Sunday, July 10, 2011

வடஇந்திய ராணுவக் குற்றத்தையும், தமிழ அதிகாரி சிரம் ஏற்கிறாரா?

சென்னையில் தில்சன் என்ற குடிசைவாழ் தமிழ் சிறுவன் அந்நியாயமாக "சுட்டுக் கொல்லப்பட்டான்" என்று தமிழ்நாடே கொந்தளித்தது. தமிழக முதல்வரும் " சிறுவன் என்ன தீவிரவாதியா? அவனை சுட்டுக் கொள்ள? குற்றம் செய்த ராணுவ வீரர், தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று கூறினார். இதனால் டில்லி அதிகம் கவலை அடைந்தது. வன்னி சென்று தமிழர்களை படுகொலை செய்த இந்திய ராணுவத்தின் கொலை வெறி தொடர்ச்சிதான் இங்கும், ஏழைச் சிறுவனது உயிரை எடுத்துள்ளது என்பது ஊடகங்களின் மற்றும் தமிழர்களின் புரிதலாக இருந்தது. சுட்ட ராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார் அவர் பெயர் அஜய்சிங் என்று வாரம் இருமுறை ஏடுகள் சனிக்கிழமை வெளியிட்டன. அற்ற்ஹாவது அவர்களுக்கு அதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்த செய்தி கிடைத்து விட்டன.

அப்படி இருந்தும் திடீரென "சனி இரவு உண்மைக் குற்றவாளி என்று தமிழ் ராணுவ அதிகாரி எனும் ஒய்வு பெற்ற கந்தசாமி ராமராஜனை சரணடைந்தார்" என்று கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். ஏற்கனவே " ராஜபக்சே அரசின் போர்குற்றங்கள் உலகப் பிரபலம் அடைந்துள்ள" நிலையில், அவற்றை நடத்த "இந்தியப் பேரரசு நேரடியாக முழுமையாக ஈடுபட்ட செய்தி" குறைந்த பட்சம் உலகத் தமிழர்கள் மத்தியிலும், இந்தியத் தமிழர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டு நிற்கும் போது, இப்படி ஒரு செயலை, "தமிழக சட்டமன்றம் போர் குற்றங்களை எதிர்த்து தீர்மானம்" போட்டுள்ள நேரத்தில் அதர்கு இந்தியா முழுவதும் பொது மக்கள் அப்பிபிராயம் திரண்டு வரும் காலத்தில், சென்னையில் இந்திய ராணுவ அதிகாரி அதிலும் "வடநாட்டு அதிகாரி ஒரு தமிழ் சிறுவனை அந்நியாயமாக சுட்டுக் கொன்றான்" என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் இந்திய ராணுவம் பற்றிய ஒரு எதிரான போக்கைத்தான் உருவாக்கும் என்று டில்லி கவலை பட்டது.

டில்லியின் இந்த கவலை, தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக்கி உள்ள " இலங்கையின் போர்குற்றங்கள் பற்றிய ஆங்கில காட்சி ஊடக திரையிடல் மூலம் எழுந்துள்ள டில்லி எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக" கிடைத்த அவர்களது சொந்த ஆய்வின் மூலம் அதிகமானது. அதை ஒட்டி டில்லி "தமிழக அரசியல் அதிகாரத்தை தொடர்பு கொள்ளாமல், அதிகார மட்டத்தில்" தங்களது உரிமையுடன் தொடர்பு கொண்டு, கலந்து பேசி உள்ளதாக தெரிகிறது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோச்டனைகளின் படியும், பரிமாற்றங்களின் படியும் "தமிழக உயர்மட்ட காவல் அதிகாரி" இத்தனை நாளும் செய்யாத நேரடி வருகையை அந்த "ராணுவ குடியிருப்பு வளாகத்திற்கு" சனி காலையில் செய்கிறார். ஏற்கனவே சம்பவம் நடந்த நேரத்திலேயே ஊடகத்தாருக்கு முன்னிலையிலேயே "ராணுவ அதிகாரிகள் அந்த சம்பவ இடத்து மரத்தின் அடியில் குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளை i வைத்தக் கொண்டு ஆராய்ச்சி" செய்ததையும், சில இழை, தளைகளை போட்டு அந்த இடத்தை மறைத்ததையும் நேரில் கண்ணால் நாமே பார்த்தோம்.

.அதேவேலையை இப்போது தமிழக உய்த்யர் அதிகாரி முன்னிலையில் செய்ய இத்தனை நாள் கடந்து அவசியம் இல்லை. ஆனால் "குற்றவாளி மாற்றப்பட " இந்த வருகை தேவைப்பட்டது" போல.வாகனத்தில் வந்த வடநாட்டு அதிகாரி "அஜாய்சிங்" திட்டிவிட்டு போய்விட்டாராம். உடனே அந்த அடுத்தவீட்டு "ஒய்வு பெற்ற தமிழ் அதிகாரி" கந்தசாமி ராமராஜன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டாராம்.மீண்டும் தமழர்களும், தமிழ்நாடும் ஏமாற்றப் படுகிறார்களா?

No comments:

Post a Comment