Wednesday, September 7, 2011

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.
நாம் சந்தேகப்பட்டது "பாதி" சரி என்பதுபோல, "நிகழ்வுகள்" நடந்துகொண்டு இருக்கின்றன. இப்போது "ஹுஜி" என்ற அமைப்பு "தான்தான்" வெடிகுண்டு வைத்ததாக ஒரு "இணைய அஞ்சல் " அனுப்பியுள்ளது என்பது ஒரு செய்தி.இந்த "ஹுஜி" அமைப்பு பற்றி நாம் சொல்லியாக வேண்டும். சமீப காலமாக இந்தியாவிற்குள் நடந்த ஒவ்வொரு வெடிகுண்டு விபத்திலும், "கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற நிலையில் இந்திய உளவுத்துறைகள் கடைசியாக அது "ஹுஜி" அமைப்பின் "கைவரிசை" என்று குற்றம் சாட்டியுள்ளனர். அந்த "ஹுஜி" அமைப்பு என்பது, "ஹர்கத் -உள்-ஜிஹாத் இஸ்லாமி"என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு "வந்காலதேசதிளிருந்து" இயங்குகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இப்போது வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், "கைதிகள் பரிமாற்றம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் "பதிக்கப்படும்: இயக்கங்கள் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார்களா என்ற கேள்வியை நாம் சென்ற "கட்டுரையில்" கேட்டிருந்தோம். அதையொட்டியே அந்த "இணைய அஞ்சல்" அனுப்பியவர்களும் சிந்தித்ததால் அப்படி கூறிவிட்டனரா?

அடுத்து "அப்சல்குரு"வின் மரண தண்டனையை "ஆயுள் தண்டனையாக " குறைக்க "காஷ்மீர்" சட்டமன்றம் "தயார்" ஆகிவரும் நேரத்தில் இந்த "குண்டு" வெடித்துள்ளதால், மரண தண்டனையை "அப்சல் குருவிற்கு" கொடுக்க விரும்பும் "சக்திகள்" இதை செய்திருக்கலாம் என்று நாம் சந்தேகப்பட்டோம். இப்போது அந்த "இணைய அஞ்சல்" உண்மையானதுதானா என்று சோதிப்பதாக இந்தியாவின் "தேசிய ஆய்வு அஜென்சி " தலைவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இந்த "குண்டை" வைத்திருந்தால் அதை " ஒரு பயங்கரவாதி" அமைப்பு மேல் போடும் தந்திரத்தை "காங்கிரஸ் சார்பு தேசிய ஆய்வு அஜென்சி" ஏற்றுக் கொள்ளாது. அதுமட்டுமின்றி, எல்லோருக்கும் தெரிந்த பகுத்தறிவு என்ன என்றால், "அப்சல்குரு" வை "தூக்கில் போட" விரும்பும் சக்திகதான் இந்த "குண்டை" வைத்திருக்க முடியும். அதுவும் வந்த "இணைய அஞ்சல்" அப்சல் குருவை தூகிலட்க் கூடாது என்று எழுதியுள்ளதாம். இந்த "கதையை" நம்ப இதியாவில் மட்டுமல்ல உலகிலேயே எந்த "முட்டாளும்" இன்று இல்லை. ஏன் என்றால் அப்சல்குருவிற்கு "தூக்கு" போடுவதை எதிர்த்து, சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாக ஒரு "சட்டமன்றமே" தயார் ஆகும்போது, யாராவது "மடையன்" ஒரு குண்டை போட்டு அதை கெடுப்பானா? அதனால் "ஹுஜி" ஒன்று இயங்குவது உண்மையாக் ஐருந்தாலும் அவர்கள் இந்த "நேரத்தில்" இந்த குண்டை போட மாட்டார்கள்.

அடுத்து மாட்டுபவர் "சிதம்பரம்"தான். அவர்தான் "உள்துறை". அவரது உளவுத்துறை என்ன வேலை செய்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது "உள்துறை டில்லி காவலருக்கு: ஜூலையிலேயே இப்படி ஒன்று நடக்கும் என்று கூறிவிட்டோம் என்கிறது. அப்படியானால் இவர்களுக்கு தெரிந்துதான் இது நடந்துள்ளது. அப்புறமும் ஏன் 'டில்லி இயற்நீதிமன்றத்தில்" கேமராக்கள் பொருத்தவில்லை என்று அடுத்த் அக்கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பொறுத்த திட்டம் உள்ளது என்கிறார்கள். அப்படியானால் "இந்த குண்டை" முதலில் வைத்துவிட்டு, பிறகு "கெமர" பொருத்தலாம் என்று இருந்தார்களா? அப்படியானால் "குண்டு" வைத்தவர்களும், "கேமரா" போருத்தவேண்டியவர்களும் ஒரே இடதிளிருந்துய் "இயங்குபவர்களா?" அப்பப்பா, இந்தியாவினின் "தலைநகரில்" உள்ள "பார்ப்பனீய சக்திகளின்" கைவண்ணங்கள் "தலையை" சுற்றுகின்றன.

No comments:

Post a Comment