Friday, September 2, 2011

எத்தனை நாள் திட்டமிட்டாய் செங்கொடி?

மூன்று தமிழர் உயிர்காக்க நாம் எல்லோருமே குரல் எழுப்பி வந்தோம். யார் அதற்காக குரல் கொடுத்தாலும் அங்கே போய் நாமும்கழந்து கொண்டோம். இதுதானே செங்கொடி, நமக்குள் இருந்துவந்த ஒற்றுமை? ஆகஸ்ட் 18 இல் சென்னையிலிருந்து புறப்பட்ட நூற்றுகனக்கான இரு சக்கர வாகனங்களை," மூன்று தமிழர் உயிர் காக்க" பேரணியாக "மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்" ஒட்டி வந்தபோது,, காஞ்சியில் அதை வரவேற்க காத்திருந்த தோழர்கள், மூன்று மணி நேரம் முழக்கமிட்டதில், செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் "மேலோங்கி" இருந்தனவே? காஞ்சி வந்த இரு சக்கர வாகன பேரணியில், மற்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் கலந்து கொண்டு, வேலூர் நோக்கி செல்லும்போது, ஒரு வாகனத்தின் பின்புறம் அமர்ந்துகொண்டு, நீ "குறளை உயர்த்தி" முழக்கமிட்டாயாமே? எல்லா தோழர்களும் அந்த பேரணியில் உன்னுடைய முழக்கத்தை கவனித்திருக்கிரார்களே?
வேலூர் நகரில் "தொரப்படி சிறைக்கு" அருகே சென்ற போது, செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் ஒவ்வொரு தொழராலும் கவனிக்கப்பட்டுள்ளதே? நீ எந்த அளவு இந்த பிரச்சனையில், "மூன்று தமிழர் உயிர் காக்கும்" பிரச்சனையில், ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தாய் என்பதற்கு இவையெல்லாம் எங்களுக்கு "கண்ணாடி" போல தெரிகிறது. அப்போதே நீ உன்னை பற்றி உன் உயிர் பற்றி "தீர்மானித்துவிட்டாயா?" நீ அப்போதே "திட்டமிட்டு விட்டாயா" செங்கொடி? அடுத்து "மக்கள் மன்றம்" அகஸ்ட் 23 ஆம் நாள் வேலூரில் ஏற்பாடு செய்திருந்த "ஆர்பாட்டத்திலும், ஊர்வலத்திலும்" கலந்து கொள்ள நான் சென்னையிலிருந்து அவசர, அவசரமாக வந்தேன். மற்ற மக்கள் மன்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் இணைந்துகொண்டு முழக்கமிட்டாய், ஆனால் உனது "முழக்கங்கள்" அன்று வானதிர கேட்டனவே? அப்போதும் உனக்குள் எழும்பியிருந்த கிளர்ச்சி "வித்தியாசமாக" இருக்கிறதே என்று நாங்கள் எண்ணிப்பார்க்கவில்லையே?
அகஸ்ட் 26 இல், "மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கம்" ஒவ்வொரு மாவட்டத்திலும் "மனிதச் சங்கிலி" என்று அறிவித்திருந்தது. அதை காஞ்சியில் வெற்றிகரமாக ஆக்க " மக்கள் மன்றமும்" ஏனைய அமைப்புகளும் இணைந்து தயார் செய்தன. அந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில், வைகோ கலந்து கொண்டார். என்றைக்கும் இல்லாத அளாவுக்கு, செங்கொடி நீ வைகோ அருகில் போய் நின்று கொண்டு, "பெரும் சத்தத்துடன்" முழக்கங்களை எழுப்பினாயே? அப்போதுகூட நம் த்ழர்களுக்கு உன்னிடம் வந்திருக்கும் "ஆவேசம்" பற்றி எண்ணிப் பார்க்க முடியவில்லையே? அப்போதே நீ இந்த "திட்டத்தை" தீர்மானித்து விட்டாயா, செங்கொடி? இப்படி நீ தொடர்ந்து ஒரு வார காலமாக, "ஆவேசம்" அதிகம் வெளிப்படுத்தி, "பேரரவாலன், முருகன், சாந்தன்" ஆகியோரை காப்பாற்ற பெரும் அளவில் போராட்டங்களில் பங்கெடுத்து வந்தாயே? அவை எல்லாம் உன்னிடம் இப்படி "உன்னையே மாய்த்துக் கொள்ளும்" திட்டம் ஒன்று இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லையே?
செங்கொடி, நீ "எத்தனை நாள்" திட்டமிட்டாய்? என்று எண்ணிப் பார்க்க முடியாத "கையாலாகதவர்களாய்" நாங்கள் ஆகிவிட்டோம். எங்களை இப்படி "அழவைத்துவிட்டு" நீ மட்டும் "கொள்கை" தீப்பொறியை உடலில் தாங்கிச் சென்று விட்டாயே? நீ இளம் தழியாக மட்டுமில்லை. சிறிய தங்கையா மட்டும் இல்லை. நீ "உரிமை வேண்டும் தமிழர்களின்" ஒட்டுமொத்த தமிழர் தாயா?

No comments:

Post a Comment