தமிழக முதல்வரின் "உத்தரவுப் படி" செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்று அழைக்கப்படும் "சிறப்பு அகதிகள்" முகாம் என்ற "சிறப்பு சிறையில்" அடைக்கப்பட்டிருந்த "பதினைந்து" ஈழத் தமிழர்களை, இன்று "விடுதலை" செய்திருக்கிறார்கள் என்பது "செய்தி". இது வெறும் செய்தி மட்டும்தானா? அல்லது "ஒரு மனிதாபிமான " நிகழ்வை தமிழக அரசு செய்திருக்கிறதா? இவையெல்லாம் "சட்டப்படி" எப்போதோ 'செய்திருக்க" வேண்டிய செயல்தான். ஆனால் இதுவரை 'செய்யப்படவில்லை". இப்போது நடந்திருக்கிறது. அப்படியானால் இந்நாள் வரை, "கடந்த ஐந்து ஆண்டுகளாக" ஆண்ட ஒரு "தமிழன்" தனது இனத்திற்கும் "அனுதாபம்" காட்டவில்லை. மனித உரிமைகளுக்கும் "மரியாதை" காட்டவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
இப்போதுள்ள செல்வி.ஜெயலலிதா ஆட்சி " காவல் நிலையத்தில்" நடந்த "காவல் மரணத்திற்காக" சம்பந்தப்பட்ட "அதிகாரிகளை" இடை நீக்கம் செய்துள்ளது. அது "நல்ல செய்திதான். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'ஆய்வாளர் முதல் காவலர்" வரை உள்ள "கீழ்மட்ட" அதிகாரிகள். அதேசமயம் "பரமக்குடியில்" கொடூரமான "மனிதாபிமானம்" அற்ற "படுகொலைகளை" செய்ததற்கு "காரணமான" பெரிய அதிகாரிகளை அதாவது "அய்.ஜி., டி.அய்.ஜி, மற்றும் எஸ்.பி."ஆகியோரை எந்த நடவடிக்கையும் இன்றி "சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது" என்பது எதைக் காட்டுகிறது? ஒன்று "அந்த அம்மாவிற்கு" செய்தி கிடைத்தால் "தவறை சரி" செய்ய முயற்சிக்கிறார். அல்லது "சிறிய திகாரிகள்" அளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்க துணிகிறார். பெரிய "அதிகாரிகள்" விசயத்தில் "கரிசணை" அல்லது "பயம்" வைத்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment