"மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கம்" சார்பாக் அதன் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவ்த்தார். காந்தி பிறந்த நாளான அக்டோபர்- 2 ஆம் நாள், முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் "மரண தண்டனையை" ரத்து செய்ய "பட்டினிப் போராட்டம்" நடத்தி கோரிக்கையை முன்வைப்போம் என்று. அதேபோல, சென்னையில் நெடுமாறன் தலைமையிலேயே "காவல்துறை" வழக்கமாக "நாட்டு மக்களுக்கு" தெரியக்கொடாத "ஒரு இடத்தை" கவனமாக தேர்ந்தெடுத்து கொடுப்பதுபோலவே இப்போதும் "கூவம் நதிக்" கரையோரம் கொடுத்திருந்தார்கள். அதுபோல "புதுச்சேரியிலும்" பட்டினிப்போராட்டம் நடந்தது. ஒரு திருமண வரவேற்ப்புக்கு "புதுச்சேரி" சென்ற நாங்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம். அங்கே "பெரியார்வாதிகள்" ஐந்து இயக்கங்களாக இருந்தாலும் அனைவரும் இந்த "பட்டினிபோரில்" கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.
அன்ப்கு விவாதமான சில செய்திகளைப் பற்றி பேசியாக வேண்டும். கருணாநிதி தொடர்ந்து "மரண தண்டனையி" மூன்று தமிழர்களுக்கும் ரத்து செய்வதற்காக "சட்டமன்ற தீர்மானம்" போதாது என்றும், "அமைச்சரவை தீர்மானம் போட்டு அதை ஆளுநர்" மூலமாக கொடுத்தனுப்ப வேண்டும் என்றும் அடிக்கடி கூறிவருகிறார். அதனாலேயே நம்மில் சில "நண்பர்களுக்கு" அந்த விசயத்தில் ஒருவிதமான "குழப்பம்" ஏற்பட்டிக்ருக்கிறது. தமிழக முதல்வர் தங்களது சட்டமன்றத்தில் போட்ட "தீர்மானத்தை" அப்படியே "அமைச்சரவையில்" போடவ்பேண்டும் என்று நம்மில் பலர் விவாதிக்கிறார்கள். அதில் என்ன "புதிய" மாற்றத்தை வர்கள் "காணப்போகிறார்கள்?". "மரணதண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட "தீர்மானத்தை" அப்படியே " மாநில "அமைச்சரவையில்" போடுவதாலும் அதே பலன்தானே?
சரி. இந்த "இடத்தில்" சட்டமனறம் உயர்ந்ததா? அல்லது "மாநில அமைச்சரவை" உய்ரந்ததா? என்று கேள்வி கேட்டால் இவர்கள் என்ன "பதில்" சொல்வார்கள்? சட்டமன்றம் "கூடியிருக்கும்" நேரங்களில்அமைச்சர்வையை விட, சட்டமன்றமே உயர்ந்தது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? "கூடிய சட்டமன்றத்தில்" தீர்மானம் நிறைவேற்றியபோது, முழு மைச்சர்வையும் "இருந்ததா? இல்லையா?". முதல்வர் உட்பட முழு மைச்சர்வையும் அமர்ந்திருன்ஹ்டுதானே அந்த "சட்டமன்றத் தீர்மானம்" ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது? காங்கிரஸ் உறுப்பினரான "விஜயதரணியும்" அப்போது சட்டமன்றத்தில் அமர்ந்திருந்தாரே? சட்டமன்றம் "கூடாத" போதுதான் "அமைச்சரவை" உயரந்தது என்பதையும், "நாடாளுமன்றம்" கூடாத போதுதான், "மத்திய அமைச்சரவை" உயர்ந்தது என்பதும் இவர்களுக்கு புரியாமல் இருக்கிறதா? சட்டமனர்மும், நாடாளுமன்றமும் மட்டுமே "சட்டங்களை" இயற்ற முடியும் என்பதும் அதையே "மாநில அமைச்சரவையும், மத்திய அமைச்சரவையும்" சட்டங்களை இயற்ற 'அதிகாரம்" கிடையாது என்பதும் இவர்களுக்கு புரிய வேண்டாமா? அதனால் எது "கூடும்போது" அதிக அதிகாரம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
ஆனால் நமது "வலியுறுத்தல்" வேறு. அதாவது "ஒரு மாநில முதல்வருக்கே" தனது "மாநில மைச்சர்வையை" கூட்டி, அதன்மூலம், "மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக" குறைக்க "அதிகாரம்" இருக்கிறது என்பதுதான் நமது வாதம். அம்த "வாதத்தை" தமிழக முதல்வர் "மறுத்துவிட்டார்". அதாவது 2003 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட "ஒரு சுற்றறிக்கையை " சுட்டிக் காட்டி, 257 ஆம் பிரிவின் கீழ் "மத்திய அரசு" மாநிலங்களுக்கு அனுப்பிய அந்த சுற்றறிக்கைப் படி, "மாநிலங்களுக்கு அந்த விசயத்தில்" மீற உரிகையில்லை என்று அவர் கூறினார். இது அந்த சுற்றரிக்கைப்படி "சரிதான்". ஆனால் 'அரசியல் சட்டப்"படி சரியில்லை என்கிறோம் நாம். அதாவது "மரண தண்டனையைக் குறைக்க" மாநில அமைச்சரவைக்கு உள்ள உரிமையை, அதாவது "இறையாண்மை ஊரிமையை" இந்த சுற்றறிக்கை கூறும், "நிர்வாக அதிகாரம்" தஹ்டுக்க முடியாது என்பதே நமது வாதம்.இந்த வாதத்தை "பியு.சீ.எல். சார்பாக முதல்வருக்கு "எழுதிக்"கொடுத்து விட்டோம். ஆனாலும் "ஆலோசனை கூறும் அதிகாரிகள்" கூறுவதே எடுபடுகிறது.
தவிர "நம்மால்" இந்தியாவில் இதற்கு முன்பு " மாநில அரசு" தனது இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, 'மரண தண்டனையை" குறித்த "முன்னுதாரணத்தை" காட்ட முடியவில்லை. ஆனால் நாம் எல்லோரும் காட்டும் ஒரே உதாரணம் "ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் காலத்தில்" மரணதண்டனை ஆயுள்தண்டனையாக "எஸ்.ஏ.பாலன் "விசயத்தில் குறைத்ததைதான்.அப்போதுகூட, மாநில அரசு "தனது அதிகாரத்தை" பயன்படுத்தி "குறைக்கவில்லை".மாறாக "மத்திய அரசிடம் தனது வேண்டுகோளை" வைத்து. நாம் இந்த "உதாரணத்தை" வான் எட்டும் அளவு "கூவிய" பிற்பாடு, தமிழக முதல்வரும் அப்படியே, "மத்திய அரசிடம் கோருகின்ற தீர்மானத்தை" சட்டமன்றத்தில் போட்டு விட்டார். ஆகவே இது "ஏற்கனவே நடந்த ஒரு உதாரணத்தை" பின்பற்றிய செயல்தான். இவர்களுக்கு "புதிய முன் உதாரணத்தை" படைக்கும் "தைரியம் இல்லை".
இந்த "உண்மையை" செர்ரிப்பது எப்படி கடினமாக இருக்கும்? ஆனால் இன்று "அமைச்கார்வைதீர்மானம்" பற்றி பேசும் கருணாநிதி, அன்றே இந்த "மூன்று பேர்" தூக்கு விசயத்தில் "நிறைவேற்ற" சொல்லி எழுதிக் கொடுத்தவர் என்பதை "சௌகரியமாக" மறந்து விடுகிறர்கள். கருணாநிதி, 'கழியப் பெருமாளுக்கும், தியாகுவிற்கும்" மரணதன்டையை "குறைத்தவர்" என்று திரும்ப, திரும்ப இவர்கள் "கூவுகிறார்கள்". அந்த "உதாரணம்" எப்படி சரி? "குடியரசு தலைவர்" கருணை மனுவை "நிராகரித்த" பிறகு கருணன் இதி, கழியப் பெருமாளுக்கும், பிறருக்கும் "மரணதண்டனையை " குறைக்க வில்லை. குடியரசு தலைவரிடம் "செல்வதற்கு" முன்பே குறைத்து வெளியிட்டார். "குடியரசு தலிவறது" நிராகரிப்புக்கு "பிறகுதான்" மத்திய அரசின் அந்த 257 என்ற பிரிவு பற்றிய சுற்றறிக்கை பேசுகிறது. அதனால் "குடியரசு தலைவரின் நிராகரிப்புக்கு" முன்பு, அல்லது "பின்பு" என்று நாம் "தனித்தனியாக" ஆய்வு செய்யவேண்டும்.
பிற்போக்கு குணம் படைத்தவர் என்று "புகழ்" பெற்ற செல்வி.ஜெயலலிதா, இப்போது, "புதிய முன்மாதிரி" படைத்து "தானே" தண்டனைக் குறைக்க "தாயாராயில்லை". ஆனால் நாம் காட்டிய "ஏ.எம்.எஸ். முன்னாதரனத்தை" போல அல்லது பின்பற்றி "டில்லிக்கு அந்த வேலையை" தள்ளி விட்டுவிட்டார். முற்போக்கு ஈ.எம்..எஸ். உம அதைதான் செய்தார். ஆனால் இந்த அம்மா "ஈ.எம்.எஸ். ஐவிட ஒரு படி மேலே போய் சட்டமன்ற தீர்மானம்" போட்டிருக்கிறார். இந்தியாவில் ஒரு சட்டமன்றம் "ஒருவருக்கு மரண தண்டனையை" குறைக்க சொன்ன பிற்பாடும், "குடியரசு தலிவர்" அதை "நிராகரித்தார்" என்ற முன்னுதாரணமும் கிடையாது. ஆகவே அது நடக்காது. "தூக்கு தண்டனை" மூவருக்கும் "ரத்தானதுதான்". ஆனால் அதை "அதிகாரபூர்வமாக" அறிவிக்க கால தாமதம் ஆகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment