Monday, July 25, 2011

புலம் பெயர்ந்த தமிழர் வலைப்பின்னல் தொடங்கியது.

தமிழர்கள் பத்து கோடிபேர் உலகம் முழுவதும் இருந்தாலும், ஈழத் தமிழர்களின் செயல்பாடுகள் மட்டுமே உலகை பேசவைத்துள்ளன. புலம் பெயர்ந்த தமிழர் என்ற சொல்லுக்கு கூட, ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தாலும் விடாமல் தமிழின உணர்வை வெளிப்படுத்தி வருவதை உலகம் அறியும். இந்தியாவின் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் தமிழர்களின் நிலைமைகளை ஒருங்கிணைக்க எண்ணி, "உலகத் தமிழர் அமைப்பு" என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ள ராஜ்குமார் பழனிச்சாமியும், இரா.செழியனும் ஒரு கருத்தரங்கை சென்னையில், ஈழப்படுகொலை நாளான ஜூலை 23 ஆம் நாள் கூடினார்கள்.

அதில் "இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றுள்ள தமிழர்கள்" நிலைமை பற்றியும் பேச பலரையும் அழைத்திருந்தார்கள். ஆனாலும் அங்கே "ஈழத் தமிழர் " பற்றிய கருத்துக்கள்தான் அதிகம் வெளிப்பட்டன. முதலில் சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் மணிவண்ணன், ஒரு உரையை நிகழ்த்தினார். அது "ஈழத் தமிழர் இனப்படுகொலை" பற்றியது. அடுத்து நாவே நாட்டிலிருந்து வந்த பிரபு கண்ணனும், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ்.மணியும், " புலம் பெயர்ந்து இருக்கும் இந்தியத் தமிழர்களது" நிலை பற்றி பேசினார்கள். அதில் "தமிழர்களின் அடையாளம்" பற்றியும் பேச்சு வந்தது. "தமிழர் விரோத சக்திகள் இன்று திட்டமிட்டு, மத ரீதியாக தமிழர்களைப் பிரிக்கிறார்கள்" என்ற செய்தியையும் சொன்னார்கள். முஸ்லிம் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், தமிழின அடையாளத்திலிருந்து பிரிக்க ஒரு "சதி" நடப்பதாகவும், அதற்கான "பரப்புரை" செய்யப்படுவதாக்கவும்கூட கருத்துக்கள் வெளிவந்தன.

அத்தகைய முயற்சிகள், "சிங்கள சூழ்ச்சி" என்பதாக இலங்கையில் வர்நிக்கப்படவேண்டும் என்றும், இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சி என்று காணப்படவேண்டும் எனவும் அங்கே கூறப்பட்டது. அதுதவிர "தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக இரண்டறக் கலந்துவிட்ட, தெலுங்கு, கன்னட, மலையாள அடிப்படையை" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்த அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்த மக்கள், தம்ழ்நாட்டு தமிழர் பண்பாடுகளுடன் இரண்டறக் கலந்து "தமிழர்களாகவே" மாறிவிட்ட போதும் அவர்களை "மாற்று மொழியினர்" என்று முத்திரை குத்தி உடைக்கும் போக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டது. அத்தகைய போக்கு டில்லி அரசால் அவர்களது உளவுத்துறையால் வரவேற்கப் படுகிறது என்பதும் எடுத்து வைக்கப்பட்டது. அதாவது பல பத்து ஆண்டுகளாக "தமிழர் வாழ்வியலுக்காக" போராடிவரும் சக்திகளை புறந்தள்ள இப்படி ஒரு சூழ்ச்சி செய்யப்படுகிறது என்றும் அங்கே கூறப்பட்டது.

அதனால் "தமிழர் அடையாளத்தை" புரிந்து கொள்வதில் ஸ்டாலின் கோரியுள்ள விளக்கம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. அதில் "ஒரே எல்லைக்குள், ஒரே பொருளாதார முறையில், ஒரே பண்பாட்டில், ஒரே மொழியில் இணையும் மக்கள் கூட்டம்" ஒரே தேசிய இனம் என்று கோரப்பட்டது நினைவு கூறப்பட்டது.அந்த கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் எழிலன், " பார்ப்பன சக்திகளிடம்" எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எண்பதை வலியிருத்தினார். இந்திய அரசு இப்போது "ஒற்றையாட்சியை நோக்கி" செல்கிறது என்றார். பார்ப்பனர் அல்லாத சக்திகளும் "தமிழர் விரோத பார்ப்பனீய அணுகுமுறைகளை" எடுத்துள்ளதை வழக்கறிஞர் பாண்டிமாதேவி நினைவு படுத்தினார். திருமுருகன் காந்தி பேசும்போது, " ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா, ராஜபக்சேவின் பிரதிநிதியாக இருக்கும் ஏன்.ராம்" ஆகியோர் செய்யும் செயல்களை கவனம் வேண்டும் என்றார். ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிப்பதை விட, தமிழீழம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று அவர் கூறினார்.

பேராசிரியர் சரஸ்வதி பேசும்போது, " ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவிப்பதும், தமிழீழம் அடைவதும்" எதிர் எதிரானது அல்ல என்றும், இரண்டும் "ஒரே நாணயத்தின் இரண்டு வெவ்வேறு பக்கங்கள்" என்றும் கூறினார். ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திலிருந்து வந்த " ராஜேஷ் சுந்தரம்" ஊடகங்களில் "சாதகமான" சக்திகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது செயலாற்ற வேண்டும் என்றார். விடுதலைப் புலிகளின் " கொரில்லா தந்திரமும், போர் தந்திரமும்" ஊடககங்கள் இடையேயும், பரப்புரையிலும் கையாளப்படவேண்டும் என்றார். "தமிழர்களுக்கான கல்வி' என்ற தளிப்பில், வழக்கறிஞர் பாண்டிமாதேவியும், காரை மைந்தனும் பேசினார்கள். " "தாய் தமிழ் பயிற்றுமொழிக் கல்வியை" அவர்கள் வலியுறுத்தினர். கல்வி கற்றவர்கள் இன உரிமை விசயத்தில் முன்னே நிற்க வேண்டும் என்று பாண்டிமாதேவி வலியுறுத்தினார்.

கடைசியாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவற்றில் " தமிழர்கள் மதம் தாண்டி சிந்திப்பதும், பழமை பண்பாட்டை உடைப்பதும் அவசியம்" என்று கூறப்பட்டது."சாதிகளை உடைப்பதும், பெண்ணடிமைத்தனத்தை உடைப்பதும்" தேவை என்பது வலியுறுத்தப் பட்டது.தமிழ்நாட்டு சட்டப்பேரவை கொண்டுவந்த " போர்குற்றவாளிகளை தண்டிப்பதையும், பொருளாதார தடையை இலங்கைக்கு அறிவிப்பதையும்" வரவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1981 ஆம் ஆண்டு எம்/ஜி.ஆர். அறிவித்த "உலகத் தமழ்ச் சங்கம்" பத்து கோடி நன்கொடையை அப்போது பெற்றதாயும், அதற்கு பதினாலு ஏக்கர் நிலம் மதுரையில் நீதிமன்றம் முன்னால் வழங்கப்பட்டதையும், அவை தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தின் க்கட்டுப்பாட்டில் இருப்பதையும், அதை மாற்றி களைஞர் ஆட்சி " உலகத் தமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை" என்று ஏற்படுத்தியதையும் சுட்டிக் காட்டி, அதில் எம்.ஜி.ஆர்.செய்த திட்டத்தை இன்றைய தமிழக அரசு மீண்டும் கொண்டுவர கூட்டம் கேட்டுக் கொண்டது.

"நாடு கடந்த தமிழீழ அரசு "பற்றிய விளக்கத்தை பேரா.சரஸ்வதி அளித்தார். அப்போது அந்த "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்' இந்தியாவில் ஏற்படுத்தி செயல்படுகிறோம் என்பதையும் எடுத்துக் கூறினார். திருமுருகன் தனது உரையில் " நிறுவனங்களை தமிழர் நாளுக்காக" ஏற்படுத்துவது பற்றி கூறினார். மொத்தத்தில் ஐமப்துக்கு மேற்பட்ட தமிழின ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டமாக அது இனிது நிறைவுற்றது.

No comments:

Post a Comment