ஒரு பிரபல எழுத்தாளன் உடல் இன்று மாலை ஐந்தரை மணிக்கு மயிலாப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. நக்கீரன் அலுவலகத்தீலிருந்து புறப்பட்ட "இறுதி ஊர்வலத்தில்" , முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இந்நாள் மேயர் மா.சுப்பிரமணியம், தி.க.தலைவர் கி.வீரமணி, மதிமுக மல்லை சத்தியா, நக்கீரன் கோபால், காமராஜ், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெரியார் திக. விடுதலை ராஜேந்திரன், மற்றும் கட்சி எல்லைகளைத் தாண்டி பல பெரியார் தொண்டர்கள், நடந்து வந்தனர். மயிலாப்பூர் இடுகாடு வரை வந்த அனைவரும், சின்னக் குத்தூசியின் " அர்ப்பணிப்பை" பற்றியே பேசிக் கொண்டு வந்தனர்.
ஆண்ட திமுக தலைவரான முதல்வருக்கு மிக, மிக, நெருக்கமாக் இருந்தும்கூட, ஒரு சிறிய துரும்பைக் கூட தனக்காக பெற்றுக் கொள்ளாத பெருந்தகை என்பதையே எல்லோரும் கூறினர். பல ஊடகவியலாளர்கள் அவரது " அறையை" " நூல் நிலையமாகவும்" " ஆவண காப்பகமாகவும்" பாவித்ததை நினைவு கூறினர்.சின்னக் குத்தூசியின் " நினைவாற்றலை" பயன்படுத்தி, அவரிடம் வரலாற்று செய்திகளை கற்றுக் கொண்டவர்கள் அங்கே பரிமாறிக் கொண்டனர். பெரியார் பெருந்தொண்டர் என்று குறுஞ்செய்திகள் அவர் பற்றி பறந்தன. நக்கீரன் இதழ் சார்பாக, இரண்டு வித சுவரொட்டிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தின. " தினமணி", "தினமலர்" ஏடுகளுக்கு பதில் கொடுக்க, அவர்களை " பார்ப்பனர்கள்" என்று திட்டுவதற்கு, கடந்த ஓராண்டாக முதல்வர் கலைஞருக்கு, சின்னக் குத்தூசியின் எழுத்துக்கள் பயன்பட்டன என்றும் அதற்காகவே " முரசொலியில்" அவரது கட்டுரைகள் எழுதப்பட்டன என்றும் ஒரு மொத்த பெரியார் தொண்டர் எடுத்துச் சொன்னார்.
வருகிற மே 29 ஆம் நாள், " மாலை ஐந்தரை மணிக்கு, "பெரியார் திடலில்" சின்னக் குத்தூசிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும், அவ்வமயம் அவரது படத்திறப்பும் நடைபெறும் என்று நக்கீரன் கோபால் அறிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சின்னக் குத்தூசியின் மரணம் வருத்தமளிக்கிறது..
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment