கூடங்குளம் அணு உலை "பாதுகாப்பாக" இருக்கிறது என்ற "ஞானோதயத்தை" சென்ற வாரம் "பதிமூன்றாம்" நாள் அறிவித்த "ஜெயலலிதா" , அதனால் "மீனவ மக்கள்" ஒழுங்காக "வீட்டிற்கு போங்கள்" என்று அறிவுறுத்திய "ஜெயலலிதா" இன்று " வட்டார மக்களின் பாதுகாப்பின்மையை" மத்திய அரசும், அணு சக்தி துறையும் "போக்குவதில்" அக்கறை ச்ளுத்தவில்லை என்று கூறியிருப்பது "பல்டியா?". பல்லாயிரக்கணக்கில் மீனவ மக்கள் உட்பட, வட்டாரத்தின் நாடார் சமூக மக்கள் உட்பட, அனைத்து மக்களும் ஒன்றாக "அணு உலையை" எதிர்ப்பதை கண்டு "மனம் மாறிவிட்டாரா?". கிறித்துவ சாமியார்கள் மட்டுமின்றி, "பேராயர்களும்" சேர்ந்து போராடுவதால் மனம் மாறினாரா? வைகோ மட்டுமின்றி, நேற்று விஜயகாந்த் கூட, "மக்கள் பக்கம்" வந்து நின்று கொண்டதை கண்டு, தன்னை மாற்றிக் கொண்டாரா? முஸ்லிம்கள் பக்கம் நேற்று " எஸ்.எம்.பாக்கர்" போன்றவர்களும் இறங்கி "அணு உலையை" எத்ரித்து போராட வந்ததால், இப்போது மாறிவிட்டாரா? மேத்தா பட்கர் இன்று வைக்கிறார் என்பதால் அதற்கு முன்பே தனது எதிர்ப்பையும் தெரிவித்துவிட எண்ணி "மாற்றி" பேசுகிறாரா?
மீனவ மக்கள் இன்று "தூத்துக்குடி" கிராமங்களை விட்டு வெளியேவந்து, "அமளி நகரில்" பத்தாயிரம் பேர் "பட்டினிப் போராட்டம்" என்று அமர்ந்து விட்டதால் " நிலையை" மாற்றினாரா? நேற்று முதல் "கன்யாகுமரி" மாவட்டத்திலும் போராட்டங்களை தொடங்கி விட்டார்கள் என்பதால் "ஜெ" மாற்றி பேசுகிறாரா? இப்போதும் "அணு உலையே" வேண்டாம் என்று அவர் கூறவில்லையே? மத்திய அரசே "காரணம்" என்றுதானே கூறுகிறார்? கடந்த காலத்தில், " விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை" ரத்து செய்த போது, "நாடாளுமன்ற தேர்தலில் "தோல்வி" கண்டார். உடனேயே "இலவச மின்சாரத்தை" திரும்ப கொண்டு வந்தார். அது "படிப்பினை". அதேபோல இப்போது ஆட்சிக்கு வந்த உடனே "ஆளுநர் உரையில்" மரபணு மாற்று பருத்தியை படிப்படியாக கொடுவருவோம் என்று இருந்தது. அதை எல்லோரும் எதிர்க்கும் போது, " ஜெயும் தேர்தலுக்கு முன்பு" எதிர்த்தார் என்று ஊடகங்களில் சொன்ன பிறகு, அதை " வராது" என அறிவித்தார். அது "பல்டி".
பரமக்குடி துப்பாக்கி சூட்டை "நியாயப்படுத்தி" அதை அதிமுககாரர்களே மறுக்கும் அளவில் நடந்தது "இன மோதல்" என்றார். அதை இன்னமும் "திரும்ப பெறவில்லை". ஆனால் "கூடங்குளம்" பற்றிய தன் கருத்தை இப்போதைக்கு "மாற்றிக் கொண்டுள்ளார்". இது "நிரந்தரமானதும்" அல்ல. அப்படியானால் இது "பல்டி அல்ல": படிப்பினைதான். ஆனால் "தற்காலிக படிப்பினை" என்று கூறலாமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment