இன்று நாடெங்கும் நிலக்கரி சுரங்கங்கள் தெலுங்கானா போராட்டத்தாலும், மற்றும் பல காரணங்களாலும், செயல்படவில்லை என்பதால், அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை என்பது பொதுவாக வருகின்ற செய்தி. மின் உற்பத்திக்கு, "நீர் வழி மின் உற்பத்தி", எனபது ஹைட்ரோ பவர் என அழைக்கப்படுகிறது. அது தமிழ்நாட்டில் குந்தா, பைகாரா, மேட்டூர், கோதையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு - மேல் அணை, கீழ் அணை என்று பல அணைக்கட்டுகளில் இருந்து நீர் சக்தியின் ஆற்றலை பயன்படுத்தி "மின் சக்தியை" உற்பத்தி செய்யும் வகை. அடுத்து நிலக்கரியை பயன்படுத்தி "அனல் மின் நிலையங்கள்" மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை.
அந்த வகையில்தான் இந்தியா எங்கும் பல அனல் மின் நிலையங்கள் உருவாகின்றன. அவற்றில் என்.எல்.சீ. என்று அழைக்கப்படும் நெய்வேலி அனல் மின் நிலையம், சென்னையில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின் நிலையம், வட சென்னை அனல் மின் நிலையம், போன்றவை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டும் , சமயநல்லூர், பிள்ளையார்பட்டி, போன்ற தனியார் அனல் மின் நிலையங்களும் தோன்ற தொடங்கின. இத்தகைய அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வரவேண்டும். ராநிகுன்ச் என்ற இடத்திலிருந்து, ஜாரியா வந்து, பாரதீப் வழியாக, தூத்துக்குடிக்கு கப்பல் வழியாகவும், விசாகப்பட்டினத்திலிருந்து தொடர்வண்டி மூலமும், கப்பல் மூலமும் இந்த நிலக்கரி வந்து மின் உற்பத்திக்கு பயன்படும். அதற்காக தமிழக அரசின், "பூம்புகார் கப்பல்கள்" பயன்படுத்தப்படும். அததகைய கப்பல்களை வாங்குவதில்தான் எம்.ஜி.ஆர். காலத்தில் கலைஞர் கிளப்பிய "கப்பல் பேர ஊழல்" என்பது வெளிவந்தது.
இந்தியா பவர் பிளான்ட் என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் இந்த நிலக்கரி விநியோகம் நடக்கும். அதற்காக " கோல் மினிஸ்ட்ரி" என்ற மத்திய அரசின் "நிலக்கரி அமைச்சகம்" ஒரு "லின்கேஜ் கமிட்டி கூட்டம்" என்ற தொடர்பு குழு கூட்டம் போடுவார்கள். அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிலக்கரி வேண்டும் என்று கேட்டு அதை ஒட்டி முடிவு செய்வார்கள். இந்தியா எங்கும் கிடைக்கும் அரசுசார் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து உற்பத்தி ஆகும் நிலக்கரியை, இவ்வாறு பகிர்ந்து அளிப்பார்கள். அப்படி ஒரு கூட்டம் 2004 ஆம் ஆண்டு நடந்தது.அந்த கூட்டத்தில் கிடைக்கும் அளவையும், மாநிலங்களின் தேவையையும் பார்த்தால் முரண்பாடாக இருக்கிறது என்று கூறிய நிலக்கரி அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொடுக்கும் நிலக்கரி அளவை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. அப்போது சில மாநிலங்கள் தங்கள் தேவையை குறைக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களின் அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்படும் அளவு என்பதை குறைக்க சம்மதித்தனர்.
அதன்பிறகு தனியாரிடம் நிலக்கரி வாங்கும் பழக்கம் அதிகமானது. இந்திய அரசு பல நிலக்கரி சுரங்கங்களை "தனியாருக்கு தாரைவார்த்து". அவற்றில் இருந்து வாங்கும் நிலக்கரிக்கு சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு "கையூட்டு" கிடைத்து. இந்தியா முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு தனது நேரடி உற்பத்தியிலிருந்து, "எழுபத்தைந்து" விழுக்காடுதான் கொடுத்து. மீதியை "தனியாரிடம்" வாங்கிக் கொள்ள பணித்து. அதபடி தனியாரிடம் நிலக்கரி வாங்கும் அதிகாரிகள் அந்த "ஊடாடலில்" அதிகமாக் லாபம் பெற்றனர். 2005 ஆம் ஆண்டிலிருந்து, 2007 ஆம் ஆண்டு வரை , தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா அய்.ஏ.எஸ். பற்றி நாம் தனியாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருப்பதற்கு இந்த அதிகாரிகளே காரணமாகி விடுகிறார்கள்.
இப்போது தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருப்பவ்ரும் அவரே. அவர் இப்போது "அலுவலகத்துக்கே" வருவதில்லை என்ற புகாரும் இருக்கிறது. இதே மனிதர் அடுத்து வாத திமுக ஆட்சியிலும் அதே பதவியை வகித்து, ஆற்காட்டாருக்கு நெருக்கமாக இருந்தார். அதிக லாவில் தனியாரிடம் மின்சாரத்தை வாங்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. மீண்டும் அதே இடத்திற்கு இப்போது வந்துவிட்டார். மீண்டும் இப்போதுள்ள அமைச்சருக்கும நெருக்கமாகவே உள்ளார். பழைய உறவும் அதில் இருக்கலாம். தனியாரிடம் வாங்கும் "இருபத்தைந்து" விழுக்காடு நிலக்கரியில் எத்தனை விழுக்காடு இந்த "பெரிய மனிதர்களுக்கு" என்பதை அரசுதான் ஆராய வேண்டும்.இப்போது நிலக்கரி உற்பத்தி சீராகி வருகிறது. அதனால் இந்த ஆய்வு தேவை.
கோல் பிளாக்ஸ் எனப்படும் "நிலக்கரி ஒதுக்கல்கள்" உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடு மின்வாரியமும், மகாராஷ்டிரா மின்வாரியமும் சேர்ந்து "உடன்குடியில்" ஒரு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நிலையம் திட்டமிடப் பட்டது. அது என் இன்னமும் தொடங்கப்படவில்லை? அதேபோல மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு இப்போது இருக்கும் நிலக்கரி சேமிப்பு சில நாட்களுக்குத்தான் வரும். அவர்களுக்கு மின்வாரிய "தொடர்பு ஒதுக்கீட்டில்" நிலக்கரி ஒதுக்கப்படவில்லை. அதாவது அவர்கள் அதில் கேட்டு பெறவில்லை. எப்படி அந்த தேவையை சமாளிக்க போகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளும் அதிகாரிகள் பற்றி இருக்கிறது. அரசு இந்த தைகாரிகளை "கேள்விகள்" கேட்குமா? அதன்மூலம் தமிழக மக்களுக்கான தேவையை நிரப்ப முயற்சி செய்யுமா? இல்லையென்றால் "அணு உழைத்தான்" ஓர் தீர்வு என்று "பயமுறுத்தும்" டில்லிகாரர்களுக்கு "பலியாகிவிடுமா?".
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment