Friday, September 2, 2011

தாயாய் இருந்து வளர்த்தவளை, தவிக்கவிட்டாயே?

மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வி. மகேஷ், உன்னை "தாயாக" இருந்து வளர்த்தாரே. செங்கொடி, நீ மக்கள் மன்றத்தின் " கூட்டு வாழ்க்கைக்கு" வந்த காலம் தொட்டு, மகேசுவின் உடல்நலத்தில் கவனம் எடுத்து, அவளை நேரத்திற்கு "மருந்து" சாப்பிட, "மாத்திரை" சாப்பிட அடம்பிடித்து "சம்மதிக்க" வைப்பாயாமே? இப்போது மகேஷ் அதை "சொல்லி, சொல்லி" அழுகிறாளே? மகேஷ் அன்று அந்த " 28 ஆம் நாள்" சென்னையிலிருந்து திரும்பியவுடன், மக்கள் மன்றத்தில் உன்னை தேடினாளே? உன்னையும் காணவில்லை, அந்த இரு சக்கர வாகனமான "எக்செலையும்" காணவில்லை என்றதும் "தவித்துப்போனாளே?"வ்வோருவரையும் ஒவ்வொரு பக்கம் அனுப்பி உன்னை தேடச்சொன்ன அந்த "தாயுள்ளம்" எப்படி "தவித்துப்போயிருக்கும்"? எண்ணிப்பார்த்தாயா? அதற்கெல்லாம் உனக்கு எங்கே செங்கொடி நேரம்? நீதான் "முழுமையாக" பேரறிவாளன், சாந்தன் முருகன், உயிர் காப்பில் உனது முழு கவனத்தையும் "திருப்பி" கொண்டாயே?

யாரோ வட்டாட்சிய அலுவலகத்தில் ஒரு சிறுமி "கொளுத்திக் கொண்டாராம்" என்று கூற, அங்கே ஓடினாளே அந்த மகேஷ்? அதாவது உனக்கு தெரியுமா, செங்கொடி? அங்கிருந்து காவலர்கள், மருத்துவமனைக்கு "எறிந்து கொண்டிருந்த" உடலை எடுத்துச் சென்றார்கள் என்று கேள்விப்பட்டு அங்கும் ஓடினார்களே? அதாவது உனக்கு தெரியுமா? செங்கொடி, நீதான் அதற்குள் "நிரந்தர நித்திரைக்கு" சென்று விட்டாயே? உனக்கு எப்படி இவையெல்லாம் தெரியும்? நான் சென்னையில் அப்போது மணி ஐந்தரை இருக்கலாம், கோயம்பேடு திருச்சி சவுந்தரராஜனின் "ஆடோ கேரேஜ்" வளாகத்தில், "கயலும், வடிவும், சுஜாதாவும்" மூன்று வழக்கறிஞர்களும், மூன்று தமிழர் உயிர் காக்க "பட்டினிப் போராட்டத்தில்" ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களது கூட்டத்தில் இருந்துவிட்டேனே?

அப்போதுதானே வழக்கறிஞர் "பாவேந்தன்" தொலைபேசி செய்தியை வைத்து, "காஞ்சியில் மக்கள் மன்றத்தின் செங்கொடி என்ற சிறுமி தீக்குளித்தார்" என்று அறிவித்தாரே? யாரோ, என்னிடம் "மக்கள் மன்றம் பற்றி அறிவிப்பு". கேட்டீர்களா?என்று கூறினார்களே? நான் நம்பவில்லை. ஏன் இப்படி "அறிவிக்கிறார்?" என்றுதான் எண்ணினேன். உடனே "மகேசிற்கு" தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். கிடைக்கவில்லை. "செங்கொடிக்கு என்ன நடந்தது?" என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். மகேஷ் "தொடர்பில்" வந்தாள். " மணிஅண்ணா, செங்கொடி தன்னை "கொளுத்திகிட்டா" என்று அலறினார். அந்த "அலறல்" உனக்கு கேட்டிருக்க "நியாயம்" இல்லை. நீதான் அண்ணன்மார்களான "பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோருக்கு "தயார்" செய்ஹ்டுகொண்டிருந்த "தூக்கு கயிறாய்" ஒரு கன்னி விடாமல் "அறுத்துக் கொண்டிருந்தாயே"? அதுகூட எங்களுக்கு "இப்போதுதானே" தெரியும். உனக்கு "அப்போது" மகேசின் "அழுகுரல்" எப்படி கேட்கும்?

அதிர்ந்து போன " நான்" அந்த கோயம்பேடு வளாக கூட்டத்தினர் மத்தியிலேயே, "வெடித்து, சிதறி" அழுதுவிட்டேன். நான் அழுவதை இதுவரை காணாதவர்கள், அப்போது "திகைத்து" என்னை காண்பது எனக்கு "புரிந்தது" அதுவே எனது "அழுகையை" நிறுத்த போதவில்லை. செங்கொடி, நீ ஒவ்வொருமுறையும் நான் "மக்கள் மன்றம்" வரும்போதும், அருகே வந்து நின்று கொண்டு " தோழர்" என்று கூறி ஒரு "சிரிப்பு" சிரிப்பாயே? அதுமட்டுமே நினைவில் "வந்துகொண்டிருந்தது". அது மட்டுமல்ல. இருபத்தொரு ஆண்டுகளாக என்னுடன் சேர்ந்து "புரட்சிகர" கருத்துகளை உச்சரித்துவரும் செல்வி. மகேசின் "அழுகுரலையும்" என்னால் "தாங்கமுடியவில்லை"> அதுவும் சேர்ந்து என்னை "நிலை குலைய" வைத்துள்ளது.

"கற்றது தமிழ்" திரைப்பட இயக்குனர் "ராம்" அங்கே இருந்தார். அவரது வாகனம் "காஞ்சி செல்கிறது"> நீங்களும் அதில் செல்லுங்கள் எனு கவிதா கூறினார். ராம் கூறினார். ராமின் உதவியாளர் "சாம்ராட்" கூறினார். கவிதா அவரது கணவர் முரளியிடம் கூறி என்னை " ஆற்றுப்படுத்த" சொன்னார். உன்னை "தடுக்க முடியாமல்" போன மூத்தவர்கள் நாங்கள் எப்படி எங்களை "ஆற்றுபப்டுதிக்கொள்கிறோம்" பார்? மீனவர் சங்க "பொன்னுசாமியும், மகேசும் " உடன் இருந்தார்கள். "நடைப்பிணம்" போல காஞ்சி செல்லப்போகிறோம் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது "சன் டி.வி.யில்" நீ இறந்துவிட்டதாக "அறிவிப்பு" செய்தார்கள். அதுவே எங்களை "மேலும்" கலக்கமடையச் செய்தது. கடைசியாக சென்னையை விட்டு "நாடக கலிஞர் ஸ்ரீஜித்து உடனும், திரை இயக்குனர் தாமிராவின் வாகனத்தில்" நாங்கள் காஞ்சி கிளம்பினோம். ஆனாலும் நீ உன் "தாய்" மகேசை இப்படி "தவிக்க" விட்டிருக்கக் கூடாது.

No comments:

Post a Comment