Tuesday, June 14, 2011

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விடை.

கலைஞர் காட்சி ஊடகத்திற்கு சென்ற 200 கோடி ரூபாயும் எங்கே போயிற்று என்றும், அதுதான் லஞ்சப்பணம் என்று குற்றம் சாட்டும் சீ.பி.ஐ. அந்த பணத்தை கைப்பற்றியுள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் எளிதாக கேள்வி கேட்டு விடலாம். அதற்கான உண்மை பதிலை அவர்கள், எப்படியாவது சீ.பி.ஐ. யை நெருக்கி, அதுவும் ராஜாத்தி குடும்பத்தினரை நெருக்கி பெற்றுவிடலாம். கனிமொழிக்கு பிணை கிடைக்க வேண்டும் என்றால், அவருக்கு அந்த பணத்தில் சம்பந்தம் இல்லை என்ற உணமையையும் யாராவது வெளியே சொல்லிவிடலாம். அந்த உணமையைத்தான் அந்த " பாட்டியாலா நீதிமன்றத்தில்" ராஜாத்தி அம்மையார் புலம்பி, புலம்பி சொல்கிறார்களே. ஆனால் அது யாருக்கு போனது என்பதுதானே கேள்வி. கனிமொழியும் தனது நண்பர்களிடம், அந்த பணத்தில் ஒரு பைசா கூட தான் கைநீட்டி வாங்கவில்லை என்ற உண்மையை சொல்லிவந்தார். ஆனால் யாருக்கு போனது என்று சொல்லவில்லையே?

தனதையையும், குடும்பத்தையும், கழகத்தையும் காப்பாற்றுவதற்காக கனிமொழி அந்த உண்மையை சொல்லவில்லை. அப்படியானால் எப்படி கனிமொழி மீது மட்டும் பழி விழுந்தது? அவருக்கு சம்பந்தம் இல்லாத பணத்தை, கலைஞர் காட்சி ஊடகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாதபோதே , உணமிக்கு மாறாக யார் பொட்டுக் கொடுத்து? சீ.பி.ஐ. சொல்கிறது, " அமிர்தம்தான் கனிமொழி கலைஞர் காட்சி ஊடகத்தில் முக்கியமாக இயக்கியவர் என்று கூறினார் " . அப்படியானால் உண்மையில் கலைஞர் காட்சி ஊடகத்தை முழுமையாக இயக்கிய முக்கியத்தர்களில் ஒருவர் " அமிர்தம்" என்பது பொய்யா? அப்படியானால் " அந்த 200 கோடியில், அமிரதத்திற்கு ஐம்பது கோடியும், அவர் மகன் குனாநிதிக்கு ஐம்பது கோடியும், ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ஐம்பது கோடியும், அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு ஐம்பது கோடியும், ஆக மொத்தம் இரநூறு கோடியும் கை மாறியது" என்று சீ.பி.ஐ. கண்டுபிடித்ததாக சொல்வது உண்மையா இல்லையா? அப்படி கண்டுபிடித்தால் அதற்காக " மன்னர் குடும்பதிற்குள் உள்ள " பெண்கள் குடும்பத்தை, ஆண்கள் குடும்பம் பழி வாங்கியதை, பெண்கள் குடும்பம் போட்டுக் கொடுத்துவிட்டது" எனபதா?

No comments:

Post a Comment