ஞாயிறு அன்று மன்னார்குடி நகரில், "அம்பேத்கார் அறிவாலயம்" என்ற ஒரு நடுநாயகமாக கட்டப்பட்ட ஒரு மணடபத்தில், " அம்பேத்கார் ஜனநாயக இளைஞர் பேரவை" என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா நடந்தது. ஏற்கனவே "களப் பணியாளர்களாக" வரலாற்றை சந்தித்த தோழர்கள், செல்வராஜ், சதாசிவம் போன்றோர் "வெண்மணி" என்ற அடைப்புக் குறியுடன் அந்த பேரவையின் தொடக்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல், "கீழ வெண்மணி" கிராமத்தில் "நாற்பத்தி நாலு" தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளை "கூண்டோடு" எரித்துக் கொலை செய்த " நெல் உற்பத்தியாளர் சங்க" தலைவர் "கோபாலகிருஷ்ண நாயுடுவை" உயர்நீதிமன்றம் விடுதலை செய்தபோது, "மக்கள் மன்றம்" நக்சல்பாரி புரட்சிகர கட்சியான, "இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி{ மார்க்சிசிட்--லெனினிஸ்ட்}" யின் கொரில்லாபடை "அழித்தொழிப்பு" செய்தது. அந்த கட்சி "வினோத் மிஸ்ரா" தலைமையில் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது.
அந்த "புரட்சிகர நடவடிக்கை" உலகம் முழுவதும் மக்களால் பாராட்டப்பட்டது. அந்த வழக்கில் காவல்துறை வீட்டில் யிருந்த சிலரை முதலில் கைது செய்து "தண்டனை" வாங்கிக் கொடுத்து. அதன்பிறகு அந்தவட்டரத்தில் இருந்து நக்சல்பாரி இயக்கத்திற்கு சென்ற சிலரை கைது செய்து அவர்கள் மீது "கொலைவழக்கு" போட்டது. அவர்களும் பிறகு விடுதலை ஆனார்கள். ஆனால் காவல்துறை அவர்களை "நக்சல்பாரி இயக்கத்தின் "கொரில்லாப்படை" என்று அறிவித்தது. அந்த தோழர்களான, "வெண்மணி செல்கராஜ், வெண்மணி சுப்பிரமணியன், வெண்மணி சதாசிவம்" ஆகியோர் இணைத்து இப்போது இந்த "அம்பேத்கார் ஜனநாயக இளஞர் பேரவை" அமைப்பை தோற்றுவித்துள்ளனர். அவர்களுடன் பழைய தோழர்களான "மழலை சிங்காரவேலு, அரங்க குணசேகரன், டி.எஸ்.எஸ்.மணி, தடா ரவி" ஆகியோரும் உரையாற்றினர்.
அதில் நிறைவேற்றப்பட்ட ஒன்பது தீர்மானங்களில், " தாழ்த்தப்பட்டோர், சிருபான்மையருக்கான பாதுகாப்புக்கு தனி சட்டம்" கேட்டிருந்தனர்." பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க" கோரியிருந்தனர். "தாட்கோ நிதி" யை தாழ்த்தப்பட்டோருக்கே பயன்படுத்த கோரியிருந்தனர். "சமச்சீர் கல்வி என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டுமலா, உள்கட்டுமான வசதிகளிலும், கல்விக் கட்டணம் தவிர்ஹ்த்ட கட்டணம் வசூலிப்பதிலும், ஏழை, பணக்கார வேறுபாடு இல்லாத திட்டம்" வேண்டும் எனக்க கோரியிருந்தனர். "நாடாளுமன்றம் முதல் ஊராட்சிவரை உள்ள உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை "அரசுப் பள்ளிகளில்" சேர்க்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். கட்சிகள் உட்பட அமைப்புகள் எல்லோரும் தங்கள் உறுப்பினர்களை அவரவர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றனர்.
நில மோசடிகளை நடவடிக்கை மூலம் தமிழக அரசு மீட்டெடுக்க எவ்ண்டும் என்றனர். இலங்கையில் "தமிழினப் படுகொலையை செய்ததற்காக மத்தியரசு தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் " என்றொரு தீர்மானம்.போற்குற்றவாளியை தண்டிக்கவும், பொருளாதரா தடை கோரியும் போடப்பட்ட தமிழக அரசை பாராட்டி ஒரு தீர்மானம். இலங்கை உள்ளாட்சி தேர்தல்களில், வடக்கு,கிழக்கு மாகான மக்கள் "தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு: வெற்றி தேடித் தந்ததன் மூலம், இரண்டு தேசிய இனமும் இனியும்செர்ந்து வாழமுடியாது" என்பது தெளிவாவதால், "தமிழீழம்" அமைய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றொரு தீர்மானம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment