Sunday, November 13, 2011

அண்ணா நூலகம் கட்ட பயன்பட்ட நிதி கிராம நூலகங்களுடையதா?

தமிழ்நாட்டில் ஆயிரம் ஊரக நூல்நிலயகள் இருக்கலாம். அவைகளுக்கு தனியாக அவற்றின் வளர்ச்சிக்காக ஏற்கனவே ஒரு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை முறையாக "ஊரக நூல்நிலயங்களுக்கு" செலவழித்தால் ஒவ்வொரு கிராமத்திலும் படித்த மற்றும் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு "நூல்களை"படிக்க அது உதவும். அப்படி உதவ அனுமதித்தால் கிராமப்புற தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றி வைத்ததாக அரசை பாராட்டுவார்கள். ஆனால் அந்த செயல்பாடு நடக்க விடாமல் அரசு தடுத்து விட்டது என்று இப்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று நாமும் விரும்பலாம்.

ஆனால் மூன்று நாட்கள் முன்பு தினமணி ஏட்டில் வந்திருந்த ஒரு "தகவல் பெறும் உரிமையால் கிடைத்த விவரம்" நம்மை உலுக்கி விட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புற நூல்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் அந்த செய்தியை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக பெற்று இருந்தார். அதில் "ஊரக நூல் நிலையங்களுக்கு" ஒதுக்கப்பட்ட நிதிதான் இந்த பிரபலமான "கோட்டுர்புரம் அண்ணா நூல் நிலையம்" கட்ட செலவழிக்கப்பட்ட 168 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி செய்தி தகவல் பெறும் உரிமை மூலம் கிடைக்கப்பட்டிருந்தது.அப்படியானால் எங்களை எல்லாம் அண்ணா நூலகம் கட்டப்பட்டது ஒரு மாபெரும கொடை என்று நம்ப வைத்து கழுத்தறுத்து எங்கள் கிராமப்புற இளைஞர்களின் படிப்பை கெடுத்துதானா?

நகரங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்று என்று நூலகம் தேட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். ஆனால் கிராமங்களில் எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே அறிவு பெட்டகம் நூலகம்தானே? அதற்காக அரசு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவுதானே? அந்த குறைந்த நிதியையும் ஒட்டுமொத்தமாக திரட்டி எடுத்து இத்தனை கோடி பணம் சேர்த்து அதை கொண்டுவந்து அண்ணா நூல்நிலையத்திற்கு கொட்டுர்போர்த்தில் கொட்டிவிட்டீரே? கலைஞர் அவர்களே, இது முறைதானா? உங்கள் நுகம் நூலகம் கட்டுவதா? அல்லது செல்வி.ஜெயலலிதா கட்ட திட்டமிட்டிருந்த தலைமை செயலகம் அந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியத்தால் வரக்கூடாது என்ற எண்ணத்திலானதா?

அதுதவிர அந்த அண்ணா நூலகத்திற்காக வாங்கிய நூல்களின் பட்டியலில் "நூலின் விலையை விட அதிக விலையாக ஐம்பதாயிரம்" கொடுத்து வாங்கப்பட்ட நூல்களின் பட்டியலும் உள்ளதே? அது ஊழல்தானே? அப்படியானால் ஒரு ஏடு கட்டிடம் கட்ட ஊழல் செய்தவர்கள் என்று எழுதியதற்கு கொப்பப்பட்டு வழக்கு போட துடிப்பது எந்த வகை கலைஞர் அவர்களே? ஐயோ. ஐயோ. தொட்டதெல்லாம் ஊழலாக இருக்கிறதே? இதில் எண்ண நேர்மை இருக்கிறது? இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது எப்படி? சரி. இந்த மாற்றத்தால் நூலகம் டி.பி.அய். வளாகம் என்ற "கல்வி இயக்கக"வளாகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுசார் பூங்கா" என்ற பெயரில் கன்னிமாரா நூல்நிலயத்தையும் சேர்த்து, அண்ணா நூலகத்தையும் சேர்த்து வரப்போகிறதே? அது நல்லதுதானே? இன்னொரு உழன்தைகள் சிறப்பு மருத்துவமனையும் கிடைக்கிறதே? இந்த மாற்றத்தால் இரண்டு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே?

5 comments:

Saha, Chennai said...

//"கோட்டுர்புரம் அண்ணா நூல் நிலையம்" கட்ட செலவழிக்கப்பட்ட 168 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி செய்தி தகவல் பெறும் உரிமை மூலம் கிடைக்கப்பட்டிருந்தது.அப்படியானால் எங்களை எல்லாம் அண்ணா நூலகம் கட்டப்பட்டது ஒரு மாபெரும கொடை என்று நம்ப வைத்து கழுத்தறுத்து எங்கள் கிராமப்புற இளைஞர்களின் படிப்பை கெடுத்துதானா?//

பரவல்ல விடுங்கண்ணே, இதுக்கெல்லாம் டென்சன் ஆயிக்கிட்டு!?!. இப்பதான் நம்ம ஆத்தா வந்து அந்த நூலகத்த காலிபண்ண சொல்லிட்டதுனால அந்த 168 கோடி ரூவா திரும்ப கிடச்சிடுச்சுல்ல, அப்புறம் எண்ணனே, அதவச்சு அறுந்த கழுத்துல பிளாஸ்திரிய ஒட்டிக்கிட்டு புள்ளயல படிக்கவச்சுருவோம்.

//ஐயோ. ஐயோ. தொட்டதெல்லாம் ஊழலாக இருக்கிறதே? இதில் எண்ண நேர்மை இருக்கிறது? இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது எப்படி? சரி. இந்த மாற்றத்தால் நூலகம் டி.பி.அய். வளாகம் என்ற "கல்வி இயக்கக"வளாகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுசார் பூங்கா" என்ற பெயரில் கன்னிமாரா நூல்நிலயத்தையும் சேர்த்து, அண்ணா நூலகத்தையும் சேர்த்து வரப்போகிறதே??//

அண்ணே, இதுமாரி எனக்கும் ஒரு ஐடியா வந்துசுண்ணே. நம்ம ராசா அண்ணே மொபைலு அலைல எவ்வளவோ அடிசிட்டாராம். அதுனால நம்மல்லாம் அந்த நேரத்துல வாங்குன சிம் கார்ட கொண்டுக்கு போயி அடுப்படியில வச்சுட்டு (அது ஊழல் நடந்த நேரதில வாங்குனதுனால வெல கொறச்சலா கிடச்சுசுல்ல.) ஒரு புது "ஒருங்கிணைக்கப்பட்ட சிம் கார்டு" வாங்கிருவமா. எலியிம், மூட்டபூச்சியிம் அண்ணா நூலகத்தை திங்கபோறதுமாரி அந்த பழய சிம் கார்டையும் திங்கட்டும், அப்படிப்பட்ட கேவலமான ஊழல் பணத்துல கட்டுன நூலகமும் வேணா, சிம் கார்டும் வேணாம்னே. யே, யார்யா அது மணி அண்ணே சிம் கார்ட புடுங்குறது, அண்ணனா தருவாருரா. அண்ணே குடுத்துருங்கஅண்ணே.

//இன்னொரு உழன்தைகள் சிறப்பு மருத்துவமனையும் கிடைக்கிறதே? இந்த மாற்றத்தால் இரண்டு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே? //
அட எவ்வளவு நல்ல விசயும்னே. அந்த அண்ணா நூலகத்த கொழந்த ஆசுபத்திரியா மாத்துறதுக்கு இன்னொரு 500 கோடி ரூவாகூட செலவு பண்ணலாம்னே. (என்னாது, புதுசா கொழந்த ஆசுபத்திரி கட்டடம் கட்டுனாக்கூட அவ்வளவு ரூவா ஆகாதா, யே, இரிங்கய்யா, பேசிகிட்டு இருக்கோம்ல, சும்மா நை நைனு ஊடால.) அப்புறம் வாஸ்து பிரகாரம் அந்த ரூம தூக்கி இங்க வக்கெனும், இந்த ரூம தூக்கி அந்த ஆப்பெரேசன் தேட்டருக்கு பக்கத்தில வக்கெனும், தூக்கு கூலி, ஏறக்கு கூலி, ரூம தூக்குற வண்டி வாடக செலவு, அப்புறம் நம்ம கவுன்சிலரு, எம்மேல்ய, எம்பி, வட்டம், மாவட்டம், காண்டாக்டர் கமிசன் செலவுல்லாம் இருக்குல்ல.

Saha, Chennai said...

அப்புறம் தமிலக மக்கள் அல்லாருக்கும் பொதுவான அறிவிப்பு:-

நம்ம ஆத்தா தேர்தல்ல சொன்னமாரி கிரைண்டரு, மிக்சி, ஆடு மாடு கோழியெல்லாம் குடுக்கபோறாங்களாம். ஆனா அதுக்கு காசு இல்லாததுனால, புதுசா எலைட்டு மதுக்கட தொறக்கபோறாங்களாம். அல்லாரும் டாஸ்மார்க்கிற்கு வழங்கியதைபோன்றே இதுக்கும் உங்கள் பேராதரவை வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம். சைடு பிட்டு, யாரு அதிகமா எலைட்டுல குடிக்கிறாங்களோ அவுங்களுக்கு சீக்கிரமா கிரைண்டரு வழங்கப்படும். அதுனால சீக்கிரம் போயி குடிச்சு கிரைண்டரு வாங்கி முன்னேர்ற வலியபாருங்க. எலைட்லயும் , டாஸ்மார்கிலையும் ஆம்புளைக குடிச்சதுனால தாலியறுத்த, கழுத்தருக்கபட்ட மனைவிகள், குழந்தைகளுக்கும் கிரைண்டருல முன்னுரிம உண்டாம்.

அறிவிப்பு 2 :-
எலைட்லயும் , டாஸ்மார்கிலையும் குடிச்சு ஒடம்பு முடியாம போன குடிமகன்களுக்கு, சிறப்பா சிகிச்சைஅளிக்க கோயம்பேடு மேம்பாலத்த "ஒருங்கிணைந்த குடிமகன்கள் சிகிச்சை மையமா" மாத்துரதாவும் இந்த அரசு முடி(?) எடுத்துருக்கு. அந்த ஒருங்கிணைந்த குடிமகன்கள் சிகிச்சை மையம் ஒலகத்துலேயே பெருசாவும் எலைட்டையும் சேர்த்து டாஸ்மார்கையும் சேர்த்து வரப்போகிறதே? அது நல்லதுதானே? இந்த மாற்றத்தால் நாலு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே?

Saha, Chennai said...

அப்புறம், கானா நீனா கட்டுன அந்த தலமசெயலகத்தில மொதல்ல ஆசுபத்திரி ஆரம்பிக்க சொல்லுங்கப்பா, மேலுக்கு முடியல, ஒரு வாரமா காச்ச, டாக்டருட்ட காமிக்கணும். மொதல்ல அங்க ஆசுபத்திரி ஆரம்பிச்சுட்டு அப்பறம்தான் இங்க நூலகத்தில கொழந்த ஆசுபத்திரி ஆரம்பிக்கணும், சொல்லிபுட்டேன், ஆமா.

Saha, Chennai said...

அறிவிப்பு 2ல் ஒரு திருத்தம்.
நூலகம் , சமசீர் கல்வி போன்ற அறிவு சம்மந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே தலையிட்டு அதை ஒன்றும் இல்லாமல் போகச்செய்வது என்ற இந்த அரசின் கொள்கை முடிவிற்கு ஏற்ப இந்த புதிய "ஒருங்கிணைந்த குடிமகன்கள் சிகிச்சை மையம்" கானா நீனாவால் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி மற்றும் கோவை அண்ணா பல்கலைகழகத்தில் செயல்படும் என்றும், அங்கு உள்ள பல்கலைகழகங்கள் தற்காலிகமாக குப்பை தொட்டிக்கு மாற்றப்படும் அறிவு(!)க்கபடுகிறது. அங்கெ படிக்குரவனேல்லாம் நாங்க குடுக்குற கிரைண்டரையும், மிக்சியையும் வித்துட்டு எலைட்டுல போயி குடிச்சிட்டு (ஐ, பணம் திரும்ப அரசாங்கத்துக்கே வந்திருச்சு.), ஆடு மாடு கோழிய மேச்சு பொலச்சுக்க.

Saha, Chennai said...

//அந்த நிதியை முறையாக "ஊரக நூல்நிலயங்களுக்கு" செலவழித்தால் ஒவ்வொரு கிராமத்திலும் படித்த மற்றும் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு "நூல்களை"படிக்க அது உதவும். அப்படி உதவ அனுமதித்தால் கிராமப்புற தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றி வைத்ததாக அரசை பாராட்டுவார்கள். ஆனால் அந்த செயல்பாடு நடக்க விடாமல் அரசு தடுத்து விட்டது என்று இப்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது.//

அட, ஆமாண்ணே, இதுவரைக்கும் அந்த பணத்தவச்சு எத்தினபேரோட வாழ்க்கையில ஒலி / ஒளி அமச்சுக்குடுத்தாங்க. நாயமா பாத்தா அந்த பணத்த பொதிகை டிவி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கிதான் குடுத்துருக்கணும். அத வந்து இந்த கானா நீனா கெடுத்துப்புட்டாரே. ஆனா, நீங்க ரொம்ப அறிவாளிண்ணே, நூலகதுக்குனு தனியா ஒரு நிதி இருக்குன்னு முன்னாடியே ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஊரக "நூல்நிலயங்களுக்குனு " உள்ள நிதிய எடுத்து "சாராய கட" தொறந்தாதான அண்ணே தப்பு, மெட்ராசுல "நூல்நிலையம்" தொறந்தா தப்பா அண்ணே? ஆமா, அந்த "ஊரக நூல்நிலயங்களுக்குனு" உள்ள நிதிய எடுத்து "ஊரக சாராய நிலையம்" ஆரம்பிச்சு இருந்தா உங்களுக்கு தெரியுமா அண்ணே? இப்புடி கேள்வி கேக்க முடியுமா அண்ணே?

Post a Comment