Friday, June 24, 2011

முதல்வரின் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க மெரினாவில் கூடுவோம்.

ஜூன் 26 என்பது "அனைத்து நாட்டு சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள்". அந்த நாள் இன்றைய சூழலில், ராஜபக்சேவின் "தமிழின அழிப்பு உலகம் முழுவதும் அம்பலமாகி உள்ள" நேரத்தில், முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இலங்கையின் திர்க்கட்சியாக இருந்தாலும், "சிங்கள பௌத்த பேராண்மை கொள்கையை" உறுதியாக தூக்கிப் பிடிக்கும் ரணில் விக்ரமசிங்கே சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம், " ஐ.நா. போர்விதி மீறல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத இலங்கை அரசை எந்த ஒரு போர் விதி மீறல் தீர்மானமும்" கட்டுப்படுத்தாது என்று கூறினான்.


அதேசமயம் உலகம் முழுவதும், "ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் "இலங்கை கையெழுத்து போட்டுள்ளது என்ற குரல் எழும்பியது. அந்த " சித்திரவதைக்கு எதிரான அனைத்து நாட்டு ஒப்பந்த நாள் " ஜூன் 26 இல் வருவதால், அதே நாளில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடி, சென்னை கடற்கரை மெரினாவில், கண்ணகி சிலைக்கு பின்புறம் கடற்கரை மணலில், மாபெரும் "மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வினை" நடத்த திட்டமிட்டுள்ளனர். இது "தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும்? வலுப்படுத்துவதாக அமையும். டில்லியின் முழுமையான "தலையீடுகளையும்" தாண்டி, முதல்வர் செல்வி.ஜெயலலிதா நிறைவேற்றிய "தனித் தீர்மானமான" போர்குற்றம் செய்தவர்களை, "போர் குற்றவாளிகள்" என்று அறிவிக்க கோருவது, தில்லியையும், கொழும்பையும் அச்சுறுத்தி உள்ளன.


டில்லியும், கொழும்பும் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை மறைமுகமாக கொடுத்து வரும்போது, "சட்டப் பேரவை தீர்மானத்திற்கு முழுமையாக தமிழக மக்கள் மன்றம் வலுச் சேர்கிறது" எண்பதை இந்த ஞாயிறு கடற்கரை அணிதிரட்டல் மூலம் தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள்.

No comments:

Post a Comment