Sunday, June 12, 2011

"ஜெ தீர்மானத்தை" அலட்சியப்படுத்தியவனும், அவதூறு செய்தவனும்.

தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, " ராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள்" என்று ஐ.நா. சபை அறிவிக்க, மத்திய அரசு ஆவண செய்யவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டப்பேரவையில், " தனி தீர்மானமாக" தானே முன்மொழிந்து ஏகமனதாக நிறைவ்டேரியது உலகத் தமிழர் மத்தியில் " பெரு மகிழ்ச்சியை" ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட தீர்மானத்தை முதலிலேயே " தடுக்க வான செய்த" இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம், பிறகு " தயங்கி, தயங்கி" தேசிய பாதுகாப்பு ஆலோசகர் " சிவசங்கர் மேநோனை" அனுப்பி அமைதியாக முதல்வரிடம் பேசியது.


ஆனால் "கொழுப்பு சென்ற மேநோனுக்கு" என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. தேவை இல்லாமல், தமிழக முதல்வரை " இழிவு படுத்த முயன்றுள்ளார்" தானும், நிரூபமா ராவும் ராஜபக்சே கும்பலுடன் பேசிய பேச்சில், தங்கள் பக்கம், " இந்திய நலனும், அவர்கள் பக்கம் இலங்கை நலனும்" பேசப்பட்டன என்றும், தமிழ்நாட்டு தீர்மானம் மற்றும் எந்த தனி நபர் கருத்துக்களும்" விவாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டு " சட்டமன்றத்தையும், மக்களையும்" அவமானப்படுத்தும் பேச்சு. இந்த மேனன் " தமிழ்நாட்டு முதல்வரை இழிவு படுத்தி விட்டு மீண்டும் இங்கே நுழைய விடகூடாது", இப்படித்தான் தமிழர்கள் என்ன முடியும்.


இந்த மேனன் இப்படி என்றால், இன்னொரு அமெரிக்க கைக்கூலி இங்கே இருக்கிறார். அவர் பெயர் சு.சாமி. அந்த ஆள் " சட்டமன்ற தீர்மானத்தை" மிகவும் கேவலமாக பேசியுள்ளான். அது போன்ற " கடந்தகால மனிதஉரிமை மீறல்கள்" பற்றி பேசக்கூடாது என்கிறான். புலிகளை பாதுகாக்க அவர்கள் பற்றி கூறாமல், தீர்மானம் போடப்பட்டுள்ளது என்கிறான். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மின்சார பிரச்சனை, சட்ட-ஒழுங்கு பிரச்சனையைத்தான் கவனிக்க வேண்டும் என்கிறான். அதாவது" தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போடாதே" என்கிறான். இந்த அமெரிக்க கைக்கூலி "ராஜபக்செக்கும் கைக்கூலி" எண்பதை காட்டுகிறான். அதே நோக்கில், இன்னொரு மன்மோகன் கைத்தடி தனது தமிழ் நாளேட்டில், தலையங்கம் எழுதியுள்ளார். அதிலும், " பொருளாதார தடை விதித்தால் சீனா நுழைய ஏதுவாகிவிடும்" என்று எழுதி, மன்மோகன் கரத்தை பலப் படுத்தியுள்ளார்.

இவ்வாறாக " தலைமை அமைச்சர் அலுவலகம்" தான் எடுத்த முயற்ச்சியை தாண்டி, ஒன்றுக்கு, இரண்டு தீர்மானங்களை தொடர்ச்சியாக இரண்டு நாளும்" போட்டு விட்டார்களே என்று கடுப்பாகி பேசுகிறார்கள். அதில் " கச்சதீவு தீர்மானமும்" சேர்ந்தது அவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டுகிறது. இந்த எதிரிகளை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

குணசேகரன்... said...

நானும் உங்க கூற்றை ஆமோதிக்கிறேன்

Post a Comment