Tuesday, June 14, 2011

திமுக உயர்மட்ட கூட்டத்தில் நடந்த " போட்டி காய் நகர்த்தல்" என்ன?

திமுக உயர்மட்ட கூட்டம் " களிஞறது காங்கிரஸ் மீதான கோபத்தை" காட்டப் போகிறது என்ற யூகம் எப்படி பொய்யானது? கலைஞர் " காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக தனது அமைச்சர்களை பின்வாங்கிக் கொள்ளவேண்டும்" என்று " தீர்மானம்" போடலாம் எனச் சொல்லவில்லையா? சொனார். ஏன் சொன்னார்? தனது மகள் கனிமொழி மீது இலாத, பொல்லாத வழக்கை போட்டு அவரை உள்ளே தள்ளியது தயாநிதிதான் என்ற ஆழமான கருத்தை, வலுவாக வைத்துள்ள கலைஞர் அப்படி ஒரு தீர்மானத்தை திமுக உயர்மட்ட குழுவில் கொண்டுவந்து, அதன்மூலம் " தயாநிதி உட்பட அனைத்து அமைச்சர்களையும்" மத்திய அரசிலிருந்து திரும்ப பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு ஒரு திட்டத்தை கொடுவந்தார். ஆனால் அந்த " உயர்மட்ட குழு" கூட்டத்தில், நேற்றைய தனது நம்பிக்கையான "ஸ்டாலினை" நம்பாமல், இன்றைய தனது நம்பிக்கையான " அழகிரியை" மட்டுமே நம்பி , அழகிரி பக்கத்திலேயே ஒருக்களித்து அமர்ந்திருந்த " அழகிரியின் நேற்றைய எதிரி, தயாநிதி மாறன் " காதில் பேசி, பேசி, அழகிரியை முடுக்கி விட்டு பேசவைத்தார்.

அதில் " மத்திய மைச்சர் பதவியை இழந்தால் தயாநிதி திஹார் சிறை போவது விரைந்து நடக்கலாம், அனால் அந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்தால் அழகிரியும் உடனடியாக புழல் சிறை செல்ல வேண்டியது வரும் " என்ற கருத்தில் அழகிரி பேசி அந்த கலைஞரின் தீர்மனத்திர்த்கு முற்றுப் புல்லிவைத்துவிட்டார். இந்த விசயத்துய் வெளியே வந்து கூறியதற்காக அந்த முனால் சட்டத்தின் மீது கோபமாகவும் இருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment