Friday, September 30, 2011

வாச்சாத்தி "யாருக்கு" படிப்பினை?

இப்போது "பத்தொன்பது" ஆண்டுகள் கழித்து "நீதிமன்ற தீர்ப்பில்" 215 கொடுங்கோலர்களுக்கு "தண்டனை" வழங்கப்பட்டிருப்பதால், இது "காவல்துறை, வனஇலாகா,வருவாய்த்துறை" ஆகியவற்றின் "கொடூரர்களுக்கு" வழங்கப்பட்டிருக்கும் "படிப்பினை" என்று நாம் நினைத்தால் "ஏமாந்து" போவோம். 1992 ஆம் ஆண்டு நடந்த கதை சில ஏடுகளில் வெளியாகி உள்ளது. அதாவது "வனத்துறையை" சேர்ந்த "துரைமார்கள்" இரண்டு பிரிவுகளாக தங்களுக்குள் "வன சொத்தை" யார் களவாடுவது என்று போட்டுக் கொண்ட "போட்டியில்" அவர்களுக்கு தங்கள் "பிழைப்பிற்காக" ஒத்துழைப்பு கொடுத்த, அல்லது "உழைப்பை" விற்ற "அப்பாவி" மலைவாழ் மக்கள், அந்த "கொடூர" தாக்குதலில் "பலியாகிவிட்டனர்". இந்த செய்தி ஒரு ஆங்கில ஏட்டில் மட்டுமே வெளியாகி உள்ளது.

வன இலாகா ஊழியர்கள் "வழமையாகவேர்" வனச் சொத்துக்களை தங்கள் "தேவைக்காக " அழிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு "மரங்களை" வெட்டிக் கொடுக்க "மலை வாழ்மக்கள்" உதவி தேவைப்படும். அப்படி "கூலி வாங்காத உழைப்பை" செய்து கொடுத்தால்தான் நம் மக்களான அந்த "மலைவாழ் மக்களுக்கு" தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக " உடைந்த மரங்களையோ", "மரத் துண்டுகளையோ", சிறிய துகள்களையோ, எடுத்து செல்ல அந்த "வன இலாகா அதிகாரிகள்" அனுமதிப்பார்கள். இது வனப்பகுதிகளில் நடக்கும் "அன்றாட" நிகழ்வு. அப்படிப்பட்ட நிகழ்வுகளில், சில நேரங்களில், "மேலதிகாரிகள்" வருகையை ஒட்டி, வன இலாகா அதிகாரிகள் "நல்லவர்களைப்" போல "மலைவாழ்மக்கள்" மீது "பழியைப்" போட்டு தப்பித்துக் கொள்வதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான்.

இதுபோன்ற ஒன்று அப்போதும் நடந்துள்ளது. ஆனால் அந்த சூழலில், "வீரப்பனை" பிடிப்பதாக சொல்லிக் கொண்டு, அதற்காக ஒரு "கூட்டு நடவடிக்கை குழுவை" கர்நாடகா மாநில காவல்துறையும், தமிழ்நாட்டு காவல்துறையும் "ஏற்பாடு" செய்து, அதன்மூலம் " சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு" மாவட்டங்களில் "அட்டூழியம்" செய்து வந்தனர். அதற்கு "தமிழ்நாட்டு" காவல்துறை அதிகாரி, தேவாரம் 'தலைமை"ஏற்றிருந்தார். "வாச்சாத்தி" கிராமம் "தருமபுரி" மாவட்டத்தில் இருப்பதால், "நக்சல்பாரி" நடமாட்டம் என்ற "பயத்தில்" ஆள்வோர் அலறிக் கொண்டு "திரிந்ததால்" தேவாரம் என்ற ஒரு பெரும் "வீரர்" அங்கே "துப்பாகியுடன்" நடமாட வேண்டும் என்று ஆளும்வர்க்கம் விரும்பியது. இந்த "மாபெரும் வீரர்" கதை "தனி" கதை. என்றுமே எந்த "நக்சல்பாரி புரட்சியாளரையோ" அல்லது "வீரப்பன்" ஆட்களையோ "நேரில்" சந்திக்க "துப்பில்லாமல்" மலைவாழ் மக்கள் மத்தியில் "ஆடுமேய்க்கும்" சிறுவர்களை பிடித்து "சுட்டுக் கொள்வதில்" ஒரு "அசகாய சூரன்" இந்த தேவாரம் என்பது "எம்.ஜி.ஆர். உட்பட" யாருக்கும் தெரியாத செய்தி.

அப்படிப்பட்ட "தேவ்பாரம்" மலைவாழ் பெண்களை "பாலியல் பலாத்காரம்" செய்வதை "தஹ்டுக்காத" ஒரு "ஜீவராசி". ஒரே "சாதியாக" அந்த விசயத்தில் இந்த "காவல்துறை, வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகள்" இருந்ததால்தான் இப்போது சில "அய்.எப்.எஸ்."அதிகாரிகளும் இந்த "கொடுன்குற்றத்தில்" மாட்டி "தண்டனை" பெற்றுள்ளார்கள். ஆகவே இது "பத்தொன்பது" ஆண்டுகள் கழித்து அரசும், நீதிமன்றமும் "இர்னகி" வந்து கொடுத்த " மனப்போர்வமான தீர்ப்பு" அல்ல. மாறாக 'இதுபோன்ற" கொடுமைகள்தான் "மேற்கு வங்கத்திலும்", "ஜார்கண்டிலும், சட்டிச்கரிலும், ஒரிசாவிலும்" மாவோவாதிகள் "பழங்குடிகள்" மத்தியில் "ஆழமான" விதைகளை போடுவதற்கு உதவின என்பதை உணர்ந்த "ஆளும்வர்க்கம்" இறங்கி வந்து "நல்லவர்"போல வேஷம் போட "கொடுத்துள்ள" ஒரு தீர்ப்பு.

அதானால் இன்றைய "இந்திய சூழலில்" ஆளும்வர்க்கத்தின் "அச்சத்தால்" அவ்ந்துள்ள "தீர்ப்பை" நாம் கொண்டாட வேட்னிய அவசியமில்லை. ஆனால் அதிலிருந்து நாம் "படிப்பினைகளை" கற்றுக் கொள்ள வேண்டும். "வெண்மணி படுகொலைகளுக்கு" இதே நீதிமன்றங்கள் தான் "கொடியவனுக்கு விடுதலை" என்ற தீர்ப்பை கொடுத்தன. அப்போது "பன்னிரண்டு" ஆண்டுகள் கழித்து, "நக்சல்பாரி இயக்கமான விநோத்மிஸ்ரா கட்சி" தலைமையில் "கொடியவன் கோபால கிருஷ்ணனநாயுடுவிற்கு " புரட்சியாளர்கள் "தண்டனை" நிறைவ்டேரியத்தை இந்த நாடு மறந்திருக்கவில்லை. நாம் மறந்தாலும் "எதிரிகள்" அதை மறக்கவில்லை. அதேபோல "புரட்சியாளர்களுக்கு" ஒரு வாய்ப்பு கொடுக்காமல் "தானே" தண்டிப்பதுபோல "பாசாங்கு" செய்யும் தீர்ப்புதான் என்றால், "தொடர்ந்து" எம்,ஆற "தமிழ்மக்கள்" தயாராக இல்லை என்பதை நிரூபிக்க நாம் எழவேண்டும்.

அன்றாட நிகழ்வில் தொடங்கி, அடிப்படை நிகழ்வுகள் எதுவானாலும், 'ஒடுக்கப்பட்ட" சமூகங்களை 'அடக்க" மட்டும்தான் இந்த ஆயுதம் தாங்கிய அனைத்து "படைகளும்" இருக்கின்றன. ஆகவே "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான" ஆயுதம் தாங்கிய படைகள் "உருவாகாமல்" எதையும் இன்றைய நீதிமனரண்களால் மட்டுமே "பிடுங்க" முடியாது என்பதை "வரலாற்று" சுவடுகளாவது நமக்கு "கற்றுக்" கொடுக்கட்டும்.

No comments:

Post a Comment