Wednesday, September 7, 2011

டில்லி வெடிகுண்டு ஆர்.எஸ்.எஸ். வைத்ததா?

சமீபத்திய நடவடிக்கைகள், உதாரணமாக அது "சீ.பி.ஐ. சோதனையாக இருக்கட்டும், சீ.பி.ஐ. கைதாக இருக்கட்டும், குண்டு வெடிப்பாக இருக்கட்டும், அதற்கான கைதாக இருக்கட்டும், உள்துறை செயலாக இருக்கட்டும், குடியரசு தலைவரின் கருணை நிராகரிப்பாக இருக்கட்டும்" எல்லாமே "ஏதாவதொரு அரசியல் காரணங்களுகாக" செயப்படும் செயல்கள் என்பது அம்பலமாகி வருகிறது. ஒன்று "அரசியல் கட்சிகளுக்குள்" அல்லது "ஆளும் கட்சியின் கோஷ்டிகளுக்குள்", அல்லது "மாநில ஆட்சிகளுக்கு" எதிராக, அல்லது "அண்டை நாட்டுக்கு" எதிராக என்பதாக அம்பலப்பட்டு வருகிறது. இதில் இன்றைய டில்லி வெடிகுண்டு வெடிப்பு எந்த " ரகத்தை" சேர்ந்தது?" என்பதே கேள்வி.

உச்சநீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்து பத்துக்கு மேற்பட்டோர் பலி என்ற செய்தி நிச்சயமாக அதிர்ச்சி தருகிறது. டில்லி இப்போது " ஐக்கிய அசாம் விடுதலை முன்னனி" என்ற "தடை" விதிக்கப்பட்ட புரட்சிகர அமைப்புடன் பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது "பேச்சுவார்த்தை" நடத்திக் கொண்டிருகிறது. அதற்கு "குந்தகம்" விளைவதுபோல டில்லியின் கரங்களில் உள்ள " இரண்டு உளவுத்துறைகளும்" வெடி வைக்கும் வேளையில் இறங்குவார்களா? என்பது சந்தேகத்தை கொடுகிறது. அந்த குறிப்பிட்ட பேச்சுவார்த்தையில் "கலந்துகொள்ளாத" தலைமறைவு அமைப்புகள் இதை செய்திருப்பார்களா? உல்பா வுடனான பேச்சுவார்த்தையை உடைக்க இப்படி செய்வார்களா? என்றால் அதற்கு அதிக " நியாயம்" இல்லை. அதேசமயம் வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் " கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்" கைஎழுதிட்டிருகிறார். இது "வட கிழக்கில்" உள்ள அணைத்து "தலைமறைவு ஆயுதம் தாங்கிய" அமைப்புகளையும் "நெருக்கடிக்குள்" தள்ளும் முயற்சி. அதனால் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி செய்திருப்பார்களா? என்றால் அதற்கும் அதிக "நியாயம்" இல்லை. ஏன் என்றால் "ஒவ்வொரு" அமைப்பாக பேச்சுவார்த்தை நடத்த டில்லி "தயார்" என்ற் அறிவிததிருகிறது.

அப்படியே இருந்தாலும் "வட கிழக்கின்" எந்த ஒரு அமைப்பும் அவர்கள் பகுதியில்தான் இப்படி "வெடிக்கும்" வேலையை செய்வார்கள். அப்படியானால் "யாருக்கு மேற்கண்ட பேச்சுவார்த்தையால்" அதிக கோபம்? அது "இந்துத்துவா" அமைப்புகளுகுதான். ஏன் என்றால் அவர்கள்தான் சமீப காலமாக "வட கிழக்கில்" மீன் பிடிக்க நுழைந்தவர்கள். அதுமட்டுமின்றி, " காஷ்மீர்" இப்போது பற்றி எரிகிறது. "அப்சல்குரு" வின் நியாயங்கள் எதிரகட்சியான "மக்கள் ஜனநாயக கட்சி" தலைமையான "மக்பூபால்" பேசபடுகிறது. சட்டமன்ற தீர்மானம் வரை "அப்சல் குருவை" காப்பாற்ற பரிசீலிகப்படுகிறது. இதை "அதிகம்" விரும்பாதவர்கள் "இந்துத்துவா" வாதிகள். அரசியல் ரீதியில் விரும்பாதவர் இந்த "மரண தண்டனைகளை" நிறைவேற்ற துடிக்கும் "சிதம்பரம்". இந்த இருவரில் யாரோ இப்படி "டில்லியில் குண்டுவைத்து" இந்திய மக்களின் மனப்போக்கையே திருப்பிவிட முயற்சிக்கலாம்.

அதன்மூலம் "பயங்கரவாதிகளை" தூக்கில் போடவேண்டும் என்ற "கிளிப்பிள்ளை" படத்தை திரும்ப படிக்கலாம். அல்லது "பயங்கரவாதிகளுடன்" பேச்சுவார்த்தை வேண்டாம் என்ற "கிளிப்பிள்ளை" பாடத்தை திரும்ப படிக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். யார் மீது ஆள்வோர் குற்றத்தை சுமத்துகிறார்கள் என்று.

No comments:

Post a Comment