எழுத்துக்கள் புத்தகங்களில், ஏடுகளில், இணைய தளங்களில், வரும்போது, சில சிலருக்கு எரிச்சலை உண்டுபண்ணும். சில சிலருக்கு உற்சாகத்தை டஹ்ரும். சில சிலருக்கு தென்றலாய் தெரியும். இப்படி எழுத்துக்களில் பலவகை உள்ளது. அதில் பலரையும் பாதிக்கக்கூடிய எழுத்துக்களை சில நேரங்களில், வக்கிரபுத்தி எழுத்துக்கள் எனவும், "கொலைவெறி" எழுத்துக்கள் எனவும் குறிப்பிடலாம். அப்படி எழுத்தியவற்றிற்கு சில நேரங்களில் "பதில்" என்பது வெவேறு வகைகளில் கிடைக்கும். அப்படி ஒன்று இரண்டு நாட்கள் முன்னால் நடந்தது. அந்த தமிழ் ஏடு பிரபல ஏடு. அந்த ஏட்டில் தொடர்ந்தது "தமிழர்" பிரச்சனைகளில் "எதிர் சார்பு" நிலையையே எடுத்து வருவது கண்கூடு.
"புலவர்கள் பெண்களை பூ எனச் சொன்னான் , புலியாய் மாற்றினார் அண்ணன்.புலவர்கள் பெண்களை மான் எனச் சொன்னார். நெருப்பாய் மாற்றினார் அண்ணன்" என்ற பாடல் வரிகளுக்கு அந்த நான்கு பெண்களும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். "பூ" எனும்போதும், "மான்" எனும்போதும் விரல் அசைவுகளில் நடன நளினம் அந்த இளம் தமிழ் பெண்களுக்கு ஓடி வந்தது. அண்ணன் பிரபாகரன் பற்றி நவம்பர் 26 ஆம் நாள் பிறந்த நாளிலும், நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளிலும் அந்த பாடல்கள் நடனங்களாக நாம் இருப்பது கிளிநோச்சியிலா என வியக்கும் அளவுக்கு விழித்த கண்களை மூடமுடியாமல் நாம் அமர்ந்திருந்தோம். அந்த நான்கு பெண்களின் நடனத்தில் ஒரு இளம் தோழியை காணவில்லையே? ஆம். அதுதான் "செங்கொடி". செங்கொடியின் விரல்கள் பூ என விரிந்து காட்டும். மான் என மடங்கி காட்டும். அந்த நளினம் நம் கண்களை விட்டு அகலவில்லை. அன்று "செங்கொடியின் நினைவு மண்டபம்" திறந்தார்கள்.அதற்கான நிகழ்ச்சி மேடையில்தான் இந்த நடனம்.
அவ்வாறு நிகழ்வு சென்று கொண்டிருக்கும் போது, மேடையின் எதிரே நாம் அமர்ந்து இருந்தோம். எங்களுக்கு இடதுபுறம், கூட்டத்தை எல்லாம் தாண்டி திடீரென ஒரு சல,சலப்பு. ஒரு "சாமி வேடம்" போட்டவர் ஓடிக்கொண்டிருந்தார். அவரை சிலர் துரத்தி கொண்டு ஓடினர். திருப்பதிக்கோ, பழனிக்கோ போகும் நபர் இங்கு எண்ண "தவறு"செய்து விட்டு "ஓடுகிறார்" என்று கேட்டேன்.எதற்காக அவர் இங்கே அதுவும், காஞ்சி மாவட்டம் மேலக் கதிர்புரின், மனகல்ம்பாடி என்ற "சென்கொடியூரில்" உலகிடை கிராமத்தில் ஓடவேண்டும் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு "திருடன்" மாட்டிக் கொண்டதுபோல "தலை தெறிக்க" ஓடுகிறானே? பின்னால் ஓடுபவர்கள் ஏன் துரத்த வேண்டும்? குக்கிராமத்திற்குள் வந்து ஒருவன் ஓடவேண்டும் என்றால் அவன் "தவறு செய்து விட்டு: அதை உணர்ந்து தானே ஓடவேண்டும்? எல்லோரும் உட்காருங்கள் என்றனர். பொதுமக்கள் மேடை நிகழ்வில் மீண்டும் மூழ்கிப் போனோம். எதிராய் இருந்தாலும் அடிக்கவேண்டாம் என்று முன்னால் ச.ம.உ.வேல்முருகன் கூறினார். இங்கே எதற்கு எதிரி வருகிறான் என்று நாம் கேட்டுக் கொண்டு அம்ர்தந்து விட்டோம்.
அதற்கு பிறகு ஓடியவன் அந்த "தமிழ் ஏட்டின் நிருபர்" என்றனர். ஊடகமா என விசாரிக்க போனேன். ஆமாம். அவன் வந்திருந்தான். அவனை ஏற்கனவே காஞ்சிபுரம் கார்களுக்கு தெரியும். அவன்தான் செங்கொடி மரணத்தை தழுவிய மறுநாள் அவர்கள் ஏட்டிலே "வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொண்டுவந்து போட்டார்கள் என்று எழுதியவன். ஏன் இப்போது இங்கே வந்தாய் என ஒரு பையன கேட்டான். நான் ஊடகம் என்றான். அப்படியானால் அன்று ஏன் செங்கொடி பற்றி பொய்யாக எழுதினாய் இன்னொருவன் கேட்டான். ஆராய்ந்துதான் எழுதினேன் என "திமிறாய்" பதில் சொன்னான். டேய் என ஒரு பையன சொல்ல, "ஓடத்" தொடங்கிவிட்டான். நின்றிருந்தால்கூட யாரும் அடிக்க முனைய மாட்டார்கள். ஓடத் தொடங்கியவனை சிலர் "துரத்த" தொடங்கினர். இது சாதாரண மக்கள் பழக்கம். ஊடகக்காரன் எங்காவது பேசும்போதே "ஓடுவானா?". அவனுக்கு அப்படி "நடக்க" சொல்லிக்கொடுத்து "அனுப்பி இருக்கிறார்களா?". தெரியவில்லை.
அடித்து விட்டு சிலர் வந்து விட்டார்கள். வந்தவனும் ஓடிவிட்டான். அந்த குக்கிராமத்தில், காஞ்சியிலிருந்து எட்டு கிலோ மேட்டார் தூரம் கொண்ட மன்கலபாடியில், அவனை குறி வைத்து அடிக்க யாரும் எண்ணியிருந்தால், அவனை மீண்டும் ஓடிப்போ என விட வேண்டிய அவசியம் இல்லையே? இத்தனை தூரம் காவல்துறை யோசீக்காதா? அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் அது தெரியுமே? அப்படி இருக்கும் போது, ஏன் மறுநாள் வந்து மக்கள் மன்றம் "மகேஷ் உட்பட, ஜெசி, உமா" என்ற பெண்களுடன் பதின்மூன்று பேரை காவல்துறை அள்ளி சென்று வேலூர் சிறையில் அடைக்கவேண்டும்? அந்த நிகழ்வு நடக்கும்போது மக்கள்மன்றம் மகேஷ், ஜெசி, உமா போன்றோர் எங்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களுக்கும் அந்த "ஓட்டமும், விரட்டலும்" ஆச்சர்யமாக இருந்ததே? எப்படி அவர்களை காவல்துறை "கைது" செய்ய முடியும்?
மேலிருந்து வந்த உத்தரவாமே? யார் அந்த மேலிருந்து ? ஓகோ. அதுதான் அந்த "தமிழ் ஏட்டின்" முதலாளியா? அவர்தானே "செங்கொடி" பற்றி மோசமாக எழுதி தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாக்க காரணமானவர்? அவர்தானே "மூன்று தமிழர் உயிர் காக்க" சட்டமன்ற தீர்மானம் போட்டும்கூட, "தூக்கு போடவேண்டும்" என்று எழுதி, தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாகாதா? என்று காத்து கிடந்தவர்? வேண்டும் என்றே அந்த ஏட்டின் முதலாளிகள் இந்த மக்கள் மாற நிகழ்ச்சியை "பாழ்" படுத்த அப்படி ஒரு ஆளை அனுப்பி இருப்பார்கள் என்று ஒரு சென்னையின் மூத்த ஊடகத்தார் என்னிடம் கூறினார். இப்படி எழுதுவதும், அதன் பிறகு அத்தனை தூரம் உள்ள கிராமத்திற்கு இப்படி ஆளை "திட்டமிட்டு" அனுப்புவதும், அங்கே போய் "கூட்டம் முன்னால் ஓடச்ச்சொவதும்" எல்லாமே சென்னையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட "நாடகம்" என்று தெரிய வந்துள்ளது.
மூன்று தமிழர் உயிரை "பறிக்க" எண்ணும் சக்திகள் அந்த கொலைவெறி எழுத்துகளுக்கு பின்னால் நின்றுகொண்டு, இன்று "கண்டனம்" வேறு கொடுக்கின்றனவே? கொலைவெறி எழுத்தில் மட்டுமல்ல, நாடகத்தை திட்டமிடுவதிலும், அதை அரங்கேற்றி மக்கள் மன்றத்தை முடக்க நினைப்பதிலும், அதை ஒட்டி தனது ஆதரவு சக்திகளை அணிதிரட்டுவதிலும், தொடர்வது ஏன்? மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸியும்,மற்ற தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழ்நாட்டில் "கடைக்கோடியில்" இருக்கும் இதுவரை எழுந்துவராத, எளிதில் எழுப்ப முடியாமால் பிறர் "தோற்றுப் போன" இருளர் மக்களை "பொறுமையாக" கிராமம், கிராமமாக சென்று பேசி, அணிதிரட்டி, அவர்கள் வீட்டு குழந்தளைகளை படிக்க வைத்து, உணர்வுள்ளவர்களாக, கல்வி கற்பவர்களாக, நடனம் ஆடவும், பாட்டு பாடவும், பழகி கொடுத்து சமூகத்தில் ஒரு "மரியாதையை" அவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவி விட்டார்களே? என்ற ஆதங்கம், "இரண்டாயிரம் ஆண்டுகளாக" அவர்களை போட்டு கடைசி மட்டத்தில் "ஒடுக்கி" வைத்திருந்த சக்திகளுக்கு "கோபத்தை" உருவாக்கத்தானே செய்யும்?
இத்தகைய "ஆதிக்க சக்திகளின்" "கொலைவெறி அரசியலையும்" அவர்களது "நாடக நடிப்பையும்" நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களது ஏட்டில்அவர்களது நிருபர் அடிபட்டதாக போட்ட "படமே"அதை அமபலப்படுத்தும். ஒரு "சுண்டு விரலில்" கட்டு போட்டுக் கொண்டு அவர் படத்திற்குமுகம் காட்டுவது நகைப்பை உருவாக்கும். இத்தகைய வழக்குகளை மேலிருந்து என்று கூறாமல், காவல்துறை "சரியாக ஆராய்ந்து" பார்க்குமானால் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் அவர்களும், "வரலாற்றின் குப்பை மேடுகளை" தேடிச் செல்வர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment