நிருபமா ராவ் இந்திய வெளிவிவகார செயலாளராக வந்தார். முக்கியமாக இலங்கை அரசின் தமிழின அழிப்பு வேலைகளை செய்வதற்கு துணை சென்றார். அதில் இந்திய அரசின் நலனை நிலை நிறுத்தினார். இலங்கையில் தமிழின அழிப்பை நடைமுறைப்படுத்த, அந்த போருக்கு முழு உதவியையும் செய்தது இந்திய அரசு என்றால், அதற்கான டிப்படையை போட்டுக்கொடுத்து, உலக அளவிலான " பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"என்ற பெயரைக் கொடுத்தும் அமெரிக்காவின் கைங்கரியம்தான். ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும்,இந்தியாவிலும், "புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி" தடை செய்ய ஏற்பாடு செய்ததும் அமெரிக்காதான் என்பது இப்போது பகிரங்கமாகி உள்ளது.
இத்தகைய சூழலில், நிரூபமா ராவ் அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு இணங்க " இலங்கை-இந்திய உறவை" பேணி பாதுகாத்தார் என்பதால், அதில் இலங்கையை சீனா பக்கம் முழுமையாக சார்ந்து நிற்க விடாமல் கையாண்டார் என்பதால் அது அமெரிக்காவின் நலனை பேணுவதில் உள்ள கெட்டிகாரத்தனம் என்றுதான் புரியப்படவேண்டும். அதுமட்டுமின்றி "இந்தியாவில் முக்கிய பதவிகளுக்கு வருவோரை" தேர்வு செய்யும்போது, சிறந்த உளவுத் துறை வைத்திருப்பதாக டில்லியால் நம்பப்படும் அமெரிக்கா சொல்கின்ற நபர்களை அந்த பதவிகளில் போடுவது இந்திய அரசுக்கு வாடிக்கைதான்.
அவ்வாறுதான் "எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேநோனும், நிரூபமா ராவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அன்ஹா விசவாசத்தை நிரூபமா அராவ் முறையாக காட்டுவார். இப்போது "காஷ்மீர் பிரச்சனயை" அமெரிக்கா விரும்பும் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடன் உள்ள நட்பை அமெரிக்கா விரும்பும்படி பேசி வருகிறார். அதேபோல "அமெரிக்கா விரும்புவது போல, மியான்மரில், சூ கியூ வுடன் பேசச் சென்று அவரை நிதானப்படுத்தி அங்குள்ள ராணுவ ஆட்சியாளர்களையும் காப்பாற்றி உள்ளார். இத்தகைய வேலைகளை அவசர் அவசரமாக செய்வதன் மூலம், தான் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக தூதுவராக போக தகுதி உள்ளவர் எண்பதை நிரூபித்து கொண்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment