நேற்று "டில்லிக்கு" அடுத்த "சான்று" இன்னொரு இணைய அஞ்சல் கிடைத்துள்ளது. இது "வெடி வைத்தது" நாங்கள்தான் என்று "இந்திய முஜாஹுதீன் " என்ற அமைப்பும் ஒரு "இணைய அஞ்சலை" அனுப்பியுள்ளதாக "கொடுக்கப்படும் தகவல்". இந்த "அமைப்பு" பற்றியும் நமது "மத்திய "உளவுத்துறைகள்" ஒவ்வொரு "வெடி விபத்திலும்" கண்டுபிடிக்க முடியாத "கட்டங்களில்" சொல்லிவந்ததுதான் "நமக்கு" தெரியும். "இந்திய முஜாஹுதீன்" என்ற அமைப்பின் செயல்பாடுகளைஆற்றி ஒன்றும் "அறியாது" இருக்கும் நமக்கு, நமது "உளவு துறைகள்" அவ்வப்போது தருகின்ற "புலனாய்வு" தான் புலப்படுத்தியுள்ளது. :ஹுஜி" பற்றியும் நமக்கு "உளவு துறைகள்" சொல்லித்தான் தெரியும். இந்த இஅரண்டு அமைப்புகளையும் "பயங்கரவாத" அமைப்புகள் என்று "திரும்ப, திரும்ப" சொல்லி, உளவு துறைகள் "கவனமாக " கசியவிட்ட செய்திகளை "அப்படியே" அள்ளிக் கொண்டு, ஏடுகளும், காட்சி ஊடகங்களும் "வெளியிட" அதையே "நம்பி" வாழும் அப்பாவி பொதுசனம்தானே நாம்?
இப்போதாவது "செய்திகளுக்கு" இடையில் உள்ள "உண்மைகளை" ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கலாமா? அதாவது இதுவரை எத்தனையோ "குண்டு வெடிப்புகள்" இந்தியாவில் நடந்தும்கூட, அவற்றில் "பலவற்றை" இன்னமும் "யார் செய்தார்கள்" என்று கண்டுபிடிக்காத நிலைதான் உள்ளது. அதிலும் "முக்கியமாக" டில்லி உயர்நீதிமன்றத்தில், மே மாதம் 25 ஆம் நாள் "நடந்த" குண்டுவெடிப்பு பற்றி இன்னமும் "கண்டுபிடிக்கவில்லை". கண்டுபிடிக்காதது மட்டுமில்லை,அந்த "இடத்தில்" ஒரு "சீ.சீ.டி.வி. கேமெரா " கூட வைக்கவில்லை. "யாரும்" அந்த வெடிப்பில் சாகவில்லை" என்பதுதான் "காரணமா?" அல்லது "தன்களுக்கு" தெரிந்த "சக்திகள்தான்" வைத்தார்கள் என்பது "காரணமா?" அதேபோல இதுவரை ஏன் "டில்லி ஜூம்மா மசூதி" முன்னால் நடந்த ' குண்டுவெடிப்பையும்' , யார் செய்தார்கள் என்று இதுவரை "கபடு பிடிக்கவில்லை". மசூதி முன்னால் நடந்த "குண்டுவெடிப்புக்கு" எந்த "இந்துத்துவா" அமைப்பையும் "குற்றம்" சாட்டாத இந்த "உளவு துறையினர்" எதற்காக "உயர் நீதிமன்ற " குண்டு வெடிப்புக்கு, "அவசர, அவசரமாக" முஸ்லிம் அமைப்புகளின் பெயர்களை "வெளியிடுகிறார்கள்?". அதையும் நமது "ஊடகங்கள்" பெரிதாக விளம்பரப்படுதுகிறார்கள்?
"கண்டுபிடிக்க முடியாத" குண்டு வெடிப்புகளுக்கு "ஹுஜி" அமைப்பையும், "இந்திய முஜாஹுதீன்" அமைப்பையும் "உடனடியாக" குற்றம் சாட்டும் நிலையை "உறவாககும்" உளவு துறையினர், இந்த இரு மைப்புகளையும் "கற்பனையில்" உருவாக்கி வைத்துள்ளனரா? அல்லது இவை இரண்டும் உணமையிலேயே இயங்கி வருகின்றனவா? என்ற கேள்விகூட நமக்கு எழுகிறது. இன்று காலை அந்த "அண்ணாசாலை ஆங்கில ஏடு" ஒரு ஆய்வு கட்டுரையே வெளியிட்டுள்ளது. அதாவது "இந்திய முஜாஹுதீன்" அமைப்பு ஒரு "அரசியல் அறிககையை" வைதுக்கொண்டுள்ளதாம். அதில் அவர்கள் "இந்தியாவில் இயங்கும் நீதிமன்றங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக தீர்ப்பு" கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளனராம். அய்யா, அதை சொல்வதற்கு ஏன் "இந்திய முஜாஹுதீன்" வரவேண்டும். முறையாக ஏடுகள் படகும் "யாரும்" இந்த கருத்தைதானே சொல்வார்கள்? அதுமட்டுமின்றி, "முஸ்லிம்களே, இன்னமும் இந்தியாவில் உள்ள ஆர்சியல்வாதிகளையும், நீதிமன்றங்களையும்" நம்பிக் கொண்டு இருக்காதீர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறதாம். இதே "கருத்தைதானே" நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? முச்ளிம்குக்கு மட்டுமா, எல்லா ஏழை ம்க்களுக்கும் இதைத்தானே "சொல்லவேண்டி " இருக்கிறது.
அடுத்து இன்று "அங்கில ஏடுகளில்" குற்றம் சாட்டப்படும் "ஹுஜி" அமைப்பு, :ஜைஷே முகமது" என்ற "காஷ்மீர் விடுதலை அமைப்புடன் " தொடர்பு கொண்டு இதை செய்திருக்கலாம் என்ற "சந்தேகத்தை" விதைதிருகிரார்கள். அதேபோல, சந்தேகிக்கப்படும் "ஹுஜி" அமைப்பு, "லஷ்கர் ஈ தொய்பா"வுடன் இணைத்து இந்த "குண்டுவெடிப்பை" செய்திருக்கலாம் என்று "ஒரு சந்தேக குண்டை" போட்டிருகிறார்கள். இதில் "லஷ்கரும், ஜைஷே முகமது"வும் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் " என்று இந்திய அரசு கூறும் "விடுதலை பெற்ற காஷ்மீர்" பகுதியில் இருந்து செயல்படும் "காஷ்மீர் விடுதலைக்கான" ஆயுதம் தாங்கிய அமைப்புகள்.அவர்கள் ஏன் "டில்லி உயர் நீதிமன்றத்தில்" குண்டு வைக்க வேண்டும் என்பது ஒரு புரியாத "புதிர்". இவ்வாறு "டில்லி குண்டுவெடிப்பை" எப்படியோ "காஷ்மீர் விட்தளையுடன்" முடிச்சு போட்டு விட்டோம் என்று ஆள்வோர் திருப்தி படலாம். ஆனால் மக்கள் நம்ப வேண்டுமே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment