பல்டியா? பரிசீலனையா?
ஜெ ஆட்சி பரமக்குடி துப்பாக்கி சூடி நடத்தி ஏழு தேவேந்திரகுல மக்களை சுட்டு கொன்றது. இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சட்டமன்றத்தில் அந்த நிகழ்வை " இன மோதல்" என்று முதல்வர் வர்நித்ததுவே அவரது ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ம.நடராசன்கூட "செந்தில்வேல் அய்.பி.எஸ்." பற்றி குறை கூறியும் அரசு அசையவில்லை. ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஐயரை நியமித்த அரசு, கருப்பு கொடிகளையே எதிர்கொண்டது. ஆனாலும்கூட தேவேந்திர மக்கள் வாக்குகள் ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கே உள்ளாட்சியிலும் விழுந்தது.இத்தனையும் நடந்தும்கூட அசையாத அரசு இப்போது முதல்வர் பார்மகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் என்றும் காயம் பட்டவர்களுக்குகூடுதளாக பதினைந்தாயிரம் என்றும் அறிவித்துள்ளார்.
நிதி மட்டுமே அறிவித்தார் என்று பார்க்க முடியாமல் இறந்தவர் குடும்பங்களின் அடுத்த வாரிசுக்கு "அரசு வேலை" என்றும் அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மக்களை திருப்தி செய்யும். இவையெல்லாம் நீதிமன்றம் சென்றதால் வந்ததா? ஒவ்வொருவரும் அப்படி பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு அப்படி பணியக் கூடிய அதுவும் முன்கூட்டியே பணியக் கூடியவர் அரசு என்று நாம் பார்க்க முடியவில்லை. நடக்கும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும், விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் "எதிர்கட்சிகளுக்கு" செவி மடுக்கும் செயல்பாட்டிற்கு கொண்டு செல்கிறது என்ற உளவு துறை செய்தியை கேட்டிருப்பார்கள்.ஆகா. வாக்கு வங்கியை விட்டு விடக்கூடாதே என்று "மறு பரிசீலனை" வந்திருக்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு "வாக்கு வங்கிகள்"தான் முக்கியம். இதை உணர்ந்தே நாம்கூட கடந்த நாட்களில் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில், காட்சி ஊடக நமது நிகழ்வில், "மாவீரர் நாள்" அனுமதி மறுப்பையும், கைதையும், பரமக்குடி துப்பாக்கி சூட்டையும், விழுப்புரம் திருக்கோவிலூர் இருளர் பழங்குடி மீதான "பாலியல் வன்புணர்ச்சி" செய்த காவல்துறை தப்பிப்பதையும், சுட்டி காட்டி, "ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை" என்று இடித்து உரைத்தோம். அதுகூட உஅரித்திருக்கலாம். ஏன் என்றால் "இருளர் பழங்குடி" பெண்கள் பாதிப்பு பற்றி "முரசொலியை" படித்து காட்டி நேற்று நாம் நமது நிகழ்வில் பேசிய பின், வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு "ஐந்து காவலர்களை" இடை நீக்கம் செய்ததை சில்லி பார்ரட்டிர்யிருந்தோம். அதனால் ஊடகங்களின் பார்வளியிலும் "கேட்ட பெயர்" வாங்காமல் இருக்கவோ, எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்புகளுக்கு தலைவனங்கியோ, அதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை எண்ணியோ, "மறு பரிசீலனைக்கு" ஆரசு உள்ளாகி இருக்கலாம். அதை "பல்டி' என்று நாம் சொல்ல வேண்டியது இல்லை. மக்கள் கூறினால் நாம் ஒன்றும் கூற முடியாது.
வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகள், " இருளர் பழங்குடி பெண்கள்" மீதான காவலர் பாலியல் வன்புணர்ச்சியை இன்னமும் நீருபணம் ஆகாவிடினும், முதல்கட்ட விசாரணையில், இரவு நேரம் பெண்களை காவல் நிலையத்தில் "வைத்திருந்தது" தெரிந்தவுடன் அய்.ஜி எடுத்த நடவடிக்கை அங்கீகரிக்க தக்கது. அதை ஒட்டி இப்போது, முதல்வர் அந்த " இருளர் பழங்குடி பெண்களுக்கு தலா ஐந்து லட்சம்" அறிவித்திருப்பதும், காவல்துரையின் "கருப்பு ஆடுகளுக்கு" ஒரு தலைவலிதான். இவாறு செய்துவந்தால் நாங்கள் ஏன் குறை சொல்கிறோம்?
அதேபோல "மாவீரர் நாளை" அனுமதி மறுப்பு கொடுத்த அதிகாரிகளிடம் மீண்டும் மாவீரர் நாள் கடைப்பிடிக்க "பொதுக்கூட்டங்கள்" நடத்த சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அனுமதி கொடுத்தால் பாராட்டலாம். மீண்டும் நாங்கள் பல்டி என்று கூற மாட்டோம். மறு பரிசீலனை என்றே கூறுவோம்.
அதேபோல உயர்நீதிமன்றத்தில் "சாந்தன், பேரறிவாளன், முருகன்" வழக்கில் தமிழக அரசு "தள்ளுபடி" செய்ய சொன்னது என்ற செய்தி "தவறு" என்றும், "இப்போது வைகோவிற்கு திருப்தியா" என்றும் அரசு தரப்பு கேட்டதே அதையும் "நல்ல மறுபரிசீலனை" என்றே கூறத் தயார். எப்படியோ எங்களுக்கு வேலை நடக்க வேண்டும். டேஹ்ர்தல் கட்சிகள் திருந்தப் ப்கிரார்கள் என்றோ, திருந்தி விடுவார்கள் என்றோ மனப்பால் குடிக்க தயாராயில்லை. அதேபோல நேற்று இரவு "சட்ட எரிப்பு நாளையும்", பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் வைத்து பெரியார் திக திருவல்லிகேணியில் நடத்திய போது கூட்டத்தில் "கொளத்தூர் மணி"பேச அவ்ரும்போது காவல்துறை தடுத்து நேர காரணம் கூறி கூட்டத்தை முடித்ஹ்டு கொண்டார்களே, அந்த கூட்டத்தில் உண்மையான பெரியார் தொண்டர்களை காவல் நிலையத்தில், "ரவுடிகள்" என்று குரித்ஹ்டு வைக்கும் போக்கையும் எடுத்ஹ்டு சொன்னார்களே அதையும் மாற்றி "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ்,ஜெசி,உமா போன்ற பெண் ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை இல்லாமல் செய்யவேண்டும். காவல் அதிகாரி "காத்திருந்தோம், இப்போது வந்துவிட்டீர்கள். இனி மக்கள் மன்றத்தை பார்த்து கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் வசனம் பேசும் பாணியை நிறுத்த வேண்டும். செய்வார்களா? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு "ஆபத்து" கூடும் நேரத்தில், எந்த நேரமும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாம் என்ற எண்ணத்தில், நாற்பது தொகுதியையும் கைப்பட்டார் வேண்டும் என்றால் இந்த "மறு பரிசீலனைகள்" வந்துவிடுமோ? சரி. போற்குற்றங்களுக்கு துணை போனவர் என்று அவரை தமிழ்நாட்டு மக்கள் விரட்டினாலும், இவர்களது ஆட்சிமுரையிலேயே, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நாம் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் கூறியது காரணம் என்று நாம் பெருமை படவில்லை. இவையெல்லாமே "தானே" நடந்தவைதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment