குதிரை வண்டியை வைத்தே நமது "கிராமங்களில்" பல "பழமொழி" சொல்வார்கள். ஆங்கிலத்தில் கூட, " கம்பும், கேரெடடும் " என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, "குதிரைக்கு" முன்னால் "கேரெட்டை" கட்டிவிட்டு, அதை நோக்கி அந்த குதிரை ஓடிக்கொண்டே இருக்க, தானாகவே அந்த குதிரையில் கட்டியுள்ள வண்டி நகரும்.என்பதுதான் அதன் பொருள். அதை அப்படியே பயன்படுத்தி, ஆங்கிலத்தில் "கம்பும், கேரெட்டும்" கொள்கையை "ஆள்வோர்" பின்பற்றுகிறார்கள் என்பார்கள். அதாவது "ஒருபுறம் அடித்துக் கொண்டே" இன்னொரு புறம் "சலுகை" கொடுப்பது என்று பொருள். அதேபோல "குதிரைக்கு முன்பு வண்டியை கட்டுகிறார்கள்" என்றும் ஒரு பழமொழி உண்டு.
அந்த "பழமொழியை" நமது சிதம்பரத்தின் உள்துறை இப்போது பயன்படுத்துகிறது என்று தெரிகிறது. அதாவது சிதம்பரத்தின் "உள்துறை அமைச்சகம்" மூலம் அவர் முதலில் "அப்சல் குருவிற்கு" மரணதண்டனையை அறிவிக்கும் ஏற்பாட்டை "குடியரசு தலைவர்" மூலம் செய்தார். அடுத்து உடனேயே, "தமிழ்நாட்டில் உள்ள மூவருக்கும்" மரணதண்டனையை உறுதிப் படுத்த ஏற்ட்பாடு செய்தார். அதை அடுத்து "பஞ்சாபில்" உள்ள சீக்கியரான தேவ் புல்லாருக்கு மரன தண்டனை உறுதிப் படுத்தினார். அதில் "தமிழகம்" முதலில் விழித்ஹ்டுக் கொண்டு, "சட்டமன்ற தீர்மானம்" போட்டு "மரண தண்டனையை". குடியரசு தலைவரே "ஆயுள் தண்டனையாக" குறையுங்கள் என்று கேட்டுக் கொண்டது. உடனேயே அதுவே "காஷ்மீர் சட்டமனரத்தில்" வெடித்தது. அது அப்படியே "பஞ்சாபிற்கும்" நீளும். ஜனநாயக ரீதியாக "தனது முடிவுகளுக்கு" எதிர்ப்பு வருவதை சிதம்பரம் விரூம்பவில்லை.
அதன்விளைவே "டில்லி வெடிகுண்டு" வெடித்தது. அவசர, அவசரமாக "ஏற்பாடு "செய்ததநாளோ என்னவோ, இதுவரை "யார்" குண்டு வைத்தார்கள் என்று வெளியே சொல்லமுடியாமல் உள்துறை திணறுகிறது. இதுபோன்ற "வில்லங்கமான " நிலைமைகள் வரும்போதெல்லாம், "காங்கிரஸ் கட்சியில்" எதிர்ப்பு இருந்தாலும், சிதம்பரத்திற்கு "பா.ஜ.க." உதவி செய்வது உண்டு. "அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்" விசயத்திலும் அதுபோல "நடந்திருகிறது" ஒன்று இந்த டில்லி குண்டுவெடிப்பை 'சிடஹ்ம்பரதிற்கு" உதவும் பொருட்டு, பாஜக கும்பல் வைத்திருக்க வேண்டும். அல்லது 'உள்துறையின்" நேரடி கை இதில் இருக்க வேண்டும் எண்பதை நாம் கடந்த "இரண்டு" கட்டுரைகளில்" தெளிவுபட கூறியிருந்தோம். இப்போது அடுத்த கட்ட "ஊடக பரப்புரையை" சிதம்பரம் அவிழ்த்து விடுகிறார்.
முதலில் "ஹுஜி" அடுத்து "இந்திய முஜாஹுதீன்"> அடுத்து "ஜெய்ஷே முகமது". அடுத்து "லஷ்கர் ஈ தொய்பா". இப்படி எல்லாமே "காஷ்மீர் அமைப்புகள்". ஆகவே "அப்சல் குரு" மீது "தீவிரவாத" முத்திரை குத்தி விடலாம். அடுத்து "தமிழ்நாட்டின் மூன்று தமிழருக்கு" என்ன செய்? என்று சிதம்பரம் சிந்திக்கிறார். இப்போது ஆங்கில ஊடகங்களில் "விடுதலைப் புலிகள்" விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எல்லா மாநிலங்களுக்கும் சொல்லியிருகிராராம். ஆரம்பிச்சுட்டாரா? அவரது வேலையை? அடுத்து "பஞ்சாபின் புல்லாரா" விசயத்திற்கு என்ன செய்? உடனே "பாபர் கல்சா" இயக்கம் மீதும் சண்டேஹ்கம் உள்ளது என்று கிளப்பி விடுகிறார். எல்லாமே "மரண தண்டனை "அறிவிக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய "குற்றப்பத்திரிகை" குற்றச்சாட்டுகள்தான் இப்போது புரிகிறதா? டில்லி குண்டு யார் வைத்தது? எதற்காக வைத்து என்று? எல்லாம் 'சிதம்பர ரக சியம்"தான்.
சரி. மரண தண்டனையை அறிவித்து விட்டு பிறகு இந்த "குண்டுவெடிப்புகள்" பற்றிய "கருத்து குண்டுகளை" போடும் சிதம்பரம் அண்ணாச்சி, உங்களுக்கு "வண்டிக்கு பின்னால் குதிரையை" கட்டுகிறோம் என்பது தெரியவில்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment