Tuesday, August 2, 2011

சூ.சாமி ஒரு "சூ,மந்திரக்காளியா?

அமெரிக்கா விரும்பியவுடன் "இந்தியாவிற்குள்" ஒரு "மத மோதல் சூறாவளியை" உருவாகும் வல்லமை அந்த "ஆளுக்கு" இருக்கிறதா? அந்த "ஆள்" வேண்டுமானால் அமெரிக்கா ஒற்றராக இருக்கலாம். ஆனால் "ஹார்வேர்ட்" பலகலைக் கழகத்தில் கற்ற அல்லது கற்கும் அனைவரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே? இப்போது ஜூலை 11 இல் அதாவது அமெரிக்கா " தாவூது இப்ராஹீம்" பற்றி "பட்டியலில்" அறிவித்த பின்,மூன்றாம் நாளில், அந்த மும்பை குண்ட வெடிக்க வைத்தார்கள். அதனால் "அமெரிக்கா" பக்கம் மேலும் இந்தியா சாயவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

அடுத்து ஜூலை 16 இல், சு.சாமி என்ற சுப்பிரமணிய சாமியை மும்பையிலிருந்து வெளிவரும் "டி.ஏன்.எ." என்ற டெய்லி நேசனல் அனலிசிஸ்" ஏட்டில் ஒரு "தூண்டிவிடும்" கட்டுரையை எழுத வைத்தார்கள். அதில் அவர் "இஸ்லாமிய பயங்கரவாதம்-எப்படிஒழிப்பது" என்று தலைப்பிட்டு எழுதினர். அதில் "இந்தியாவில்உள்ளமுஸ்லிம்கள் எல்லோரும் தங்களை பாரம்பரிய இந்துக்களாக இருந்தவர்கள்" என்று அறிவிக்கவேண்டும் என்று எழுதினார். மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும் என்றார். இந்து மதத்திற்கு திரும்ப வருவதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எழுதினார்.

எந்த "சாதியில்" வேண்டுமானாலும் "திரும்பி வருகிறவர்கள்" ஸ்ர்கப் படவேண்டும் என்றும் எழுதினார். அதாவது ஒரு " இடதுவிலக்கை இந்துத்துவாவிற்கு" கொடுத்திருந்தார். இஸ்லாம் போர்தொடுத்து பிடித்த நாடுகளில் எல்லாம் "நூறு விழுக்காடு" முஸ்லிம்களாக இரண்டு பத்தாண்டுகளில் மாறிவிட்டார்கள் என்றும், ஆனால் எண்ணூறு ஆண்டுகள் கடுமையாக இஸ்லாம் ஆண்டும் கூட "ஒன்றுபட்ட இந்தியாவில் எழுபத்தி ஐந்து விழுக்காடு இந்துக்களே " இறந்தனர் என்றும் அதனால் 'அடிப்படைவாதி இஸ்லாமியர்கள்" இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய விரும்புவதாகவும் எழுதினார். இது நிச்சயமாக ஒரு வல்லரசின் சாதிகளுக்காக தீட்டப்பட்ட " நச்சு ஆராய்ச்சி விதையாகத்தான்" இருக்க வேண்டும்.

அந்த கட்டுரையை உடனடியாக "ஹார்வேர்ட்" பல்கலைகழக "இந்திய மாணவர்கள்" எதிர்த்து " மனு" ஒன்றை இணையத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அதில் " மதவெறி தூண்டும் கட்டுரை எழுதிய சு.சாமியயுடன் ஹார்வேர்ட் பலகலை இனி எந்த தொடர்பும்" வைத்துக் கொள்ளகூடாது என எழுதி இருப்ன்தனர். அவர்கள் "குமார் என்றும் சஞ்சய் பின்டோ" என்றும் பெயர் கொண்ட அதாவது இந்தியாவின் "இந்து மத" பின்னனி கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள். அவர்களதுவேண்டுகோளுக்குஉடனடியாக"இருநூறு மாணவர்கள்" கையெழுத்திட்டனர்.

இந்தியாவில் உள்ள "சிறுபான்மை உரிமை கவுன்சில்" ஜூலை 19 இல்,தனது கூட்டத்தில் இந்த புகாரை எடுத்துக் கொண்டது. இனி இந்தியமக்கள்தான் இந்த "சதிகார சாமியை" கவனத்துக் கொள்ளவேண்டும்.,"மதச்சார்பற்ற சக்திகளுக்கு" ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் "சு.சாமி" இந்திய தலைமை அமைச்சர் மன்மோகனை உச்சநீதிமன்ற நீதியரசரின் கோபத்திலிருந்து "காப்பாற்ற பிணை" எடுத்தவர் எனபதையும் நாம் நினைவு படுத்தவேண்டும். மீண்டும் மன்மோகனுக்கு ஆபத்து வரும் இந்நேரம் சு.சாமி "வன்முறையை" கிளப்பி விடுகிறாரா?

1 comment:

suraavali said...

தமிழகத்தில் இயங்கும் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர் கல்வி விவகாரத்தில் சீர்திருத்தவாத சகதியில் முழ்கிவிட்டது பற்றி இதுவரை நாங்கள் இரு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.மேலும் தொடர்கட்டுரைகளையும் வெளியிடவுள்ளோம்.எமது இந்த விமர்சனக் கட்டுரைகள பற்றி தங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளுகிறோம்.
இணைப்பு
1.சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி-1http://suraavali.blogspot.com/2011/07/blog-post.html


2. சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்http://suraavali.blogspot.com/2011/07/blog-post_28.html

3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் - 2http://suraavali.blogspot.com/2011/08/2.html


தோழமையுடன்
சூறாவளி நிர்வாகக்குழு

Post a Comment