Saturday, September 3, 2011

பிணவறையில் சிறுமி, மனச்சிறையில் நம்மவர்.


அந்த அகஸ்ட் 28 ஆம் நாள் இரவில், இயக்குனர் தாமிரா வாகனத்தில், காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் சென்ற உடனேயே, மகேஷ், ஜெசி, மகா,மேகலா மற்றும் மக்கள் மன்ற தோழர்கள், தரையில் அமர்ந்திருக்க, மகேஷ் "ஓவென" அழ, அந்த சூழலை மீண்டும் எண்ணிப்பார்க்க முடியாதபடி, என்னை முற்றுகையிட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சோமசுந்தரம், மாலையுடன் வந்து அமைதியாக "அஞ்சலி" செலுத்தி சென்றார். திமுகவின் மாவட்ட செயலாளரும், முன்னால் அமைச்சருமான தா.பொ.அன்பரசு, ஒரு கூட்டத்துடன் மாலைகளை எடுத்துக் கொண்டு "முழக்கம்" இட்டபடியே "கேமராக்கள்" புடை சூழ வந்தார். ஊடகங்களுக்கு நேர்காணல் த்தார். அதில் தலைவர் கலிஞர் கூறியதால் வந்ததாக கூறினார். ஓஹோ, இதுதான் அரசியலா என்று நமக்கும் புரிவதுபோல இருந்தது.

பிணவறையில் இருந்து வெளியே வந்த மருத்துவமனை ஊழியர்கள், மகேஷ், செடியை தேடினார்கள். "செங்கொடியின்" உடலை "குளிர் சாதன அறையிலிருந்து" வெளியே எடுத்து "பார்வைக்காக" வைக்கிறோம், வந்து பாருங்கள் என்றனர். மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பாக "அடிமட்டத்து ஊழியர்கள்" மக்கள் மன்றத்தினர் அனைவரையும் அறிந்தே வைத்திருந்தனர். தொடர்ந்து அடிப்படை மக்களுக்காக போராடும் மக்கள் மன்றத்தினர் மீது "மரியாதை" வைத்திருந்தனர். சென்கொடையும் தெரிந்தே இருந்தனர். அதனால் வழமையாக "அரசு மருத்துவமனையில்" வருகின்ற எந்த ஒரு "தொந்தரவும்" இந்த உணமையான " சமூகப் போராளிகளுக்கு" வரவில்லை பிணவறைக்குள் சென்று "செங்கொடி உடலை" பார்க்கும் மனோ நிலையில் "மகேஷ்" இல்லை. நாங்கள் பார்க்க புறப்பட்டோம். "ஜெசியை" போகவிடவேண்டாம் என்று "மகேஷ்" என்னிடம் கேட்டுக்கொண்டார். "ஜெசியாலும்" தாங்கமுடியாது என்பதே அவரது வாதம். ஜெசி கேட்கவில்லை. "ஜெசி, மகா, மேகலா" யாரையும் என்னால் தடுக்க முடியவில்லை. அவர்களும் உள்ளே வந்து பார்த்தனர்.


செங்கொடி உடல் எல்லாம் " எரிந்து" ஒவ்வொரு அங்குலமும் "கருத்து வெடித்து" காணப்பட்டது. உடலில் ஒரு இடம் கூட விடாமல் "பெட்ரோலை" ஊற்றிக் கொண்டுள்ளார். "தப்பித் தவறி" கூட தான் பிழைத்துவிடக்கொடாது என்பதாக அந்த "செய்கை" நமக்கு காட்டியது. தனது "திட்டத்தை" நிறைவேற்றுவதில் "அத்தனை திண்ணம்" அவரிடம் இருந்திருக்கிறது. இந்த சிறு வயதில் இப்படி ஒரு "அழுத்தம்". அதனால்தான் இன்று உலகெங்கும் அவள் "உயர்ந்து" நிற்கிறாள். அவளிடம் இருந்த "திட்டமோ" அதற்கான "வழிமுறையோ", அதை "நிறைவேற்றுவதில்" இருந்த "அழுத்தமோ" நம்மிடம் யொருக்கிறதா? என்ற கேள்விதான் எழுந்தது. அப்படியாக சில "விவாதங்கள்" அங்கே வந்தன. என்னுடன் சென்னையிலிருந்து வந்திருந்த நண்பர்கள் மத்தியிலிருந்து வந்த "கேள்விகள்" அதைதெளிவுபடுத்தின.

செங்கொடி உடலை சென்னை கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த நண்பர்கள் கூறினர். மக்கள் மன்றம் எப்படி முடிவு செய்கிறதோ அதன்படிதான் செய்யமுடியும் என்றது ஏன் வாதம். மக்கள் மன்றத்தைமதிக்கிறோம், அனால் சென்னை எடுத்து செல்வது மட்டும்தான் "பெரும எழுச்சியை" ஏற்படுத்த உதவும் என்பது வர்களது வாதம். நான் 1972 இல் பாளையம்கோட்டையில் நடந்த ஒரு சம்பவத்தை அவர்களிடம் நினைவு கூறினேன். அது லூர்துனாதன் என்ற சேவியர் கல்லூரி மாணவன் ஒரு மாணவர் போராட்டத்தில், காவல்துறையின் தொடர் "தடியடிக்கு" ஓடியபோது, " தாமிரபரணி" ஆற்றில் விழுந்து "சுழலில்" சிக்கி மரணமடைந்ததையும், அவரது "உடலை" நாங்கள் எடுத்து செல்லும்போது நடந்த சம்பவத்தையும் நினைவு கூற என்னை நிர்ப்பந்தித்தது. அப்போது உங்களுடன், "கவிஞர் கலாப்ப்ரியா" நண்பராக இருந்தாரா என்று வினவிய ஒரு இணை இயக்குனரிடம், "ஆமாம், கலாப்ரியாவும், நானும்" அந்த உடலை மாணவர்களுடன் இணைந்து "இரண்டாயிரம் பேர்" பேரணியாக எடுத்து சென்றோம் என்றேன். "கொக்கிரகுலத்திளிருந்து, பாளையம்கோட்டை வரை" நாங்கள் அந்த லூர்துனாதன் உடலை எடுத்து சென்றோம். காவல்துரைஎந்கலிடம் "உடலை கொடுத்துவிடும்படி" ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். சிறுமி செங்கொடி போல, அன்று நாங்கள் " புரட்ச்கர் " கருத்தியலில் கொண்ட அழுத்தத்துடன், " காவல்துறையை" லட்சியம் செய்யாமல் "தொடர்ந்து" எடுத்து சென்றோம். "கற்களால்" ஒவ்வொரு தெரு முக்கிலும் காவலர்கள் எங்கள் "லூர்துனாதன் உடலின் ஊர்வலத்தின் " மீது தாக்குதல் நடத்தி, மாணவர்களும், இளைஞர்களும், கலைய, கலைய கடைசியாக "உடலை" கைப்பற்றிவிட்டனர். அதையும் எதிர்த்தபோதுதான் "துப்பாக்கி சூடு" நடத்தினர்.

மேற்கண்ட "முன்னுதாரணத்தை" அந்த நண்பர்கள் ஏற்பதாக இல்லை. அங்கே "கொக்கிர குளத்திலிருந்து , பாளையம்கோட்டைக்கு" இடையிலேயே "நாற்பது " ஆண்டுகளுக்கு முன்பே "காவல்துறை" இப்படி செய்தார்களே, இப்போது "குறைந்தது காஞ்சியிலிருந்து சென்னை செல்ல" ஒன்றரை மணி நேரம் பிடிக்குமே " காவல்துறை" ஈன்வேல்லாம் செய்யும் என்பதே எனது வாதமாக இருந்தது. அதற்குள் மறைமலை நகரில் தங்களது மாநாட்டை முடித்து விட்டு, இரவு மூன்று மணிக்குமேல் வந்த தொல்..திருமாவளவன், மகேசிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது "சென்னை " கொடுசெள்ளவேண்டும் என்று "இயக்குனர் கவுதமன்" மகேசிடம் வலியிறுத்தினார். "இருளர் மக்கள்" தங்களுக்க " கம்யுனில்" இருந்துவந்து பணியாற்றிய "செங்கொடி" உடலை பார்த்து மரியாதை செய்யவேண்டும் என்று மகேஷ் கூறினார். அதுவே காஞ்சியிலே பெரும் எழுச்சியாக இருக்கும் என்று நாங்கள் கூறினோம்.

"காஞ்சியில்" எழுச்சி நடந்தாலும், "சென்னையில் நடக்கும் பெண் வழக்கறிஞர்களின் பட்டினிப் போராட்டத்தில்" இந்த செங்கொடி உடலை கொண்டுபோய வைத்தால் எழுகின்ற "எழுச்சி" பெரிதும் "உலகை உலுக்கும்" என்பது அவர்களது வாதமாக இருந்தது.அந்த வாதத்தில் "இயக்குனர் ராம், ரேவதி" ஆகியோர் இருந்தனர். இந்த "வாதப் பிரதிவாதத்தில்" இரவு மெல்ல நகர்ந்தது. சோர்வில் இருந்த "மகேஷ்,ஜெசி,மகா, மேகலா" ஆகியோர் ஒரு வாகனத்தில் "கதிர்ப்பூரில் " உள்ள மக்கள் மன்றத்திற்கு சென்றனர். அதற்குள் மதிமுக வை சேர்ந்த மல்லை சத்தியா, மாவட்ட செயலாளர் சோமு ஆகியோர் வந்துவிட்டனர். அவர்கள் "வைகோ"வை தொடர்பு கொண்டு பெசவைத்தனர். வைகோ சேலம் ஆகே "ஆத்தூரில்" நடந்த "கண்ணகி" நிகழ்வில், "செங்கொடி" பற்றி பேசிவிட்டு, "காஞ்சி" நோக்கி வந்துகொண்டிருந்தார். மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் முடித்து, "கொளத்தூர் மணியும், பேரா.சரஸ்வதியும்" வந்து கொண்டிருந்தனர். அவர்களும் "காஞ்சி" நோக்கிய பயணத்தில் இருந்தனர்.

இரவு மணி "நாலு" ஆகிவிட்டது. திருமா, முன்னால் ச.ம.உ. ரவிக்குமாருடனும், சிந்தனை செல்வம் உடனும் வந்திருந்துவிட்டு, காலை அவ்ருவதாக சொல்லி சென்றார். நானும் காஞ்சி தேவராஜுடன் மக்கள் மன்றம் அலுவலகத்துக்கு, மேலகதிர்பூர் மங்கலம்பாடிக்கு சென்று விட்டேன். நள்ளிரவுக்கு மேல், அதிகாலை "நாலரைமனிக்கு" பேரா. சரஸ்வதியும், கொளத்துர்மனியும், காஞ்சி மருத்துவமனை வந்தடைய, "வைகோவும்" அங்கேயே வந்தடைய, அனைவரும் "மங்கலம் பாடி" நோக்கி வந்தனர்அனவரும் அமர்ந்து " காலையில்" பிரேத பரிசோதனையை" முடித்து தரும்போது, மற்ற திட்டமிடுதலை செய்து கொள்ளலாம் என்று பேசி பிரிந்தோம்

No comments:

Post a Comment