Wednesday, September 28, 2011

"போர்" அறிவித்துள்ளார்களா " அதிகாரிகள்?".

பரமக்குடியில் நடந்த "இனப் படுகொலை" ஏதோ சாதாரணமாக "காவல் துறை" நடத்தும் "அழக்கமான" படுகொலைகளை ஒத்தது அல்ல. "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் ஒரு "போர்குணமிக்க உழவர் படை". அந்த போர்குணமிக்க "உழவர்கள்" தமிழ்நாட்டில் இருக்கும் "உழவர் கூட்டத்திலேயே" முன்னோடிகளான உழைக்கும் மக்கள். தமிழர் திருவிழா என்று "பொங்கல்"நாளை கொண்டாடும் வழக்கமே, அது " அறுவடைத் திருநாள்" என்பதால்தான். அந்த அறுவடைத் திருநாளுக்கு "யாருக்கு" நன்றி சொல்லவேண்டும் என்று தமிழர்கள் எண்ணும் போதெல்லாம் "உழவர்களுக்கு " என்று பதில் வரும். அத்தகைய "உழவர்களில்", நிலமற்றவர், சிறு நிலம் உடையவர், நடுத்தர விவசாயி, பணக்கார விவாசாயி என்ற வகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த "தேவேந்திர குல வேளாளர்கள்" எனப்படுவோர், "உழைக்கும் விவசாயிகளாவர்". அதாவது அவர்கள் "சிறு, நடுத்தர, பணக்கார விவசாயிகளின்" பிரிவுகளில் வருவார்கள். அவர்களில் "நிலமற்றவர்கள்" இருந்தாலும், அனேகமாக " சிறிய அளவு நிலம் வைத்திருக்கும்" விவசாயிகள் "அதிகமாகவே" இருப்பார்கள்.


அப்படிப்பட்ட "ஒரு போர்குணமிக்க" விவசாயிகளுடன் "நீ" மோதுகிறாய் என்பதை, சம்பந்தப்பட்ட "அதிகாரிகளுக்கும்", அவர்களைப் பாதுகாக்கும் "அரசுக்கும்", அந்த மக்களின் "வாக்குகள்" மூலம் "ஆட்சிக்கு" வந்திருக்கும் கட்சிக்கும் நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய "உழைக்கும் விவசாயிகளின்" உழைப்பால் தானே "உன்னுடைய" வீட்டில் "அரிசி" உலையில் வேகவைக்கப்படுகிறது? இந்த கேள்வியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்க வேண்டும். "உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்", நீ "சோற்றில் கை வைக்க முடியாது" என்று வீர வசனம் பேசும் "ஏ,தமிழகமே" நீ பரமக்குடி துப்பாக்கி சூட்டில் எழு பேர் அன்னிய்யயமாக "படுகொலை " செய்யப்ப்பட்ட போது எங்கே போயிருந்தாய்? விவசாயத்தை பாதுகாக்கும் ஒரு "படையை" நீ புறக்கணித்தால் "நாளை" சோறு, தண்ணீ இல்லாமல் அலையமாட்டையா? மானங்கெட்டவன் மட்டுமே இன்னமும் "நிம்மதியாக" தூங்குவான். மரமண்டை மட்டும்தான் "மனித உரிமையை" சிந்திக்காமல் இருப்பான். இப்போது "அரசுக்கும், தேவேந்த்ரகுல மக்களுக்கும்" நடக்கும் "போரில்" நீ எந்தப் பக்கம்?நிலம் "சார்ந்த" உழைப்பு, அதனால் வரும் "சுயம் சார்ந்த" நினைப்பு, அதனால் வரும் "சுய மரியாதை" இருப்பு, அதனால் "எழும்" "வீரமிகு" விறைப்பு, அத்தனையும் கொண்ட ஒரு "உழவர் குடியிடம்" விளையாடுகிறாய்? மண்ணில் நிற்பவன், "மண்ணுக்கு சொந்தக்காரன்". "வந்தேறிக்கூட்டம்" கையில் "துவக்கு" இருப்பதால், "காக்கை, குருவியை" சுடுவதுபோல, "எத்தனை நாள்" சுட்டுவிடும்? பார்ப்போமா? இதுதான் அன்று, "வெள்ளையன்" வேட்டைக்காடாக "தமிழ்மண்ணை" ஆக நினைத்தபோது, வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஒரு "தளபதியை" மாவீரன் "சுந்தரலிங்க குடும்பன்" தனியாகவே "படை" நடத்தினான். தன் மாமன் மகள் "வடிவுடன்" வெள்ளைக்காரனின் "ஆயுதக் கிடங்கில்" வெடியாகி "எரித்து" அழித்தான். அவன் "முதல் தற்கொலைப்படை போராளியாக" இன்று வரை பாராட்டப்படுகிறான். அந்த " முதல் கரும்புலியின்" வாரிசுகள்தான் இப்போது, "தேவேந்திர குல" மக்களாக "பரிணமிக்கிறார்கள்". எண்ணிப்பார்க்க வேண்டாமா? சிவகங்கை சீமையை ஆண்ட " வேலு நாச்சியார்" படையில் வெள்ளையனை எத்ரித்து, களம் புகுந்து, "வீரச்சாவை" எட்டிய " பெண் கரும்புலி" யார்? அவர் "குயிலி" என்ற தேவேந்திர குல வீர மங்கை. தெரியுமா உனக்கு என்று அந்த "சின்னப் புத்தி" அதிகாரிகளை கேட்காமல் இருக்க முடியுமா?


தென் மண்டல "அய்.ஜி. ராஜேஷ் தாஸ்" இந்த 'அருவெறுக்கும் போரின்" முதல் குற்றவாளி. ராமநாதபுரம் டி.அய்.ஜி. என்ற "சந்தீப் மிட்டல்" இந்த "போர்குற்றத்தின்" இரண்டாவது குற்றவாளி. அவர்களுக்கு "எடுப்பு வேலை" செய்த "செந்தில் வேலன்" மூன்றாவது குற்றவாளி. இந்த "போர்குற்றவாளிகளை" கூண்டிலேற்றாமல், எந்த "மனித உரிமையும்" தமிழ்நாட்டில் "மயிரைக் கூட" பிடுங்க முடியாது. இப்போது அதிகாரிகள் அறிவித்திருக்கும் "போரை" எத்ரிகொள்ள மக்கள் "தயார்". எந்த அளவுக்கு உங்கள் நாட்டின் 'அரசியல் சட்டமும், ஜனநாயகமும்" தயார் என்பதை "வெளியே" வந்து அரசியல் கட்சிகள் கூறட்டும். இனி நாமும் "வேடிக்கை" பார்பவர்களாக இருந்தால் "கூண்டோடு " அழிந்து விடுவோம்.

1 comment:

வினோத் said...

police officers think that they are land lords.. and no one can take any action against them even if they are completely against law and moral.

if public want to fight against this they have to spend money , spend time, with out look after their work , they have to go for courts for years. some time the officer may got retired also.

its the government duty to take action against this officers, that will teach lesson to other officers.

if it fails then ...

if such things happens continually then the naxal paris get people support. after that the govt officers and leader will get assassination in regular basis. all r in the game....

Post a Comment