Sunday, June 12, 2011

கலைஞர் துப்பிய கோழை எச்சம்.

கொள்கை பரப்பு செயலாளரை சிறையில் தள்ளினார்கள். தலைவர் செயற்குழுவை கூட்டினார். கொ.ப.செ.க்கு ஆதரவு கொடுத்தார். சிறைக்கு அனுப்பியவர்கள் மீது தலைபருக்கு கோபம் வரவில்லை. பிறகு மாடியில் மனைவியையும், மகளையும் விசாரித்துக் கொண்டே அவர்கள் " தொகுதி பேரம்" பேசினார்கள். கேட்டதை விட்டுக்கொடுத்த தலைவருக்கு கோபம் வரவில்லை. ஆத்து மகளை சிறையில் தள்ளினர். தலைவர் அழுதார். ஆனால் சிறையில் தள்ளியவர்கள் மீது தலைவருக்கு கோபம் வரவில்லை. தொடர்ந்து மகளுக்கு " பிணையை மறுத்தார்கள்". தலைவருக்கு கோபம் வந்து விட்டது என்று தொண்டர்கள் நினைத்தார்கள்.


தலைவர் " உயர் மட்டக் குழுவை" கூட்டினார். இதுவரை தானே முடிவு எடுக்க முடியாமல் இருந்ததால் மட்டும்தான் " குட்டக் குட்ட குனியும் கூட்டமடா" என்று நினைத்து தொடர்ந்து குத்துகிறார்கள். இந்த முறை தலைவர் " வெளியே வார முடிவு எடுப்பார்" என்று தொண்டர்கள் நம்பினார். தலைவர் " காங்கிரஸ் மீது" தப்பில்லை என்றார். இது " கோழைத்தனமா"? தலைவர் " துப்பிய கோழையா"?

No comments:

Post a Comment