Saturday, December 17, 2011

பொய்குண்டு போடும் தலப்பாக்கட்டு.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் போலி உணவுவிடுதிகள் தங்களை உண்மை "தலப்பாக்கட்டு பிரியாணி" என்று வணிகம் செய்வதாக நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. அதனாலோ, என்னவோ, நமது "தலைப்பாகை தலைமை அமைச்சரை" தலப்பாகட்டு என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். ரஷியா சென்றார் தலப்பாக்கட்டு. கள்ள ஒட்டு போட்டுஆட்சிபிடித்த புதின்அரசுடன் கைகோர்த்துகொண்டு அந்த அரசிடம் கொஞ்சினார் தலப்பாக்கட்டு. அப்படி கெஞ்சும்போது பல்வேறு ஒப்பந்த்தங்களில் "அணு உலைகள்" பற்றிய ஒப்பந்த்தம் முக்கியமாக . போடப்பட்டது. அதில் "கூடங்குளம்" பற்றியும் பேசினார். இரண்டு வாரத்தில் முதல் அணு உலையை கூடங்குளத்தில் "ஓடவிடுவோம்" என்று அவர் அப்பது கூறினார். கூடங்குளம் மக்களும், தமிழக அரசும் தனைகளை "ஓடவிட்டுவிடுவார்கள்" என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் ஏன் பொய் பேசினார்?

இந்திய ஊடகங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், ஒப்பந்தங்கள் எடுக்கலாம் என்று கனவுகாணும் திடீர் பணக்காரர்களும் "அணு உலை ஆதரவு" முழக்கங்களை எழுப்பி வருவதால் அவர்களுக்கு "தலைமை அமைச்சரின்" அறிவிப்பு "தெம்பை" கொடுக்கலாம். அணு உலை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு இதுவே "மனச்சங்கடத்தை" கொடுத்திருக்கலாம். ஆனால் உண்மை நிலையை நாம் எடுத்து சொல்ல வேண்டும். இன்று ஏடுகளிலே :கூடங்குளம்அணுஉலைநிர்வாகஅதிகாரி"கேஸ்வந்த் பாலாஜி பிரதமர் கூறுவது போல உடனே அணு உலை இயங்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். போராட்டம் முடிவுக்கு வந்தபின் "ஆறு மாதத்தில்" தயாராகும் என்று கூறியுள்ளார்.


இதுவே பிரதமர் கூறியது "ஒரு பித்தலாட்டம்" என்பதை உறுதியாகிவிட்டது. எதற்காக பிரதமர் அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும்? அடுத்து இரண்டு நாள் முன்பு கோவையில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் கல்பாக்கத்தில் பணியாற்றி இந்திய அணு உலைகளுக்கு வழக்கமாக வக்காலத்து வாங்கும் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் என்ற விஞ்ஞானி கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது டாக்டர் ரமேஷ் ஒரு கேள்வியை கேட்க, விஞ்ஞானி தினறிவிட்டார். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு அந்த இடத்தில் "எரிமலை, சுனாமி ஆய்வுகள் நடந்ததா?" என்று ரமேஷ் கேட்டார்.இதற்கு இங்கே பதில் சொல்ல முடியாது, வேண்டுமானால் இணைய அஞ்சலில் பதில் சொல்கிறேன் என்றார் விஞ்ஞானி. அடுத்து கூடங்குளம் அணு உலைக்கு எங்கிருந்து தண்ணீர் எடுக்க போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு "பேச்சிபாறை அனையிளிருந்துதான்" எடுக்க வேண்டும், ஆனால் தமிழக அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்று அவர் கூறினார். அதாவது தண்ணீர் இல்லாமல் அணு உலையை குளிரூட்டுவது பற்றி சிந்திக்கவே முடியாது. அதற்கே ஏற்பாடு செய்யாத நிலையில் எப்படி உலைகள் இரண்டு வாரத்தில் தொடங்கும்?

அதனால் ரஷியாவில் தலப்பாக்கட்டு கூறியது "கலப்பற்ற பொய் ". அதை ஏன் கூறினார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.அதாவது அணு உலை எதிர்பாளர்களை மிரட்ட கூறினாரா? மக்களை மன உறுதி கேடவைக்க கூறினாரா? தமிழக அரசை மிரட்ட கூறினாரா? அனைத்து காரங்களும் ஓரளவு இருந்தாலும் அதற்காகவெல்லாம் கூறியதாக தெரியவில்லை. பிறகு எதற்காக தலைமை அமைச்சர் பொய் கூறினார்? ஒரு புறம் அமைச்சர் நாராயணசாமியை வைத்து போராட்டத்திற்கு பணம் வருகிறது என்று கூற சொல்லி விட்டார்கள். அதனால் அது பெரிய அளவு போராட்டத்தை அடக்காது என்பதையும் தெரிந்தே வைத்துள்ளார்கள்.ஒரு காங்கிரஸ் தொழிற்சங்க வாதியை வைத்து "மணல் அள்ளுபவர்கள்" அணு உலையை தஹ்டுக்கிரார்கள் என்றும் இன்று சொல்ல வைத்து விட்டார்கள். சென்னையில் ஒரு குழுவை வைத்து "சான்பிரான்சிச்கொவிளிருந்து" தொலைபேசி மிரட்டல் வந்தது என்றும் குற்றச்சாட்டு சொல்லி விட்டார்கள். ஆகவே எல்லா குற்றச்சாட்டுகளும் மத்திய காங்கிரஸ் அரசால் "தமிழக அரசிற்கு" எதிரானதாக கிளப்பப்பட்டுள்ளன.

அதாவது மத்திய காங்கிரஸ் செல்வி.ஜெயலலிதா அரசை எதிரியாக பார்த்து குறிப்பாக அதன் உள்துறை அமைச்சர் "தனிப்பட்ட முறையில்" இறங்கி இதுபோன்ற "காரியங்களை" தூண்டி விடுகிறார் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதனால் அது உள்துறையின் "பழிவாங்கும்" போக்கு. ஆனால் பிரதமர் மன்மோகன் ஏன் கூடங்குளம் அணு உலை பற்றி "பொய்யான தகவலை" கூறவேண்டும்? சமீபத்தில் அமெரிக்காவிற்கும், மன்மோகனுக்கும் இடையில் உள்ள 'சர்ச்சை" எதன மீது?. அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டம் மீது எனபது நினைவுக்கு வருகிறதா? அதாவது அணு உலைகளுக்கு அந்நிய நாடுகளிடம் கையேந்தி சென்ற மன்மோகன் அமெரிக்காவின் வெள்ளை புஷ் வசம் சென்றது நினைவுக்கு வருகிறதா? அதன்மூலம் இந்திய நாடாளுமனரத்திற்கு தெரியாமல், மத்திய அமைச்சரவைக்கு தெரியாமல் மன்மோகன் புஷ் உடன் "கையெழுத்திட்டு" அமெரிக்கா -இந்திய அணு சக்தி ஒப்பந்தம் உருவானதா?

அந்த ஒப்பந்தத்தை வைத்து மேலை நாடுகளான அணு சக்தி நாடுகளிடம் கையேந்தி, கெஞ்சி கூத்தாடி, அமெரிக்கா ஒத்துழைப்பால் அய்.ஏ.ஈ.ஏ. என்ற அனைத்துநாட்டு அணு சங்கதி கழகம் என்ற அமைப்பின் ஒப்புதலை வாங்கினார் அல்லவா? அவர்கள் நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தம் என்ற "அணுகுண்டை சோதனைக்காக வெடிக்கமாட்டோம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட நிர்ப்பந்தம் செய்தார்களா? இல்லையா? அதற்கு இந்தியா "தயாராக இல்லை" என்பதும் புரிகிறதா? அதன்பிறகு அந்த மேலை நாடுகளான அணு சக்தி நாடுகள், தங்கள் நாட்டை போலவே, "சீ.எஸ்.சீ. என்ற 'அணு விபத்து நட்ட ஈடு சட்டம்" கொண்டு வார வர்புருத்தினார்களா? இல்லையா? அதற்காக ஒரு மசோதாவை மன்மோகன் அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்ததே? அதில் சில அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகளுக்கு சாதகமான வார்த்தைகளை நீக்க "தி ஹிந்து" ஊடக அமபலப்படுத்தளினால், பாஜக நாடாளுமன்றத்தில் கத்திய பிறகு, அவற்றை நீகினார்களா? இல்லையா?

அப்படி நீக்கியதால் "அந்நிய அணு உலை முதலாளிகள்" இறக்குமதி செய்யும் உலைகள் ஆபத்தில் சிக்கினால், மக்களுக்கு கொடுக்கும் "நட்ட ஈட்டில்" அந்த இயக்குனர்களும் "பங்கு" செலுத்தவேண்டும் என்று இருந்ததே? அதை அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லையே? அந்த சட்டத்தை மாற்றி அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகளை "திருப்தி"படுத்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முறை டில்லி வந்து பேசி பார்த்து "ஏமாந்து" போனாரே? மன்மோகன் அமெரிக்க போகும்போதும் இரண்டு முறை இதுபற்றி பேசி ஏமாந்து போனார்களே? அதே பியார்ச்ச்னையை அதாவது "அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டம்" பற்றி சென்னை வந்தபோது, முதல்வரிடம் ஹிலாரி பெசியதகாவும் வந்ததே?அவர்களை "திருப்தி" படுத்த ஒரு "விதிகளை" அந்த சட்டத்திற்காக எழுதி, அமைச்சரவை ஒப்புதலுடன் அதை மாலி சென்று "அமெரிக்காவின் கருப்பு புஷ் இடம்" காண்பித்து அதன்மூலம் அமெரிக்க அணு உலை உற்பத்தி நிறுவங்களை 'சம்மதிக்க" வைத்து விடுவேன் என்று மன்மோகன் கூறினாரே? அப்போதும் அவர்கள் சம்மதிக்கவில்லையே? இந்திய நாடாளுமன்றமும் அந்த "விதிகள்" அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டத்தை "நீர்த்துபோக" செய்யும் என்று பேச தொடங்கி விட்டார்களே?


இத்தகைய சூழலில்தான் மனோகன் பிரான்ஸ் நாட்டு அதிபருடன் இரண்டு வாரம் முன்பு 'அணு உலை மற்றும் யுரேனியும் " வாங்க சம்மதம் பெற்று அதை ஊடகங்களில் பெயர்த்து படுத்தினார். அதேபோல இப்போது ரஷியா சென்று அணு உலை பெற, சம்மதம் பெற்றேன் என்கிறார். அதேநேரம் அமெரிக்கா தனது நாட்டு "தனியார் முதலாளிகளது" உலைகளுடன் ஒப்பந்தம் போட சொல்கிறது. ஆனால் பிரான்சும், ரஷியாவும், அந்தந்த 'அரசாங்கங்களுடன்" ஒப்பந்தம் போட தயாராக இருக்கிறது என்றும் ஊடகங்கள் மூலம் கருத்தை பரப்புகிறார். நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தம் போட்டு இந்தியா "அணுகுண்டு சோதனை" செய்யகூடாது என்று அமெரிக்காவும், மேலை நாடுகளும் கூறும்போது, அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை பிரான்சும், ருசியாவும் "நிர்பந்திக்கவில்லை" என்று கூறுகிறார். அதை ஒட்டியே "கூடங்குளம் அணு உலை இரண்டு வாரத்தில் செயல்படும்" என்று பொய் செய்தியை குண்டாக போட்டுள்ளார். அதாவது இது தனது நிரந்தர முதலாளி அமெரிக்காவை "நிர்ப்பந்தம்" செய்ய போடப்பட்ட "பொய் குண்டு".

இப்படி பொயகுண்டு போடும் "தலப்பாக்கட்டு" உண்மையில் அணு உலை மூலம் "மின்சாரம்" தயார் செய்யும் கொள்கை கொண்டவர் அல்ல. மாறாக அணு உலைகள் மூலம் "அணு குண்டு" செய்ய பல வழிகளிலும் ஏற்பாடு செய்பவர். அதனால்தான் அனுகுண்டின் ஆதரவாளர் "அப்துல்கலாம்" இங்கே வந்து வேண்டும் இந்த அணு உலை என்று கூறி சென்றார். இந்த அதலப்பாகட்டின் "இரட்டைவேடம்" அமப்லப்படுத்தப்படவேண்டும்.

No comments:

Post a Comment