Friday, October 7, 2011

பிரதமர் "ஏமாற்றுகிறாரா?" அல்லது "ஏமாந்தாரா?"

கூடங்குளம் "அணு உலை எதிர்ப்பாளர்கள்" முதல்வர் ஜெயலலிதாவின் "திட்டப்படி" டில்லி சென்றார்கள். இன்று காலை பிரதமர் மன்மோகனை சந்தித்தார்கள். ஏற்கனவே "திட்டமிட்டபடி" நாமும் முன்கூட்டியே "சொன்னபடி" அரசியல்வாதிகள் "போராட்டக்காரகளை" காலியிலேயே சந்தித்து, "நீங்கள் பிரதமரை" சந்திக்க "அம்மா" ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் அங்குபோய், அம்மா வார்த்தைக்கு எதிராக எதுவும் ஸெய்யக்கோடாதுஎ ன்று "ட்சொல்லாமல்" சொல்லி அழைத்து சென்றார்கள். அதாவது மைத்ரேயனின் வார்த்தைகளில் சொல்லப்போனால்," கூடங்குளம் வட்டார மக்களின் அச்சத்தை போக்கும்வரை" அணு உலை வேலைகள் "நிறுத்தி வைக்கப்படவேண்டும்" என்று கூறப்போகிறோம். அதுதான் மன்மோகனை "சரியாக" எதிர்கொள்ள உதவும். அதற்காக தாங்கள் "தயார்" செய்துள்ள மனுவை தாங்கள் அளிப்போம் என்றும், போராட்டக்காரர்கள் தங்கள் "சார்பில்" ஒரு மனுவை அளித்ஹ்டுக் கொள்ளுங்கள் என்று "தங்கபாலு" கூற "அப்படியே ஆகட்டும்" என்று உதயகுமார் தலைமையில் வந்தவர்களும் "ஆமோதிக்க" அந்த குழு பிரதமர் அலுவலகத்திற்கு 12 - 30 க்கு பிரதமரை சந்திக்க சென்றது.


"கிருத்துவ பேராயர்களும் , பங்கு தந்தைகளும்" இதுபற்றி எதுவுமே "அறியாதவர்களாக" அம்மா அனுப்பியிருக்கிறார் என்று "சும்மா" போய் அமர்ந்து கொண்டார்கள்.மைத்ரேயன் "தனக்கே" உரிய பாணியில் 'அச்சத்தை" போக்கும்வரை 'அணு உலை வேலைகளை" நிறுத்தி வையுங்கள் என்று விளக்கினார். அதையே "சீ.பி.அய். யை சேர்ந்த டி.ராஜாவும்" ஆமொத்ஜிப்பது போல பேசினார். அமைதியாக வழக்கம் போல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த "பாரதப் பிரதமர்" எதுவுமே விளக்காமல், "இன்னமும் அணு உலைகள் செயலப்டத்துவங்க வில்லை" என்று யாருக்குமே தெரியாத செய்தியை "கூறுவது" போல கூறினார். அது அவரது "அறியாமையை" காட்டுகிறதா? அல்லது "திமிரான" பதிலா என்பதை அங்கு சென்ற "ஆர்வலர்கள்தான்" விளக்க வேண்டும். மைபா [ தமிழர் களம்} தனது உணமிப் பெயரான சேர்மாதேவி ஜேசுராஜ் என்ற பெயருடன் வந்ததால், "தமிழில்" இரண்டு வார்த்தை பேசினார். தமிழில் பேசினேன் என்று வெளியே வந்து "சொல்வதற்காகவா" என்பது நமக்கு தெரியாது.


உதயகுமார் தன்னை 'அமைப்பாளர்" என்று போட்டுவிட்டதால், "அணு உலை ஆபத்துகளை" விளக்கினார். அதற்கு அங்குள்ள அணு அறிவியலாளர்கள் "ஆபத்தில்" சொல்ல "குழப்பமே" மீதியாக நின்றது."நாங்கள்தான்" உங்களுக்கும், அறிவியலாளர் லாலுக்கும், ஏற்கனவே 'எங்களை" நீங்கள் "பார்க்க வந்தபோது" இதை விளக்கிணோமே என்று அந்த "விஞ்ஞானிகள்" கூறியது அவர்களை "அமபலப்படுத்தவா" என்பது தெரியவில்லை.அன்டன் கோமேஸ் எழுந்து "இங்கே வந்துள்ளவர்களுக்கு நீங்கள் வில்லாக வேண்டாம். அங்கே உள்ள எங்கள் மக்களுக்கு முதலில் அச்சத்தை போக்க" வாருங்கள் என்று அவர்களை "போராட காலத்திற்கு" அழைத்தார். அதற்கு அப்படியே "நிபுணர் குழுவை மத்திய, மாநில அரசுகள்" அனுப்பிவைக்கும் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.அனைத்தும் ஒரு விதமான "நாடகம் போல" நடந்து முடிந்தது. அரசியல்வாதிகள் "தங்கள் மனுவை" கொடுக்க போராட்டக்காரர்கள் "தங்கள் மனுவை" பிரதமரிடம் கொடுத்தனர்.சரத்குமார் தனது "பங்கிற்கும்" சில வார்த்தைகளை பேசினார். வெளியே வந்ததும், "தங்கபாலு" ஒரே மனுதான் கொடுக்கப்பட்டது என்று கூறவேண்டும் என்று போராட்டக்கரர்களிடம் "கட்டளையிட்டார்". அதையும் உதயகுமார் ஏற்றுக் கொண்டார்.இது வழக்கறிஞர் சிவசுப்பிரமணித்தின் "மனதை" சஞ்சலப்படுத்தியது. 'சிவா சுப்பிரமணியன், லிட்வின், ஆண்டன்" ஆகியோர் மக்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள். ஆகையால் அவர்கள் "மக்களுக்கு" பதில் சொல்லவேண்டும்.


ஆனால் "பேராயர்களும், உடுப்புடன் வந்த பங்கு தந்தைகளும், உடுப்பு இல்லாமல் வந்த பங்கு தந்தையான ஜேசுராஜ் என்ற மைபாவும்" யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். "மத நிறுவனத்திற்கு" தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.. மத நிறுவனத்திற்கு "காத்து" கேட்காது. அதனால் அவர்கள் யாருக்கும் "பதில்" சொல்ல வேட்னிய "அவசியம்" இல்லை. உதயகுமார் தனி ஒரு "அறிவியலாளர்". அவர் எழுதும் "வார இருமுறை ஏட்டில்" என்ன எழுதுகிறாரோ அதுதான் "பதில்". புஷ்பா ராயன் தனது" அரசு சார நிறுவனத்திற்கு" பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. "பட்டினி போராட்டம்" நடத்திய மீனவ் மற்றும் நாடார் இன மக்கள் மத்தியிலிருந்து "போதுமான" பிரதிநிதிகள் "வராததால்" அவர்களுக்கு "என்ன செய்தி" பிசெரும் எனபது கேள்விக் குறியே. தங்கபாலு மட்டும் "சரியான் ஆரசியல்வாதி" போல தான் அன்னை சோனியாவிடம் போய் சொல்லபோகிறேன் என்று "அங்கேயே மார் தட்டிக் கொண்டார்".


இப்போது 'அச்சு ஊடகங்களில்" வந்துள்ள செய்தி "அதிர்ச்சியை" தருகிறது. அதாவது 'இந்திய ராணுவம் யுரேனியத்தை செறிவூட்டி" அதில் "அனுகுயண்டு" தாயாரிக்க ஏற்பாடு செய்வதை "படங்களுடன்" கூகிள்காரன் வெளியிட்டு விட்டான்.2006 ஆம் ஆண்டு வந்த அந்த "படத்தை" அப்போதே அன்றைய குடியரசு தலிவரும், அணுகுண்டு அறிவியலாளருமான அப்துல் களாம் மற்றும் அய்.எஸ்.ஆர்.ஒ. தலைமை "கவலை" தெரிவித்தது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அது மைசூர் அருகே "அய்.எம்.ஆர்.எப். தளம் அருகே" செரிவூட்டப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. அதை "அய்.எஸ்.ஆர்.ஒ. தலைவர் பாப அணு ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.கே. சின்ஹா" ஒப்புக் கொண்டுள்ளார். இது "மாபெரும்" அனைத்து நாட்டு "விதி மீறல்" செயல் இல்லையா? இதுவரை "புலூட்டுனியம்" மூலம் மட்டுமே 'அணுகுண்டு" தயாரித்து வந்த "இந்திய" இப்போது தனது "ராணுவம்" மூலம் "யுரேனியத்தை செருவூட்டி" அதிலிருந்தும் "அணு ஆயுதம்" தாயரிக்கிறது என்பது "அம்பலமாகி" விட்டது. இது மிகவும் "ஆபத்தான" செயல். அதாவது "அமெரிக்காவுடன் 123 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை போட்டுள்ள மன்மோகன்" அந்த ஒப்பந்த்ததில் இனி "ஆகாபூர்வமான" காரியங்களுக்கு மட்டும் அந்த "யுரேனியத்தை" பயன்படுத்துவோம்" என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். இப்போது "மாட்டிக் கொண்டார்".


அதேபோல அமெரிக்க ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு, "என்.எஸ்.ஜி. என்ற அணு விநியோக நாடுகளுடன்" ஒப்பந்தம் செய்து, " அய்.ஏ.என்.ஏ." என்ற அனைத்துநாட்டு அணு கண்காணிப்பு அஜென்ஷி என்ற கழகத்துடனும் "ஒப்பந்தம்" போட்டுள்ள மன்மோகன்சிங் "அதையும்" இந்த "ராணுவ யுரேனியம் செறிவூட்டல் திட்டம்" மூலம் உடைத்து விட்டார். இனி இவருக்கு "யார்" யுரேனியம் தருவார்கள்? இத்தகைய "அழிவுக்கான அணு உற்பத்தியை" செய்யும் இந்திய அரசு, "எப்படி" இதுபோன்ற "திருட்டு வேலைகளை" செய்ய முடிகிறது? அதற்கு "ஒரே காரணம்"இங்கே அமுலில் உள்ள "ஒரு ரகசிய" விதிதான். அதாவது இந்திய 'அணுசக்தி" பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும், "பிரதமர், பாதுகாப்பு அமிச்சர்ப், அணு சக்தி துறை தலைவர்" ஆகிய மூவருக்கு "மட்டுமே" தெரிந்திருக்க வேண்டும். அதாவது இந்திய "மத்திய அமைச்சரவைக்கோ, இந்தியஅ நாடாளுமன்றத்திற்கோ" தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த "விதி" ஒரு "பழங்கால" தூசு தட்ட வேண்டிய விதி. இந்த "காலம்", தகவல் பெவ்ரும் உரிமையின் "காலம்". ஆகவே மக்களுக்கு எல்லாமே டேஹ்ரிந்திருக்க வேண்டும். இப்போது இதுபோன்ற விதிகள் அமுலில் உள்ளதால்தான்" கூடங்குளம்" மக்களுக்கும் "அச்சம்" தோன்றியுள்ளது.



மன்மோகனுடன் "மோதல்" கொண்டுள்ள "சோனியா காந்தி" தனக்கும், தனது "குடும்பத்திற்கும்" தெரியாமல் இப்படி ஒரு "விதி" இருப்பதை எப்படி "பொறுத்து கொள்ளப் போகிறார்?". ஆகவே "வெளிப்படித்தன்மை" அணு சக்தி விசயத்தில் "வேண்டும்". அதுவே
'மக்களின்" எத்ரிபார்ப்பு. அப்போதுதான் "மன்மோகன் ஏமாந்தாரா? அல்லது ஏமாற்றுகிறாரா?" என்பது புரியும்.

3 comments:

SURYAJEEVA said...

இதுக்கும் மேலயுமா உலகம் அவர நம்புது? ஸ்ஸ்ஸ் முடியல

malli said...

Every time people are being deceived

malli said...

Every time people are being deceived

Post a Comment