Wednesday, October 12, 2011

மெட்ராஸ் பலகலையில் "அம்பேத்கர் வாசகர் வட்டம்" கூட்டம்.

இன்று நடந்த "அம்பேத்கர் பொருளியல் மையம்" சார்பாக "அம்பேத்கரும் தொழிலாளர் சட்டங்களும்" என்ற கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக " பலராமன்" கலந்து கொண்டார். பலராமன் தமிழ்நாட்டில் "தொழிலாளர் துறையில்" பல பத்து ஆண்டுகளாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அம்பேத்கர் "கருத்தியலில்" ஊறிப்போனவர். இந்த அம்பேத்கர் வாசகர் வட்டத்தை பேராசிரியர் தங்கராஜ் "விடாப்பிடியாக" தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில், பலராமன் எடுத்து வைத்த வாதங்களில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந் நேரத்திற்குள், "அம்பேத்கர் எப்படி தொழிலாளர்" நலன்களை கவனித்து அதற்கேற்ற முறையில் "முடிந்த ளவில்" பல சட்டங்களை இயற்றினார் என்பதை புட்டு, புட்டு, வைத்தார்.

அவர் கூறிய விவரப்படி, அம்பேத்கர் இயற்றிய சட்டத்தில், " 141 சட்டங்கள்" தொழிளாலருக்காக எழுதப்பட்டவை என்ற செய்தியை பலராமன் பகிர்ந்து கொண்டார். அவை தவிர சில சட்டங்கள் தான் அம்பேத்கருக்கு பிறகு, இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு இயற்றப்பட்டுள்ளன என்றார் பலராமன். அம்பேத்கரின் வாரிசுகள் இன்றுவரை அத்தகைய "தொழிலாளர் நல சட்டங்களின்" பலன்களை பெறவில்லை எனபதை நாம் பார்த்து வ்ருகிறோம்.

1 comment:

Post a Comment