியிடப்படவேண்டும்? முதல் பக்கச் செய்தி, " தயாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க் தூதராக இந்தியாவில் இருந்த " ஹூபர்" வசம் சொன்ன செய்தி என்று அது வெளியாகி உள்ளது. அதில் " திமுக தலைமை அதிகாரத்திற்கு வந்தவுடன் ஊழல் செய்யத் தொடங்கி விட்டார்கள்" என்று அந்த அமெரிக்க அதிகாரியிடம் தயாநிதி மாறன் கூறியது வெளியாகி உள்ளது.
விக்கி லீக்ஸ் இணைய தளத்திற்கு கசிந்துள்ள இந்த செய்தியை, "தி ஹிந்து" எடுத்து போட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த ஏடு விகிலீக்ஸ் கசிவுகளை பல நாட்களாக வெளியிட்டு வருகிறது. அதில் எல்லாமே அதிர்ச்சி செய்திகள்தான். பல செய்திகள் திட்டமிட்டு அமெரிக்கா தலைமை கசிய விடச் சொல்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த செய்தி, " தயாநிதிக்கு" எதிரான செய்திபோல தோன்றினாலும் எந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது எண்பதை அவித்தே யாருக்கு சாதகமான வெளியீடு என்று கணிக்க வேண்டும். இப்போது திமுக வில் தயாநிதி தனக்கு போட்டியாக டில்லி பிரதிநிதியாக வரும் கனிமொழியையும், ஆ.ராஜாவையும், ஊடகப் போட்டியாக வரும் சரத்குமார் ரெட்டியையும், திகார் சிறைக்குள் தள்ளுவதில் வெற்றி அடைந்துவிட்டார்.அடுத்த டில்லி திமுகஅதிகாரபூர்வமான பிரதிநிதி என்ற பதக்கத்தை பெறவேண்டிய சூழல்.
ஆனால் " தாத்தா" அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாறாக " டி.ஆர்.பாலு" வை அந்த இடத்திற்கு அனுப்பி, ஐ.மு.கூ.வின் இரன்டாவது ஆட்சியில் கூட்டணி கட்சி திமுக சார்பாக " தயாநிதி கிடையாது. பாலுதான்" என்று பதிவு செய்து விட்டார். டில்லியில் இதுவரை " தயா" கிளப்பி வந்த வதந்திகள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டன. திமுக என்றால் ஆங்கிலத்தில் "தயாநிதி மாறன் கழகம்" என்று பலரிடம் டில்லியில் சொல்லி, அதில் தானும், தன் மாமா ஸ்டாலினும்தான் தலைமையில் இருப்போம் என்று உறுதிபட சொல்லிவந்தார். அதற்கு இப்போது அடி விழுந்து விட்டது. அதுவும் நேற்று அதாவது இருபத்தொன்றாம் நாள் காலை கோபாலபுரம் வீட்டிடில் கூடிய உயர் மட்ட தலைவர்களுடன் " குடும்பத் தலைவரை" கலப்பதில் "தயாநிதி"யும் இருந்தார். கனிமொழி கைது விவகாரத்தில் காங்கிரஸ் மீது கலைஞர் எவ்வளவு தூரம் கோபம் கொண்டுள்ளார் எண்பதை தயா நேரடியாக அறிந்துவிட்டார். இனி தனக்கும் டில்லி திமுக தலைமை கிடைக்காது என்றும் அனுமானித்து விட்டார். பாலுவும் ராஜாத்தி குழுதான் என்பது தயாவின் பார்வை.
இனி தான் செள்ளவேர்ந்டிய இடன் சொநிஆவிடம்தான் எபதில் தெளிவாகி விட்டார். அதை தானே பகிரங்கமாக செய்தால், கழகத்தில் உள்ள தனது அணியை கலைக்க முடியாது என்று எண்ணுகிறார். ஆகவே அதை ஒரு வித்தியாசமான முறையில் செய்ய தலைப்பட்டார். தனது " சம்பந்தி" ஏட்டின் மூலம் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் அமெர்க்க அதிகாரியிடம் கூறியதை விகிலீக்ஸ் மூலம் எடுத்த் அந்த "தி ஹிந்து" ஏட்டில் இன்று வெளியிட வைத்தார். அதில் " ராகுல் தலைமைதான்" சரியானது என்று தயா கொர்ரியதும் வெளியாகி உள்ளது. உள்ளே அதை விட மோசமாக, கருணாநிதியை கிழித்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக கலைஞர் எடுக்கும் " அஸ்திரம்" " ஈழத் தமிழர்" பிரச்சனை எனபது காங்கிரசுக்கும், தயாவிற்கும் டேஹ்ரியும். ஆகவே அதுபற்றி தான் கூறிய மொன்ன்றாண்டு முன்னுள்ள கருத்துக்களையும் வெளியிட வகை செய்து ள்ளார்.
அதில் 2008 ஆம் ஆண்டில், அதாவது "வ்ன்னிப் போர்" நடக்கும் போது,கருணாநிதி இருந்த பட்டினிப் ஓர் உட்பட, " நாடாளுமன்ற உறுப்பினர்கள்" ராஜினாமா என்ற இலங்கை தமிழர் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டது அனைத்துமே ஒரு " திசை திருப்பும் நாடகம்" என்று பகிரங்கமாக அந்த அமெரிக்க தூதர் ஹூப்பர் வசம் " தயாநிதி " தெரிவித்தார் என்பது வெளியாகி விட்டது இப்போது கலைஞர் வசமாக மாட்டிக் கொண்டார். அம்பலப்பட்டு உலகத் தமிழர் மத்தியில் நிற்கிறார். " தயாநிதி" இனி அழியும் திமுக வில் தனக்கு வேலை இல்லை என்ற நிலை எடுத்து விட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
entirely correct
அருமையா எழுதறீங்க. கொஞ்சம் எழுத்து பிழைகளையும் பாருங்கள். இது translator செய்கிற தவறுகள் என்று தெரிகிறது. கொஞ்சம் பிழைகளை குறைக்க பாருங்கள். சாதத்தின் இடையில் வரும் கல் போல் படுத்துகிறது!
பாண்டு சொல்வது உண்மை தான்,நீங்கள் சொல்வதும் உண்மை தான்!கொஞ்சம் உங்க சரக்கையும் சேத்து அடிச்சு விட்டிருக்கீங்க!வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு.
Post a Comment