தயாநிதியைப் பொறுத்தவரை, ஆ.ராஜாவை உள்ளே தள்ளியாச்சு. அரசியல் போட்டியாக தாத்தாவால் கொண்டுவரப்பட்ட கனிமொழியையு, உள்ளே தள்ளியாச்சு. சோனியா வகையராக்களிடமும், நற்பெயர் எடுத்தாச்சு. திமுக வின் ஆங்கில அர்த்தமே, "தயாநிதி முன்னேற்ற கழகம்" என்று தான் காங்கிரஸ்காரர்களிடம் கூறியதையும் வலுப்படுத்தியாச்சு. கோபப்பட்ட தாத்தாவிற்கு மனம் மகிழ, "ஹெட்லைன்ஸ் டுடே" யில் கருத்துக் கணிப்பு என்ற பெயரல் பொய்யையும் வெளியிட்டாச்சு. இனி எல்லாமே தான்தான் என்று இருக்கும் போது, இந்த "சீ.என்.என்.--ஐ.பி.என். தனது வெளியீட்டில் அடுத்து வரும் "ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில்" தயாநிதி பெயரும் வர இருக்கிறது என்று போடுவது கண்டு தயாநிதி கோபப்பட்டாராம்.
அந்த காட்சி ஊடக பொறுப்பாளரிடம், தொலைபேசி, திட்டினாராம். எஸ்.சீ.வி. யில் சீ.என்.என். ஐ காட்டமாட்டோம் என்றாராம். அவரும் வெட்டிவிடுங்கள், நாங்களும் உங்கள் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன எண்பதை வெளியிடுகிறோம் என்றாராம். இப்போது திமுக தலைவர் தனது மகள் கைது ஆனபின்பு, அதிக மனவருத்தத்தில் இருக்கும்போது, ஐ.மு.கூ. அரசின் ஆண்டு விழாவிற்கு யார் போவது அல்லது போகாமலிருப்பது என்று முடிவு செய்வதற்கான "ஆலோசனை" கலைஞர் வீட்டில் நடந்தது. அதில் தாவும், ஸ்டாலினும் எதிர்பார்த்தது போல, " தயாநிதி மாறன் ஐ.மு.கூ. ஆண்டு விழாவிற்கு செல்லேண்டும்" என்ற கருத்து எடுபடவில்லை.
காங்கிரஸ் செய்த "துரோகம்" விவாதிக்கப் பட்டது. அதனால் ஐ.மு.கூ. அரசின் ஆண்டுவிழாவிற்கு திமுக சார்பாக யாரும் செல்லக் கூடாது என்று கலைஞருக்கு சார்பான கருத்துக்கள் வந்தன. தயாவும்,ஸ்டாலினும் வற்புறுத்தி, காங்கிரசை இந்த நேரத்தில் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசனை கூறிய பிறகு, குடும்பத் தலைவர் செவி மடுக்கிறார். ஒரு பிரதிநிதியை திமுக, ஐமுகூ ஆண்டுவிழாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகிறது. தன்னை அனுப்புவார்கள் என்று தயா எதிர்பார்க்கிறார். அதன்மூலம் தனது கனவை நனவாக்கலாம் என்று எண்ணுகிறார்.
ஆனால் "குடும்பத் தலைவருக்கு" அந்த சூழ்ச்சியும் தெரியும். ஆகவே கழகத்தின் ஒரே பிரதிநிதியாக, டி.ஆர்.பாலுவை அனுப்ப முடிவு செய்கிறார். அதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார். டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக கட்சித் தலைவர் என்ற கோதாவில் சென்று கலந்து கொள்ளட்டும் என்கிறார். மாட்டார் திமுக மத்திய அமைச்சர்கள் எல்லோரும் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கிறார். தான் டில்லி சென்று கனிமொழியை சிறையில் பார்க்க கழகத்த்தலைவர் விரும்புகிறார். அதற்கான பயணம், திங்கள் கிழமை என்கிறார். அப்போது சோனியாவை சந்திக்க மாட்டேன் என்கிறார்.
சோனியா தான் சீ.பி.ஐ. மூலம் தனது குடும்ப உறுப்பினர்கள் மேல் கைதுகளை ஏவி விடுபவர் என்ற உண்மை, கழகத்தளைவருக்கு தெரியும். அதேநேரம் கூட்டணியில் குழப்பமில்லை என்று கூறுவதும் அவருக்கு தெரியும். அதே பாணியை தானும் எடுத்து இந்த முடிவை எடுக்கிறார். சோனியாவிற்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உதவி செய்துவருபவர் தயாநிதிதான் என்பதும் கலைஞருக்கு தெரியும். இப்போது " தயாநிதியால் பாதிக்கப்பட்ட டாட்டா, தனது ஆட்களை உள்ளே அனுப்பிய தயாநிதியையும் உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்வதும் தாயாவிற்கு தெரியும். இப்ப எப்புடி இருக்குது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment