Thursday, October 20, 2011

கடாபி கைது செய்யப்பட்டாலும், சுடப்பட்டாலும், கடைசிவரை போராடினார்.

லிபியாவில் மக்கள் புரட்சி நடத்தினர். தெருவுக்கு வந்தனர். ஆயுதம் தூக்கினர்.எட்டு மாத காலமாக பெரும் திரளுடன் போராடி வருகின்றனர். இரண்டு மாதம் முன்பு தலைநகர் "திருபோலி" யை புரட்சி படை கைப்பற்றியது. அதற்கு பிறகும் கடாபி யின் சொந்த பகுதியான "சிர்டி" உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் "முழு வெற்றி" யை அறிவிக்க முடியவில்லை. ஜனநாயகம் கடாபி ஆட்சியில் இல்லை என்பதே அந்த புரட்சி படையின் முழக்கம். ஆயுதம் தாங்கிய புரட்சி படை, கடாபி யின் ஆயுதம் தாங்கிய படையுடன் மோதி வந்தது. இரண்டு படைகளும், லிபியா நாட்டு மக்களை போராளிகளாக் கொண்ட படைகள்தான்.

அப்படியானால் அவர்களுக்குள் என்ன வேறுபாடு? லிபியா நாட்டில் அதிகமாக "எண்ணெய் வளம்" இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு மூக்கை "வியர்த்து" விட்டது. அதனால் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் "புரட்சிபடைக்கு" ஆயுதங்கள் கொடுக்கிறார்கள். அந்த புரட்சி படை பல இடங்களை கைப்பற்றிய பிறகு , "ஒரு தற்காலிக அரசாங்கத்தை" ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனாலும் கடாபி பிடிபடும் வரை, மீதம் உள்ள சிர்டி பகுதி கையில் வரும்வரை முழு வெற்றியை அவர்கள் அறிவிக்க முடியவில்லை. இன்மேல் அறிவிப்பார்கள். கடாபி ஒரு ஆயுதம் தாங்கிய வாகன வரிசையில் செல்லும்போது, பிடிபட்டார், இல்லை சுடப்பட்டார், அல்லது கடுமையாக காயம் பட்டு உயிருக்கு போராடிவருகிறார் அல்லது கொள்ள்ளப்பட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மாபெரும் அமெரிக்கா படைகள், மாபெரும் நேடோ படைகளுடன், உள்ளூர் புரட்சியாளர்களுக்கு உதவி வரும்போது, தங்கள் நாட்டை அல்லது தாங்கள் ஆண்டு வந்த நாட்டை கைப்பற்றி வரும்போது, தைரியமாக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பை கொடுத்து கொண்டே பிடிபட்டார் அல்லது வீழ்ந்தார் என்றால், யார் வீரர்? கடாபியா? அமெரிக்காவா? இது போர் பற்றிய கேள்வி.

அடுத்து எதற்காக மக்கள் போராடுகிறார்கள்? எதற்காக அமெரிக்கா நுழைகிறது? இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும். மக்கள் ஜனநாயகம் வேண்டும் என்பதற்காக கடாபியின் சர்வாதிகாரத்தை எத்ரித்து போராடினார்கள். அவர்களும் இஸ்லாம் மீது நம்பிக்கை அவித்தே போராடினார்கள். அவர்கள் கடாபியின் ஆயுதம் தாங்கிய படையை எதிர்க்க வேண்டி இருந்தது. அதனால் அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளின் சக்திகளை பயன்படுத்தினார்கள். இது ஒரு பார்வை. எதற்காக அமெரிக்காவும், நேடோ நாடுகளும் இந்த போரில் குதிக்கின்றன? அவர்களுக்கு லிபியாவின் "எண்ணெய் வளத்தை" கைப்பற்ற வேண்டும். அவர்கள் இராக்கை கடும் போர் புரிந்து கைப்பற்றியும் போதுமான எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானை குறிவைத்து போர் நடத்தியும் இன்னமும் "தலிபான்களின்" கையிலிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இன்னமும் ஆப்கான் தலியான்கள் கைகளில்தான் "எண்ணெய் வளத்துடன்" இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியான பழங்குடி மக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்த புதிய தந்திரங்களை போட்டு வருகிறார்கள்.


அதேபோலத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் லிபியாவை பார்கிறார்கள். அதனால் கடாபியை எத்ரிக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, போர் நடத்தி, நாட்டை கைப்பற்றி "எண்ணெய் வளம்" உள்ள லிபியாவை கையில் எடுக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்கு "ஜனநாயகம்" கொண்டு வரும் முயற்சி என்று வேறு கூறுகிறார்கள் அப்படியானால் அந்த "ஜனநாயகம்" என்பது என்ன? அமெரிக்கா கூறும் ஜனநாயகம் "அமெரிக்கா ஆதரவு சக்திகளை" ஆட்சியில் அமர்த்துவது மட்டும்தான் என்றால் ஜனநாயம், சர்வாதிகாரம் ஆகியவற்றிற்குள் இந்த இடத்தில் எப்படி வேறுபாடு காண வேண்டும்? ஜனநாயமும், சர்வாதிகாரமும் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் என்று லெனின் கூறியது இங்கே பொருந்துமா? பொருந்தும். எப்படி பொருந்தும்?

ஒரு நாட்டிற்குள் ஒரே குடும்பத்தின் அல்லது ஒரே குடையின் கீழ் ஆட்சி ஒன்று பல பத்து ஆண்டுகளாக நடந்துவந்தால், அது எந்த பெயரில் நடந்தாலும் யார் அதன் கதாநாயகனாக இருந்தாலும் அந்த ஆட்சியில் ."அதிகாரத்தை சுவைத்தவர்கள்" இறுக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மக்கள் காலப்போக்கில் வெறுத்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஆட்சியாளர்களை "மேற்கத்திய நாடுகள்" தங்கள் நலனுக்காக நெருக்குமானால், அவர்கள் அந்த மேற்கத்திய நெருக்களுக்கு "அடிபணியாமல்" இருப்பார்களானால், அமெரிக்கா உட்பட நேடோ படை நாடுகளுக்கு அந்த ஆட்சியாளர்கள் மீது ஒரு "கண்" விழுந்தி விடுகிறது. அதை ஒட்டி, குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அந்த நாட்டிற்குள் ஒரு 'எதிர்ப்பு" வராதா என்று அதிர்பார்த்திருந் அமெர்கத்திய நாடுகளுக்கு திடீரென கிளம்பும் எந்த எதிர்ப்பையும் கைப்பற்றி செயல்பட போதுமான "உலகளாவிய" வசதிகள், ஊடகங்கள் உள்ளன.


கேட்கவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் உடனடியாக அந்த குறிப்பிட்ட நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், சர்வாதிகாரம் நடக்கிறது என்றும் பேச அதிக வாய்ப்பு உள்ளது. அது போராடும் புரட்ச்சியாலர்களுக்கு "இனிப்பு" செய்தியாக இருக்கிறது. இந்த இடத்தில் கடாபியையோ, இராக்கில் சதாம் ஹுசைனையோ, நாம் சர்வாதிகாரம் இல்லை என்று கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் அது அந்த நாட்டிற்குள் உள்ள பிரச்சனை. அந்த "ஒப்புமை ரீதியான சர்வாதிகாரத்தை" ஒழிக்க மக்கள் போராடும்போது, அமெரிக்கா நுழைகிறது. தான் முழு ஜனநாயக காவலன் என்று வேடம் போடுகிறது. உடனே மக்களும் நம்பி அதன் உற்ற்ஹவியை வாங்குகிறார்கள். அமெரிக்காவின் நோக்கம் அங்கே தனது "அடிவருடிகளை" ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனபதுதான்.

அதனால் அமெரிக்காவும் ஜனநாயகத்தை உண்மையில் கொண்டுவர இறங்க வில்லை. "ஒப்பீட்டளவு ஜனநாயகத்தை" காட்டி தனகது "சர்வாதிகாரத்தை" கொட்னுவர அமெரிக்கா முயல்கிறது. இதுதான் இராக்கிலும், ஆப்கானிலும், இப்போது லிபியாவிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். அபப்டியானால் கடாப்பி செய்தது எல்லாம் சரியா? சரியில்லைதான். ஆனால் அமெரிக்கா செய்வதும் சரியில்லை எனபதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பீட்டளவு ஜனநாயகம், ஒப்பீட்டளவு சர்வாதிகாரம் ஆகிய இரண்டுமே மக்களை ஆட்சியாளர்களாக மாற்றாது. ஒன்று அமட்டும் தெரிகிறது. சதாம் ஹுசைனோ, கடாபியோ, கடைசிவரை போர் செய்து, பிடிபட்டு, கொள்ளப்படுவதால், "வராலாற்றில்" மா வீரர்களாக நிற்கிறார்கள். சர்வாதிகாரமும், ஜனநாயகமும் "ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள்" எனபது இதுதான். .

1 comment:

Bibiliobibuli said...

ஒரு நல்ல அலசல். நாணயத்தின் இரு பக்கங்கள் சர்வாதிகாரமும், ஜனநாயகமும்.

இனி ஜன நாயகம் மாற்றுகருத்து, என்று அங்கே அமெரிக்காவின் விருப்பப்படி ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவார்கள். உடனேயே லிபியாவுக்கு ஹிலரி சென்றுவிட்டார். லிபியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமிக்கப்பட்டுவிட்டார். இனி என்ன நடக்கும்??

Post a Comment