Sunday, May 22, 2011

கலைஞர் வருந்தினால் தாங்காமல் உயிர் நீத்த நண்பர் சின்னகுத்தூசி.

இன்று காலை அந்த மாபெரும் எழுத்தாளர் திடீரென மாரடைப்பு வந்து மறைந்துபோனார். மருத்துவமனையில் ஓராண்டாகவே படுக்கையில் இருந்தாலும், ஒவ்வொரு நாளும், தவறாமல் "முரசொலிக்கு" கட்டுரைகள் எழுதிக் கொண்டே இருந்தார் சின்னக் குத்தூசி அய்யா. அய்யாவின் இயற்பெயர் "தியாகராஜன்" அவர் கலைஞரின் பால்ய கால நண்பர். அவரது ஊர்காரர். கலைஞர் மீதான அவரது ஈடுபாடு அளவற்றது. கலைஞரின் குடும்பத்திலோ, கழகத்திலோ இந்த அளவுக்கு அய்யா சின்னக் குத்தூசி வைத்த அளவுக்கு கலைஞர் மீது பாசத்தை, நேசத்தை, வைத்திருப்பவர் உண்டா என கேள்வியே கேட்கலாம்.


அப்படிப்பட்ட " சின்னக் குத்தூசி" மறந்துவிட்டார். அவர் முரசொலியில், " கொக்கிரகுளம் சுல்தான் முகமது" என்ற பெயரிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, திமுக வின் வரலாற்றை மனதில் கொண்டு, அவர் கலைஞர் எடுக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஆதரித்து எழுதி வந்தவர். கலிஞரின் " பகுத்தறிவு" கொள்கையை கடைசிவரை நம்பி வாழ்ந்துவந்தவர். கலைஞருக்கு யார் கேள்வி எழுப்பினாலும், கலைஞருக்கு யார் பதில் கொடுத்தாலும், சின்னக் குத்தூசி அய்யாவின் எழுத்தாணி அவர்களை, மறுநாளே "முரசொலியில்" பதம் பார்த்துவிடும்.

அந்த " சின்னக் குத்தூசியால்" கலைஞர் இப்போது பெற்ற மாபெரும் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடிகிறதா எண்பதை விட, அந்த தோல்வி கலைஞரை பாதிக்குமோ என்ற கவலை சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். கனிமொழி கைது செய்யப்பட்டது பாதித்திருக்குமா என்பதைவிட, கனிமொழி கைது கலைஞரை பாதித்து விட்டதே என்று, சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். அதுவே அவருக்கு, " மாரடைப்பாக" வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி கலைஞர் மீது " பாசம்" ம்ட்டுமே வைத்திருந்த ஒரு உண்மை நண்பர் சின்னக் குத்தூசி தனக்கு என்று திமுக ஆட்சியிலோ, கலைஞர் குடும்பத்திலோ பெற்றதில்லை.


அவரது எழுத்துக்களை வெளியிட்டு வந்த " நக்கீரன்" ஏடுதான் அவரது வாழ்க்கையை அதாவது உணவு, மருத்துவ செலவு என்ற அடிப்படை தேவைகளுக்கு பார்த்துக் கொண்டது. இப்போது அவரது உடலையும் நக்கீரன் அலுவலகம்தான் தாங்கி வருகிறது. திருமணம் செய்து கொள்ளாத சின்னக் குத்தூசி, ஒரு சிறிய அறையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். அவரை பல, பல ஊடகவியலாளர்கள் சென்று எப்போதும் சந்தித்து பல செய்திகளை கேட்டவண்ணம் இருப்பார்கள். பல ஊடகவியலாளர்களுக்கு வரத்தான் ஆசான் என்றால் சரியாக இருக்கும். தனது அறையில் எப்போதுமே பல பத்தாண்டுகளாக வெளிவந்த "செய்திகளை" ஆவண காப்பகம் போல வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்து நிறைய பேருக்கு வரலாற்றை புள்ளி விவரத்துடன் கொடுப்பார்.

அந்த "சின்னக் குத்தூசி" ஒருமுறை கலைஞருடன் சிறிய மாறுபாடு கொண்டபோது, கோபத்தில் கலிஞர் அவரி வராதே என்று கூறிவிட்டாராம். அது நண்பர்களுக்குள் நடக்கக் கூடிய ஒரு ஊடல்தான். ஆனால் அதை வெளிப்படுத்திய கலிஞர் என்ன சொன்னாராம் தெரியுமா? அந்த "பாப்பானை" என்று திட்டினாராம். ஆமாம், சின்னக் குத்தூசி பிறந்தது பார்ப்பனக் குடும்பத்தில்தான். ஆனால் அவர் அந்த குடும்பத்துடன் வாழாமல் தன்னை கலைஞரது அரசியலுக்காக, அதாவது கலைஞரின் " பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்காக" அர்ப்பணித்துக் கொண்டவர். அப்படிப்பட்டவரை இப்படி திட்ட யாரால் முடியும். கலைஞர் கோடுள்ள " மனப்பான்மையால்" மட்டுமே முடியும்.

2 comments:

குணசேகரன்... said...

Actually i thought to wrote today topic"சின்னக் குத்தூசி"..but u did..nice post...

N.H. Narasimma Prasad said...

இவரை பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அய்யாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Post a Comment