செங்கொடி. உன்னை என் அன்பு தங்கை மகேஷ், மக்கள் மன்ற லுவலகம் காஞ்சிபுரம் ஊருக்குள் இருக்கும்போது, பத்து ஆண்டுகளுக்கு முனம்பு ஒரு நாள் அறிமுகம் செய்தாள். நீ ஒரிருக்கையில் உள்ள ஒரு பழங்குடி இருளர் குடும்பத்தில் பிறந்து, தாயை இழந்த நிலையில் மக்கள் மன்றத்தில் இணைக்கப்பட்டாய் என்பதையும் கூறினார். அதற்கு அந்த ஊர் மக்கள் மத்தியில் குடும்ப உறுப்பினர் மத்தியில் எவ்வளவு தூரம் கடினப்பட்டு "இணங்கவைத்து" அழைத்து வந்தோம் என்பதையும் கூறினார். மகேஷ் கடந்த இருபத்தொரு ஆண்டுகளாக தோழமையோடு, அன்பு தங்கையாக பல்வேறு போராட்டங்களில் உடன் வரும்போதெல்லாம் "மக்கள் மன்றத்தை" எப்படி ஒரு "கம்யூனாக" ஜெசியுடன் சேர்ந்து நடத்தி வருகிறார் எனபது எனக்கு தெரியும். கம்யூன் என்றால் "கூட்டு வாழ்கை" அன்பதை புரிந்து கொண்டு நீயும் அங்கே வாழை வந்தாய் எனபது எனக்கு தெரியும். "தாயை" இழந்த நிலையில் சென்கொடியே" உனக்கு தாயாக மகேஷ் இருந்து வளர்த்து வந்ததும் நம் இருவருக்கும் தெரியும்.
நாங்கள் "சிவப்பு" சிந்தனைகளை கற்று களம் வந்தவர்கள். மாவோ, சாரு, சே குவேரா, என்று படித்தவர்கள், தமிழ் மண்ணில் "பெரியாரையும்" இணைத்தே கற்றோம். ஈழ விடுதலை போர், எனகளுக்கு "புலிகளை" அறிமுகம் செய்தபோது, உனக்கும் அதுவே அறிமுகம் ஆனது. "தமிழீழ தேசிய தலைவராக" நாங்கள்மேதகு பிரபாகரனை காணும்போது, நீயும் எங்களுடன் சேர்ந்து அடஹியே எதிரோலித்தாய். "மஞ்சள் நிறத்தில்" புலி கொடியில் பறக்க, " சிவப்பு"தானே பின்னணி வர்ணம்? "மாவோ, சேகுவேரா "ராணுவ தந்திரங்கள்" பிரபாகரனுக்கே "பாடமாக" அமையவில்லையா? அதனால் "சிவப்பு" சிந்தனைகள் நமக்கு அன்னியமில்லை. நாங்கள் என்னதான் பேசிவந்தாலும், ஒவ்வொரு மே தினத்திலும், மக்கள் மன்றம் நடத்திவரும், ஊர்வலங்களிலும், மேடை "நடனங்களிலும்" உன் ஆட்டத்தில் இருந்த "நளினம்" என்னை கவராமல் இல்லை. இத்தனை சிறிய வயதில் இத்தனை அமைதி முகத்தோடு, "செங்கொடி" ஆடும் நடனமும், பாடும் பாட்டும், "திகைக்க"வைத்தன எண்பதை நான் சொல்லாமலும் இல்லை. மக்கள் மன்றத்தில் உள்ளத்தில் நீயே சிறிய வயது சிறுமி. "கவுதம், கார்கி" ஆகியோர் குழந்தைகள் என்பதால் நீதான் சிறிய வயது "போராளியாக" இருந்தாய்.
மக்கள் மன்றத்தினர் போராடும்போதேல்லாம், கைது செய்யப்பட்டால் உன் பெயரும் அதில் இருக்குமே? தளராத "இளம் போராளியாக" நீ இருந்தாய். யாரிடமும் அதிகம் பேசமாட்டாயே? நான் மக்கள் மன்றத்திற்கு வரும்போதெல்லாம், மகாவும், மேகலாவும் வந்து பேசுவார்கள். நீ ஓரத்தில் சிரித்துக்கொண்டே நிற்பாயே? ஏன் "செங்கொடி" பேசமாட்டாயா? என்று ஒரு முறை நான் கேட்டபிரகுதானே பேசத் தொடங்கினாய்? நான் வந்தவுடன் "ஓடிவந்து" முன்னே நின்றுகொண்டு, "தோழர்" என்று கூறிவிட்டு சிரிப்பையே? எங்கே போனது அந்த சிரிப்பு? இப்போது உடலெங்கும் "நெருப்பு சுட்ட வெடிப்புகளுடன்" எப்படி நான் உன்னை "பிணவறையில் சந்தித்தேன்?" எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? நான் பொதுவாக அழும் குணம் கொண்டவன் அல்ல என்பது உணமைதான்.அதை மாற்றி விட்டாயே? நீ எங்களை விட வலுவாய்ந்தவள்தானே?
சென்னை கோயம்பேடில் "பெண் வழக்கறிஞர்களின்" சாகும்வரை பட்டிநிப்போரில் கலந்து கொள்ள மகேஷ், ஜெசி, மகா,மேகலா, வின்சென்ட் அண்ணன், பாலு என மக்கள் மன்றத்திலிருந்து பலரும் வந்திருந்த அந்த அகஸ்ட் 28 ஆம் நாள், நீ வரவில்லை. அது வெறும் செய்தி என நினைத்தோம். ஆனால் உனக்குள் இப்படி ஒரு "மாபெரும் திட்டம்" இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லையே? "மணி அன்னா என்ன போராட்டம் எடுக்கலாம்" என்று மகேஷ் வினவிய போது, "உயிர் இழப்பு" இல்லாமல் கடுமையான போராட்டங்களை மத்திய அரசை எதிர்த்து எடுக்கவேண்டும் என்று மகேஷிடம் சொல்லி அனுப்பும்போது, நீ எப்படி " அதேநேரத்தில் "உயிர் இழப்பிற்கு" தயார் செய்துகொண்டிருந்தாய்? உனக்கு எப்படி நாங்கள் பேசியது கேட்டது? மகேஷ் காஞ்சி வருவதற்குள் முந்திக்கொண்டாயே?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
செங்கொடியின் உயிர் தியாகம்
நெஞ்சை உருக்கிய சோகம்.
மனம் கனக்கிறது.செங்கொடி தமிழனின் மனதில் இடம் பெற்று விட்டாள்,அவள் லட்சியத்தை மீட்டெடுக்க வேண்டியது உண்மையான தமிழனின் கடமை.
Post a Comment