Monday, July 18, 2011

விடுதலை பெற்ற தெற்கு சூடானும், தமிழீழ விடுதலையும்.

மேற்பட் தலைப்பில் சென்னையில் சந்க்கிழமை அன்று ஒரு அரனுக்கு கூட்டத்தை, "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" சென்னை அண்ணாசாலையில், "தேவநேயப் பாவாணர் நூல் நிலையக் கட்டிடத்தில்" தோழமை மைய அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அதில் திட்டமிட்டபடி, "தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணியின்" தோழமைக் கட்சிகளான "புதிய தமிழகம்", "இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி" "மனித நேய மக்கள் கட்சி", "கொங்கு இளைஞர் பேரவை" ஆகியவை கலந்துகொண்டு உரையாற்றினர். இது "கொள்கை வகுக்கும் அவையின்" உறுப்பினர்களை பேசவைத்து ஏற்பாடு செய்யப்ப்பட்ட கூட்டம் என்பதால் "அரசியல் முக்கியத்துவம்" பெற்றதாக இருந்தது.


"தெற்கு சூடான் விடுதலை" பெற்றதை சுட்டிக்காட்டி, அதேபோல "தமிழீழமும் விடுதலை" பெறவேண்டும் என்ற கருத்தமைப்புடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கலந்துகொண்ட "பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும்" அத்தகைய கருத்தையே முன்வைத்து உரையாற்றினார்கள். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, வரவேற்பு உரை நிகழ்த்தினார். அதில், மருத்துவர் கிரிஷ்ணசாமி, நஞ்சப்பன், தனியரசு, அஸ்லாம் பாட்சா ஆகியோர் "தமிழீழ மக்களுக்காக" தன்கள் கட்சிகள் மூலம் செயல்பட்டு வரும் வகை, வகையான செய்திகளைக் கூறி வரவேற்றார்.. திருமுருகனும், மகேஷும், மணிவண்ணனும், தமிழீழ மக்களுக்காக செயல்பட்டுவரும் விவரங்களை எடுத்துக் கூறி வரவேற்றார்.

மே 17 இயக்க திருமுருகன் பேசும்போது, ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறி தஹ்ண்டிக்கவேண்டி இவர்களிடம் நாம் கேட்கவேன்ம்டாம், மாறாக தமிழீழம் கிடைத்துவிட்டால் நாமே ராஜபக்சேவை தண்டிப்போம் என்றார். அந்த கருத்தை மறுத்து உரையாற்றிய அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.நாகேஷ், " அதுதவரான கருத்து" என்றார். ராஜபக்சேவை தண்டிக்கவும் வேண்டும், தமிழீழம் பெறப் போராடவும் வேண்டும் என்றார். அதையே பின்னால் வந்த "புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிரிஷ்ணசாமி, " முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமான போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் தீர்மானம்" மீது தான் தான் முதலில் கருத்து டேஹ்ரிவித்து பேசினேன் என்றார். உலகம் முழுக்க "தேசிய இணைகளின் பிரச்சனைகள் " வரும்போதெல்லாம் அதை ஆடஹ்ரிக்கும் உலக நாடுகள் ஏன் "தமிழனுக்கு" மட்டும் ஆடஹ்ரவு தஹ்ருவதில்லை எண்பதை சமூக ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.


அந்த கேள்விக்கு விடை அளித்த அடுத்த பேச்சாளரான டி.எஸ்.எஸ்.மணி," தமிழ் தேசிய இனம் மட்டுமே உலகில் போராடும் தேசிய இனங்களில், கடல் படையையும், வான்படையையும் கொண்டிருந்தது " எவ்ன்று கூறி தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனால் மட்டுமே அது சாத்தியப்பட்டது என்றார். பெரியார் வளர்ப்பில், தமிழ் தேசியம் மட்டுமே, "சாதிகளுக்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எத்ரிராகவும்" கிளம்பிய ஒரே "தேசிய இன எழுச்சி" என்றார். அதமால்தான் உலக ஏகாதிபத்திய நாடுகள், தமிழ் தேசிய இனத்தை வளர விடாமல் சதி செய்கின்றனர் என்றார். ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியல் போராட்ட்டத்திற்கு வந்திருக்கும் தமிழர்களைக் கண்டு, உலக ஏகாதிபத்திய சக்திகள் அதிர்ச்சி அடைந்து "தமிழின விரோதப் போக்கை" மேற்கொண்டிருந்தன என்றும், அதனால்தான் அவர்களுக்கு "ஒன்றுபட்டு தமிழினத்தை அழிக்க" வாய்ப்பு கிட்டியது என்றார். "தமிழர் அடையாளத்தை அழிக்க இப்போது "மதம், சாதி" போன்ற தந்திரங்களை 'தமிழின எதிரிகள்" பாவிக்கிறார்கள் என்றார்.


அடுத்து உரையாற்றிய தியாகு, " தெற்கு சூடான் நிலைமையையும், தமிழீழ நிலைமையையும்" ஒப்பிட்டார். தெற்கு சூடான் விடுதலையை அமெரிக்கா ஆதரிப்பது 'எண்ணை அவலத்திற்காக மட்டும்" என்று காண்பது தவறு என்று "திருமுருகன் கருத்துக்கு" மறுப்பு அளித்தார். இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தது எண்ணை வாழ்த்திற்கா? என்று கேள்வி எழுப்பினார். தெற்கு சூடான் மக்களின் தியாகத்தை நாம் "கொச்சை படுத்தக்கூடாது" என்றார். அதையே பின்னால் வந்த "தனியரசும், நஞ்சப்பனும்" கூறினர். மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அஸ்லாம் பாச்சா, "தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாதது" என்றார். கொங்கு இளைஞர் பேரவை சட்டமன்ற உறுப்பினரான தனியரசும் அதையே வலியுறுத்தினார்.

சென்னை பலகலைக் கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் மணிவண்ணன்,"தமிழனின் இறையாண்மையை" வேண்டி போராடியே ஆகவேண்டும் என்றார். நிறைவாக பேசிய நஞ்சப்பன், "இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, ராஜபக்சேவின் போர்குற்றங்கள் பற்றி அகில இந்திய ரீதியில் கொண்டு சென்றிருப்பதை" விளக்கினார். டில்லியில் அவர்கள் நடத்திய போராட்டத்தில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பரதன், " இலங்கையில் தமிழர்களுக்கு தாயகம் அமைய வேண்டும்" என்று கூறியதை நினைவு கூர்நதார். நன்றி அறிவிப்பு செய்ய "பெரியார் திராவிடக் கழகத்தை" சேர்ந்த தபசி குமரன் வந்திருந்து சிறப்பாக் உஅரை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே முடித்தார்.

No comments:

Post a Comment