மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டங்கள் "பட்டினிப் போர்" என்ற அடையாளத்துடன் ஒவ்வொரு நாளும் "தமிழ்நாட்டில்" குறிப்பாக சென்னையில் நடந்துவரும் வேளையில், "கோயம்பேடு" பேருந்து மிளயத்திற்கு அருகில் அடுத்த "சிக்னலில்", திருச்சி சவுந்தரராஜன் இடமான "ஆடோ கேரஜில்" நாற்பத்தைந்து நாட்களுக்கான "பட்டிநிப்போரை" ஏற்பாடு செய்துள்ள, "மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு" ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினரை வந்து, இருந்து நிகழ்வை நடத்திக்கொள்ளுங்கள் என்று பணித்திருக்கிறது. அதில் "பல கட்சிகள்" பல அமைப்புகள் "ஒரு நாள்" பட்டினி என்பதாக இருந்து வருகிறார்கள். ஞாயிறு அன்று " கிருத்துவ மக்கள் கட்சி" அற்ற்ஹுபோன்ர "பட்டினிப் போரை" நடத்தியது.
அதில் ஒரு செய்தி 'சரியாக" பதிவு பெற்றுள்ளது. "இந்துத்துவா" சக்திகள் தமிழ்நாட்டிலும், உலகம் எங்கிலும், தமிழர்கள் மத்தியில் "கிறித்துவர்களுக்கும்" இஸ்லாமியர்களுக்கும் எதிராக, ஒரு "நச்சு" கலந்த "பரப்புரையை" பரப்பி வரும் வேளையில், இந்த "கிருத்துவ தமிழர்களின்" பங்கேற்பு ஒரு "சாட்டையடியாக" திகழ்ந்துள்ளது. நடிகர் "சரத்குமார்" வந்திருந்து வாழ்த்தி, அந்த "கிருத்துவ மக்கள் கட்சியினருடன்" சேர்ந்து, வெளியே வந்து, "மூன்று தமிழர் உயிர் காக்க" ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அதே இடத்தில் நிகழ்த்தியது மேலும் "சிறப்பாக" அமைந்தது. டில்லியின் "மகிவுக்காக" தமிழ்நாட்டில் "தமிழர் அடையாளத்தை" சிதறடிக்க எண்ணி, "பிற்போக்கு இந்துத்துவா" சக்திகள், "கச்சத்தேவில் உள்ள அந்தோனியார் கோவிலை இடித்து, முருகன் கோவில் கட்டவேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து வரும் வேளையில், இப்படி சென்னை தலைநகரில், "கிருத்துவ தமிழர்கள்" தங்கள் மற்ற்ஹா அடையாளத்துடன், மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டத்தில் இறங்கியது "உள்ளபடியே" பாராட்டத்தக்கது.
அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுள்ள"எப்.ஏ.நாதன், செயலாளர் டோனி ஆகியோரை நாம் பாராட்டும் அதே நேரம், "தமிழர் அடையாளம்" என்பது "மதம் தாண்டியதுடா,மடையர்களே" என்று உரக்க கூவ வேண்டியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment