இது என்ன? அந்த குழுமம் மீது மேலிருந்தும், கீழிருந்தும் ஒரே நேரத்தில் தாக்குதலா? ஏன் இந்த விபரீதம்? தயைதி ௨௦௦௬ ஆம் ஆண்டில் ஐ.டி.அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த "ஏர்செல்" நிறுவனத்திற்கு கேட்ட "உரிமங்களும்" கொடுக்காமல், வற்ப்புறுத்தி மலேசியாவின் "அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனிடம்" விற்க வைத்தார் என்பது முதல் குற்றச்சாட்டு. அதன்பிறகே 'அந்நிய நேரடி மூலதனத்தை" ஐம்பது விழுக்காடு உயர்த்தி, அதை அடிப்படையாகக் கொண்டு, சன் டி.டி.எச்.இற்கு, 765 கோடி மூலதனத்தை அந்த அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனின் "மக்சிஸ்" நிறுவனத்திலிருந்து பெற வழி செய்தார் என்பது குற்றச்சாட்டு. அதன்பிறகே "மாக்சிஸ்" நிறுவனத்திற்கு பல வடநாட்டு "உரிமங்களை" வழங்கினார் என்கிறது சீ.பி.ஐ. இதை உச்சநீதிமன்றத்தில், "தாயாவை விசாரிப்பதற்கு முன்ப எப்படி சீ.பி.ஐ. சொல்லலாம் எனபதுதான் "தயா தரப்பு" வாதம். அதையேதான் "தளபதி ஸ்டாலினும்" கேட்கிறார்.
சிவசங்கரன் கூறிய குற்றச்ச்காட்டுகளை வைத்துக் கொண்டு எப்படி சீ.பி.ஐ. இப்படி ஒரு முடிவுக்கு வரலாம் எனபதே அவர்கள் தரப்பு வாதம். அதுவே திமுக தலைவர் தரப்பு வாதம் அல்ல. அவர் " ஊடகங்கள் எப்படி விசாரணை நடத்தி தீர்ப்பு கூறலாம்" எனபதுதான். ஊடகங்கள் என்றால், கலைஞர் நடத்தும் " காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும்" வருமல்லவா மாறன் சகோக்கள் நடத்தும், " இருபது காட்சி ஊடகங்களும், முப்பது எப்.எம். ரேடியோக்களும், அச்சு ஊடகங்களும்" வருமல்லவா? எதை கலைஞர் சொல்கிறார்? அமிர்தமும், ஆசிர்வாதமும், கூறிய செய்திகள வைத்து, " கனிமொழியை'' கைது செய்யலாம் என்றால் இது ஏன் ஓடாது என்று சீ.ஐ.டி.காலனி தரப்பு கேட்காத? தயா விசயத்தில்கட்சி பாதுகாக்கும் என்ற சொள்ளை கூறத் தயாராக இல்லாத கலைஞரை" கேள்வி கேட்டு, '' தயாவிற்கு ஆதரவாக''' பதில் சொல்ல வைத்ததும் ஊடகங்கள் தானே?" அப்படியானால் ஊடகங்கள் உதவுகின்றனவா? ஒப்த்திரவம் செய்கின்றனவா?
அதேநேரம் " சாக்ஸ்'' மாட்டியதும் நடந்துள்ளதே? அவர்கள் செய்த முன்னாள் வினைகள்தானே" விளையாடி இருக்கிறது? திரை உலகத்தை எந்த அளவுக்கு " துன்புறுத்தி" வந்தார்கள்? இப்போது எல்லாம் சேர்ந்து வந்து தாக்குகிறதே? அதிலும் "கலாநிதியும்"சேர்ந்து மாட்டுகிறாரே? திரை உலக பிரமுகர்கள் எத்தனை பேர் புழுங்கி தவித்தார்கள்? "'தாயாரிப்பாளர் சங்கதேர்தலில்" வெற்றி பெற்ற " கே.ஆர்.ஜி. போன்றவர்களுக்கு அளிக்கப்பட வாக்கு சீட்டுகளை, "சன் குழும" கும்பல் ஒன்று வந்து " கிழித்துப்போட்டு" தாங்கள் அறிவித்த " நிர்வாகிகளை" நிரந்தர மாக்கினார்களே? அதை செய்தது ஐயப்பன் என்ற சாக்ஸ் ஆள்தான் ஏறு இப்போது காவல்துறை கூறுகிறதே? அது போதாதென்று " நித்யானந்தா" கும்பல் மீண்டும் வழக்கு தொடுக்கிறார்களே?அதிலும் "கலாநிதியையும்" சேர்த்து பேசுகிறார்களே? இவையெல்லாம் ஒரே நேரத்தில் வார வேண்டுமா? "சாமியார்களின் ஆபாசத்தை" காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியிட்டு "வணிகம்" செய்யலாமா? என்று பொதுமக்களும் கேட்பார்களே? அதால் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வந்தது "வினை விதைத்தவன் வினையைத் தானே அறுப்பான்" என்று கேட்கத் தோன்றும்.Download:
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆடாத ஆட்டமெல்லாம்...
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
Post a Comment