1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த "குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்" ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் "தமிழ் ஈழத்தை" காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது "கண்களை சிங்களக் காடையர்கள்" பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.
இந்த நாளில், அந்த தமிழீழத் தியாகிகளின் நினைவாக, சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் அவர்களது படங்களை வைத்து, அனைத்து இந்திய மீனவர் சங்கங்களின் கூட்டப்பினர்" மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி" , "உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன்" , அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.எ.மகேஷ், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கறிஞர் அருள், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி.மாறன், பெரியார் திராவிடர் கழகம் தென் சென்னை மாவட்ட எயலாளர் தபசி குமரன், மற்றும் மீனவர் சங்க முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். ஆர்வம் மிகுதியால் அங்கே வந்த காவல்துறை அதிகாரிகளும் முதலில் திகைத்துவிட்டு பிறகு "குட்டிமணி, ஜெகன்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment