இப்போது இந்திய அளவில் " வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு "மாபெரும் விவாதம்" நடந்து வருகிறது. அதில் "திட்டக் குழு" துணைத் தலைவர் "மாந்தக் சிங் அலுவாலியா " இந்தியாவின் "ஏழைகள்" யார் என்று அவரது முதலாளிகளான "உலக வங்கி" என்ன சொல்கிறதோ, அதை அப்படியே "ஈ அடிச்சான்" காப்பி போல சொல்லியதால் வந்த "சர்ச்சை" தான் இப்போது விவாதமாக நடக்கிறது. அலுவாலியா "நகரங்களில் வறுமையின் எல்லைக்கோடு" தினசரி "முப்பத்தி இரண்டு ரூபாய்" சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே என்றும், "கிராமப்புறங்களில்" அதவே "இருபத்தைந்து ரூபாய்" மட்டுமே சம்பாதிப்பவர்களுக்கு "மட்டுமே" என்றும் அறிவித்ததால் வந்திருக்கும் சிக்கல்தான் இது.
இது "எப்படி" சாத்தியம்? என்று பலரும் கேள்வி கேட்டுவிட்டனர். அதில் "சோனியா" தலைமையிலான "தேசிய ஆலோசனைக் கவுன்சில்" உறுப்பினர்களான "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா" ஆகியோர் கேட்டுவிட்டனர். ஏற்கனவே நாம் கூறியிருந்த படி, "இது" மன்மோகனுக்கும், சொநிஆவிற்கும் "நடக்கும்" பனிப்போர். அதாவது மன்மோகன் கும்பல் "உலக வங்கி" யின் ஆலோசனைப் அப்டி, இந்தியாவில் "மானியங்களை" நிறுத்தவேண்டும், இலவச சலுகைகளை தடை செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், இந்த " வறுமையின் எல்லைக்கொட்டையும் குறைக்க" ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கு அவர்களது "கைத்தடியான" அலுவாலியாவை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அலுவாலியாவை இதற்காகத்தான் அவர்கள் "திட்டக் குழுவின் துனைத்தலைவராக " போட்டார்கள். அப்போதே அதை 'இடது சாரிகள்" எதிர்த்தார்கள்.
சோனியா கும்பல் "அடுத்த "நாடாளுமன்ற தேர்தலை"மனதில் வைத்து செயல்பட்டுவருகிறது. மன்மோகனோ, உலக வங்கியின் "கட்டளைகளை" மனதில் வைத்து செயல்பட்டுவருகிர்பார். இந்த முரண்பாட்டில்தான் இந்த "தகராறு" வந்துள்ளது. இப்போது "சோனியா" மன்மோகனிடம் "கறாராக" வறுமையின் எல்லைக்கோடு விவகாரம் பற்றி "எச்சரிக்கை" கொடுத்துவிட்டார். அதனால்தான் மன்மோகன் அதை இன்று "அலுவாலியாவிடம்" கராராக கூறிவிட்டார். இப்போது அந்த "அலுவாலியா" மன்மோகனின் ஆலோசனைப்படி, "ஜெயராம் ரக்மேஷை" சந்தித்து அவரது அறிவுரையை கேட்டு, பிறகு "வறுமையின் எல்லைக் கோட்டை" முடிவு செய்வாராம். இதற்கு என்ன அர்த்தம்?
ஜெயராம் ரமேஷ் இப்போது "ஊராட்சி வளர்ச்சித் துறையின் அமைச்சர்". அபப்டியானால் 'சோனியா" ஆதரவாளரான ஜெயராம் ரமேஷ் இதற்காகத்தான் "ஊரக அமைச்சராக" நியமிக்கப்பட்டாரா? ஆமாம். ஏன் என்றால் "ஆபத்து மாதங்களுக்கு" முன்பு "ஜெய்பூர் பல்கலைக்கழகத்தில் " ஒரு கருத்தரங்கம் நடந்தது. அது இந்த " வறுமையின் எல்லைக்கோடு பற்றி முடிவு" செய்ய "யு.ஜி.சீ." என்ற "பல்கலைக்கழக மானியக் குழு" உதவியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம். அதில் "நான்" தமிழ்நாடு சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் "அருணா ராய்" கலந்து கொண்டார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த "மத்திய ஊராட்சித் துறை அமைச்சர்நான" ஜோஷி, அதாவது "சோனியா கும்பலை" சேர்ந்தவரும் கலந்துய் கொண்டு, எனது அருகேதான் இரண்டு நாட்களும் அமர்ந்திருந்தார். அந்த அமைச்சரும் சேர்ந்து கொண்டு, அங்கே "திட்டக் குழு" மதிப்பீடு பற்றி "வாங்கு, வாங்கு" என்று வாங்கினோம். எல்லோரும் திட்டக் குழுவின் "வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீட்டை எதிர்த்தே பேசினர். கருத்தரங்கு முடிந்த "நான்கு" நாட்களில், மன்மோகன் அந்த "ஜோஷி" கையிலிருந்து "ஊராட்சி அமைச்சர்" பொறுப்பை "பிடிங்கி" விட்டார். அது "சோனியா கும்பல்குக்கு" எதிரான மன்மோகனின் "சேட்டை".
அதன்பின், மீண்டும் மன்மோகனின் "கைத்தடி" அந்த அமைச்சராக இருந்தார். அதை "சோனியா கும்பல்" போருக்க முடியாமல், சோனியாவின் விசவாசியான "ஜெயராம் ரமேஷை" அவர் வகித்த "சுற்றுப்புற சூழல்" அமைச்சரகத்திலிருந்து "மாற்றி" மீண்டும் தனது 'ஆளையே" அந்த "ஊரக அமைச்சரவைக்கு" போட மன்மோகனிடம் "வற்புறுத்தி" ஜெயராம் ரமேஷ் "கையில் " அந்த இலாகாவை கொடுக்க வைத்துள்ளார். இது சோனியா கும்பலுக்கான "முதல்" வெற்றி. இப்போது "தேசிய ஆலோசம்னை கவுன்சிலின்:" உறுப்பினர்கள் மூலம் "அலுவாலியா" வின் மதிப்பீட்டிற்கு "எதிராக" பேசவைத்து , அதன்மூலம்,மன்மோகனை "நிர்ப்பந்தித்த் " அவரை "அலுவாலியாவை" அடக்க சொல்லி, மன்மோகனும், அலுவாலியாவிடம் "ஒழுங்காக" ஜெயராம் ரமேஷ் சொல்வதை "போய் கேள்" என்று சொல்ல வைத்துவிட்டார்கள். இதுதான் "மன்மோகனை வென்ற சோனியா".
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment