Monday, September 12, 2011

அரசை பாதுகாக்கும் அரசாங்கம் "மக்களை" இழந்துவிடும்.

அரசு என்பது ஒரு வன்முறைக் கருவி. அதில் "அதிகாரவர்க்கம்" கோலோச்சும். அரசியல் சட்டத்தின்படி "அதிகாரவர்க்கம்" செயல்படவேண்டும் என்பது "புளித்துப் போன பாலபாடம்". நடக்கும் செயல்கள் "அதிகாரவர்க்கத்தை" அம்பலப்படுத்துகின்றன. அதிகாரவர்க்கம் என்பது "ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை" தலைமையாக கொண்டது. அவர்களுக்கு "பொதுவாக" மனிதாபிமானம், மனித உரிமை, அடிமட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களை கொண்டாடுவது, "ஆகியவை "பிடிக்காது. அது அவர்களது "மனோநிலை". அந்த மனோநிலை அவர்களது "வளர்ப்பிலிருந்து" வருகிறது. வளர்ப்பு என்பது "பிறப்பை" தாண்டி அவரவர் "வளரும்" சூழலால் "தீர்மானிக்கப்படுகிறது". இந்தியாவின் அதிகாரிகள், "காடுகளிலும், ஆதிவாசிகள் மத்தியிலும், தலித் மக்கள் கிராமங்களிலும், கடல்வாழ் மீனவர் உடனும்" இணைந்த வாழ்க்கையில் "பயிற்றுவிக்கப்படுவதில்லை". குளிர் சாதன அறைகளிலும், மாட மாளிகைகளிலும், "பயிற்ச்சி" பெறுகிறார்கள். அவர்களுக்கு "இந்திய யதார்த்தங்கள்" தெரியவேண்டிய தேவை இல்லை.

அப்படிப்பட்ட "வருவாய்த்துறை, காவல்த்துறை" அதிகாரிகளை " சுமந்து கொண்டு" அரசு இயந்திரம் நிற்கிறது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் "அரசாங்கம்", அதன்மேல் போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அதில் இருக்கும் "அரசியல்வாதிகளுக்கு" தாங்கள் உட்கார்ந்திருக்கும் "அரசு இயந்திரம்" மக்களிடமிருந்து "ஆணியப்பட்டவர்களால்" நடத்தப்படுகிறது என்பது தெரியுமா என்பது நம்மக்கு "தெரியாது". அதுபோன்ற "ஒரு சூழல்" இப்போது தமிழ்நாட்டில் "அரங்கேறி" வருகிறது. அதில் ஒரு "சிறிய " உதாரணம் "பரமக்குடி" விவகாரம். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதைப் போல இந்த உதாரணத்தை வைத்து இந்த அரசு "எங்கே" போய்க் கொண்டிருக்கிறது என்றும் பார்க்கலாம்.

பரமக்குடி இருக்கும் "ராமநாதபுரம்" மாவட்டத்திற்கு "ஒரு காவல்துறை டி.ஐ.ஜி." இருக்கிறார். அவர் பெயர் "சந்தீப் மிட்டல்". அவர் "அழகிரியின்" வணிக பங்காளி என்பது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அவர் செய்த "சேட்டைகள்" உண்மையாகவே அம்பலப்ப்ட்டுவிட்டன. அவருடன் "இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு" உதவ "ஆறு ஐ.பி.எஸ். களை" தமிழக அரசாங்கம் நியமிக்கிறது. அதில் சென்னையிலிருந்து சென்ற "அடையாறு டி.சீ." ஏற்கனவே "ராமநாதபுரத்தில் கருணாநிதி ஆட்சியில்" எஸ்.பி.யாக இருந்தவர். அப்போது "தேவேந்திர குல மக்கள்" மீது "போர்" தொடுத்தவர். அதனால்தான் வரை "மன நோயாளி" என்று கிரிஷ்ணாசாமி சட்டமன்றத்தில் உரைத்தார். அப்படிப்பட்டவரை ஏன் இப்போது "பரமக்குடிக்கு" அனுப்பினார்கள்? அரசில் உள்ள எந்த "உயர் அதிகாரியும்" தங்களது சக அதிகாரியை "விட்டுக் கொடுக்க" மாட்டார்கள்.

அவ்வாறு "விட்டுக் கொடுக்காமல்" எடுத்த முடிவுதான் "அந்த ஆறு அதிகாரிகளையும்" அங்கே அனுப்பியது. "சம்பவம்" நடந்த அதாவது "துப்பாக்கி சூடு" நடந்த இரவே ஏன் "அரசாங்கம்" அந்த "ஆறு அதிகாரிகளையும்" இட மாற்றம் செய்யவேண்டும்? அவர்கள் "பிழை" செய்திருப்பதை முதல்வர் உணர்ந்ததால்தானே அபப்டி செய்தார்கள்? பிறகு ஏன் அவர்களை "பாதுகாத்து" சட்டமனரத்தில் ஒரு முதல்வர் "பேசவேண்டும்?". இங்கேதான் "அரசாங்கத்தை" நடத்தும் அரசியல்வாதிகள் "அரசை நடத்தும்" அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு "தவறான" கருத்தை முன்வைத்து, அதில் "மாட்டிக் கொள்கிறார்கள்". இப்படி மாட்டிக் கொண்டால், விரைவில் "மக்களது" கோபத்திற்கு உள்ளாவார்கள்.

1 comment:

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

EXCELLENT COMMENT

ஒட்டுமொத்த தேவர்சாதி காவல்துறை அதிகாரிகள் உடனே தெந்தமிழ்கத்தில் இருந்து வடதமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்
துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குகள் பதிவுச் செய்ய வேண்டும்

Post a Comment