Monday, June 27, 2011

ஈழத்தமிழ் மக்களுக்காக, தொப்புள்கொடி உறவுகளின் தோழமை.

ஜூன்-26ஐ.நா.அறிவித்த"அனைத்துநாட்டுசித்திரவதை எதிர்ப்பு நாள்".
அன்று இந்தியாவின் சென்னையில் "தமிழ் உறவுகள்" நடத்திய மாபெரும் "மெழுகு வர்த்தி நினைவேந்தல்" நிகழ்வு ஒரு பெரும் ஆதரவை "ஈழத் தமிழ் உறவுகளுக்கு" ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட பங்கு கொண்டு, மெரீனா கடற்கரையில் "மழைத்தூரல்களுக்கு" நடுவே அமைதியாக அமர்ந்து "கைகளில் மெழுகுவர்த்திகளை" ஏந்தி, தெரிவித்த "தோழமை" உலகின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்தது.திருமுருகன் எடுத்த முன்முயர்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், மீனவர் அமைப்புகளும், தனி மனிதர்களும், கொடுத்த ஆதரவு "உலகம் முழுவதும் உள்ள தமிழரை ஒன்றாக சேர்ப்பதாக" இருந்தது. திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் இது பற்றி கூறும்போது, "இது எந்த ஒரு தலைவருக்கோ, அல்லது அமைப்ப்ற்கோ வந்த கூட்டமல்ல.ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டு
மாக்கள் கொடுத்தஆதரவு"என்றுகூறினார்.குறிப்பிட்ட நேரத்திற்கு வராத தலைவர்கள், தாமதமாக வரும்போது, அதுவே அவரகளது நுழைவு ஏற்படுத்திய சல,சலப்பையும், அதனால் ஏற்பட்ட நெரிசலும், கட்டுப்பாட்டை குலைக்கவே உதவின. அதில்; இருக்கையிலிருந்த முக்கியமானவர்கள் கூட பாதிக்கப்படும் நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. ஆனாலும் அதையும் தாண்டி, அந்த மாபஐம் தமிழ் மக்கள் கூட்டம் அமைதியாக கலந்து கொண்டு கொடுத்த ஆதரவு மெய் சிலிர்க்கும்படி இருந்தது.

காசி அனந்தன், பழ.நெடுமாறன், புலமைப் பித்தன், வேல்முருகன்,சீமான், பேராசிரியர். சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திருச்சி வேலுசாமி, ஓவியர் வீரசந்தானம், மருத்துவர் எழிலன்,மீனவர் தலைவர்கள் மகேஷ், ரூபேஷ், மாறன், சரவணன், திருமுருகனுடன் பணியாற்றிய ராஜ்குமார் பழனிச்சாமி, உமர், ராஜா ஸ்டாலின், ம.திமுக. வேளச்சேரி மணிமாறன், மல்லை சத்தியா, தாமரை, தியாகு, டேவிட்பெரியார்,புலம்பெயர்ந்த தமிழர்கள்,ராவணன்,குணசேகரன்,பாண்டிமாதேவி, ஏகலைவன், அரக்கோணம் விமலா, நெல்லை சிவகுமார், அன்பு தென்னரசு, டி.எஸ்.எஸ்.மணி, ஓவியர் புகழேந்தி, வா.மு.சேதுராமன், தெய்வநாயகம், ஓவியர் புருஷோத்தமன், தவசி குமரன், தனசேகரன், இன்னும்பல பிரமுகர்கள் கலந்துகொண்டது சிறப்பு சேர்த்தது.


நினைவு தூண்கள் இரண்டு "மறைந்த தமிழ் தியாகிகளுக்காக" உருவாக்கப்பட்டிருந்தது எல்லோரையும் அமைதி கொள்ள வைத்தது. மலர்கள் தூவப்பட்ட படுக்கைகளில், மணலில் "மெழுகுவர்த்தியை" வைத்து எரியூட்டிய நிகழ்வுகள் நெகிழ் வைத்தன. துண்டறிக்கைகளையும், சுவரொட்டிகளையும், இணையதள பரப்புரைகளையும், குறுன்செய்திகளையும், நேரடி அணுகுமுறைகளையும், பல அமைப்புகளின் தலைவர்களையும் சந்திப்பதன் மூலம் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டது. இதன்முழு காரணமாக,முன்முயர்ச்சியாக இருந்தவர் என்றவகையில் திருமுருகனை பர்ராட்டாமல் இருக்க முடியாது.

No comments:

Post a Comment