"ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்" மத்திய அரசின் "நேரடி ஆட்கள்" என்பது உண்மைதான். அதுபோல "தமிழ்நாட்டில்" இருக்கும் அத்தகைய அதிகாரிகள் "கடந்த ஐந்து ஆண்டுகளில் "' அரச குடும்பத்தின் முறைவாசல்களாக "' செயல்பட்டார்கள் எனபதும் உண்மைதான். அதற்காக அந்த அதிகாரிகளுக்கு " அளவுக்கு மீறிய சுதந்திரத்தை" யார் கொடுத்தது? அட்டிஹ்தகைய அதிகாரிகளில் " முதலில் நின்று தவறு செய்பவர்" ராமநாதபுரம் டி.ஐ.ஜி. யாக இருக்கும் " சந்தீப் மிட்டல்" என்றால் அதைவிட ஒருபடி மேலே போய் " தவறு இழைத்தவர்"' தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் "' ராஜேஷ் தாஸ்". யார் இந்த ராஜேஷ் தாஸ்? இவர்தான் 1996 இல் "தூத்துக்குடியில் இரண்டு மீனவ இளைஞர்களை" தேவையற்று துப்பாக்கி சூடு நடத்தி " படுகொலை" செய்தவர். இவர்தான் தேனியில், டாக்டர் கிரிஷ்ணசாமியை ""பொய் குற்றம் சாட்டி கைது செய்து" அதன் விளைவாக ''தென் தமிழ்நாடு எங்கும கலவரம்" நடக்க காரணமாக இருந்தவர்.
இவையெல்லாமே அன்றைக்கு " உளவுத் துறை" தலைமையில் இருந்த இன்றைய "தமிழ்நாடு காவல்தலைவருக்கு தெரியுமே?"' அவர் எப்படி இவரை "தென்மண்டல ஐ.ஜி.யாக" அனுமதித்தார்? வேறு யாராவது அவரை "சிபாரிசு" செய்திருப்பார்களோ? அதனால் அந்த "ராஜேஷ் தாஸ்" உண்மை முகம் தெரிந்திருந்தும், அவரை "பெறும் அதிகாரிகளால்" தடுக்க முடியவில்லையா? அப்படியானால் அந்த ஆள் "அதற்குள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக"' ஆக்கி விடுவாரே? இன்று அந்த வேலையைத்தானே" தொடங்கி உள்ளார். அதனால்தான் இந்த "மனிதரை" தென் மாவட்ட ஐ.ஜி. பொறுப்பில் இருந்து "தூக்க வேண்டும்" என்று ''மனித நேய மக்கள் கட்சியி'ன்" சட்டமன்ற கட்சித் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இந்த "ராஜேஷ் தாஸ்" யாருக்காக வேலை செய்கிறார்? நிச்சயமாக "தமிழ்நாட்டு மக்களுக்காக "இல்லை.
ஆறு எஸ்.பி.கள் "யாரெல்லாம் ராமநாதபுரம்" பகுதிக்கு " இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சி" பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அனுப்பபட்டார்களோ, அவர்களை அனைவரையும் "உள்துறை செயலாளர்" மூலம் ஜெயலலிதா அரசு " துப்பாக்கி சூடு நடந்த இரவே இடமாற்றம்" செய்தது? தவறு செய்தவர்கள் அவர்கள் என்றால் ஏன் இடமாற்றத்துடன் மட்டுமே நிறுத்திக் கொண்டது? அவர்களில் ஒருவராவது "இடை நீக்கம்" செய்யப்படவில்லையே? அப்படியானால் மக்களை "ஏமாற்றத்தான்" அந்த இடமாற்ற உத்தரவா? சரி. "துப்பாக்கி சூட்டில்" கொலை செய்யப்ப்பட்ட "'தேவந்திர குல வேளாளர் மக்களை' கொலை செய்ததற்காக காவல்துறையினர்" மீது "கொலைகுற்றம்" பதிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று நடந்த "மதுரை வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சங்கத் தலிவர் ஏ.கே.ராமசாமி" பேசியிருக்கிறார். இதையும் தமிழக அரசு "அலட்சியம்" செய்யுமா?
உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதியை வைத்து "விசாரணை" நடத்த வலியுறுத்தி, பல அரசியல் தலைவர்கள் பேசியதையும் அரசு அலட்சியம் செய்யப் போகிறதா? "' டாக்டர் கிருஷ்ணசாமி" சொல்வதுபோல, 1989 ஆமாண்டின் "வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், 1995 இன் விதிகளின் படியும்" இறந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய "இழப்பீடு தொகையை"' ஏன் அரசு கொடுக்கவில்லை? ஏன் இன்னமும் கமுதியில் கொலை செய்யப்ப்பட்ட "'''மாணவன் பழனிகுமார்" கொலையை "வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்" சேர்க்க வில்லை? இவை எல்லாம் தெரிந்த உயர் காவல்துறை அதிகாரிகள் இருந்தும் கூட, யார் அவர்களை "தடுக்கிறார்கள்?" இந்த கேள்விகள் தமிழ்நாடெங்கும், "பட்டி, தொட்டி" எங்கும் எடுத்து செல்லப்படவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
A good and analytic write-up.This awareness should reach all.
Post a Comment