Monday, September 12, 2011

அரசு என்பது "ஆதிக்கசாதி சார்பானது" என்கிறாரா முதல்வர்?

பரமக்குடியில் காவலர் துப்பாக்கி சூட்டில் "ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுபற்றி "சட்டமன்றத்தில்" பேசவேண்டும். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேறு "சட்டமன்றத்திற்குள்" இன்றும் வந்துவிட்டார். கண்டிப்பாக இந்த பிரச்சனை பற்றி "பேசாமல்" விடமாட்டார். அவரை "பேசவிடகூடாது" என் என்றால் அவர் "உண்மைகளை" பேசி விடுவார். உண்மை "கசக்கும்". அதாவது "அந்த வட்டார டி.ஐ.ஜி. யாக இருக்கும் "சந்தீப் மிட்டல்" என்ற திமிர் பிடித்த ஐ.பி.எஸ். அதிகாரி இந்த "'' கலவரத்தை திட்டமிட்டு நடத்தினார் என்ற ஒரு உண்மை இருக்கிறது. அவருக்கு உதவி செய்து வன்முறை களமாக பரமக்குடியை ஆக்கியது 'செந்தில்வேலன் 'என்ற அடையாறிலிருந்து இந்த இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிகாகவே" பரமக்குடிக்கு "அரசாங்கத்தால்" அனுப்பப்பட்ட "'ஒரு தேவேந்திர மக்கள் விரோத' காவல்துறை அதிகாரி.


மேற்கண்ட"உண்மைகளை"'இன்று காலையே வின் காட்சி ஊடகத்தில் நமது நிகழ்ச்சியில் சொல்லியிருந்தோம். ஆனால் அதை "முழுவதும்"மறைக்க காவல்துறையின் அமைச்சரும், முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதா சட்டமன்றத்தில் முயன்றுள்ளார் எனபதுதான் வேதனை. யாரையும் 'பேசவிடாமல் தான் மட்டுமே 'பேசுவதற்கு" பயன்படுத்துவதுதான் ''நூற்றுபத்தாவது" பிரிவின்படி சட்டமன்ற உரையாற்றுவது என்று அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் போலிருகிறது.
இன்று "சட்டமன்றத்தில்" இந்த தேவையற்ற துப்பாக்கிசூடு பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் விளக்க அறிக்கை கொடுக்க எழுந்திருந்த முதல்வர், " பரமக்குடியில் நடந்த இன மோதலில்" என்று தொடங்க "பரமக்குடி இமானுவேல் நினைவுக்கு" சென்று காவல்துறையால் திருப்பி அனுப்பப்பட்ட டாக்டர் கிரிஷ்ணசாமி, எழுந்து " அது இன மோதல் அல்ல" என்ற உண்மை செய்தியை சொல்லும்போது, அதை போருக்க மாட்டாத பாவை தலைவர் கிரிஷ்ணசாமியை உட்கார சொன்னார். அவைக்குறிப்பிலிருந்து அவரது "சொற்களை" நீக்குவதாக அறிவித்தார்.

அதன்பிறகு மீண்டும் எழுந்து கிரிஷ்ணசாமி உண்மைகளை சொல்லி, " மன நோயாளி எஸ்.பி..செந்தில்வேலனையும், டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டளையும் கைது செய்ய வேண்டும்" என்று கூறியவுடன் அதையும் "அவைக்குறிப்பில்" இருந்து நீக்கி, கிரிஷ்ணசாமியை உட்காரும்படியும், இல்லாவிடில் அவையிலிருந்து "வெளியேற்றுவேன்" என்றும் பேரவை தலிவர் கூற, கிரிஷ்ணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். இதிலிருந்து நமக்க ஒன்று உறுதிப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த உண்மை "பரமக்குடியில் காவலர்களுக்கும், தேவேந்த்ரகுல வேளாளருக்கும்" இடையில்தான் மோதல் நடந்தது என்பது. ஆனால் முதல்வருகு மட்டும் " பரமக்குடியில் இன மோதல் நடந்தது" என்று தெரிந்திருகிறது என்றால், "அரசும், தேவேந்திர குல மக்களும் மோதும்போது" அந்த மோதலில், பலியான 'தேவேந்த்ரகுல" மக்களுக்கு எதிராக செயல்பட்ட "அரசு" மற்றொரு "'இனத்தின் கருவி எண்பதை ""அழகுபட" அறிவித்து விட்டார்.

அதனால் இனி நாம் அரசு என்பது எல்லா மக்களுக்கும் "சாதி வேறுபாடு" இல்லாமல் இயங்கும் ஒரு கருவி என்ற "தவறான எண்ணமே" வேண்டாம். குறிப்பாக "த்யமிழக்க அரசு" என்பது இப்போது " தேவேந்த்ரகுல மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினுடையது" என்பதைத்தான் அப்படி முதல்வர் அறிவித்துள்ளார் என்று நாம் எடுத துக்கொள்ளலாமா?" அப்படி எடுத்துக் கொண்டால் ஒடுக்க'ப்பட்ட சமூகம் அரசுக்கு எதிராக போராடி மட்டும்தான் தனது "உரிமைகளை"பெற்றுக் கொள்ள முடியும். அமர்வு நீதிபதியை வைத்து "விசாரணை" செய் என்று எல்லோரும் கேட்கும்போது, ஒய்வு பெற்ற நீதியரசரை" அரசு அறிவித்திருப்பது இன்னொரு பித்தலாட்டம் தானே? அரசே செய்த வன்முறையை" அரசே''விசாரிக்குமா?"' இது மாபெரும் " நகைச்சுவை".

1 comment:

யுவகிருஷ்ணா said...

அம்மாவை மயிலிறகால் தடவிக்கொடுத்து விமர்சிக்கும் உங்கள் விமர்சனப்பாணி அருமை :-)

Post a Comment