Saturday, December 17, 2011

ஏண்டா, முல்லபெரியாரா?

வேண்டும் என்றே "முல்லைபெரியாரை" முல்லா பெரியார் என்று எழுதி அப்படியே உச்சரித்து மலையாள உச்சர்தஈபு என்பதாக காட்டி, இந்தியா முழுவதும் ஊடகங்களில் உள்ள "கூமுட்டைகளுக்கு" புரியாமல் இருக்கும்போதே ஒரு "சித்து விளையாட்டை" செய்துவரும் கெட்டிகாரர்கலே,நீங்கள் அந்த அணையின் பெயரை மலையாளத்தில் போட எண்ணினால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

மலையாளத்தில் "முல்லை நதி" என்பதுதான் அப்படி அழைக்கப்படுகிறது. அந்த முல்லை நதியை நீ, முல்லா" என்கிறாய். சரி. சொல்லிவிட்டு போ. மீதம் உள்ள "பெரியாரை" ஏன் அப்படியே அழைக்கிறாய்? "பெரிய ஆறு" என்பதுதான் அங்கே பெரியாறு" என்று அழைக்கப்படுகிறது. நீ அதையும் மலையாளத்தில் கூறு. அதாவது "வல்லிய புழா" என்று கூறு. மொத்தத்தில் "முல்ல வல்லிய புழா" என்றுதான் நீ அழைக்க வேண்டும். உனக்கு சம்மதமா? சென்னை பதிப்பான டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவை திருந்துவார்களா?

முல்லைபெரிராஉ அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், 1879 இல் பஞ்சா என்ற தமிழ்மன்னன் வசம் இருந்ததும், 1885 இல் . கண்ணன் தேவன் எஸ்டேட் உடன் ஒப்பந்தம் போட்டதும் வரலாற்றில் ஆவணமாக உள்ளது. அதற்குப்பின்தான் "திருவிதாங்கூர்" சமஸ்தானம் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஆங்கிலேயன் முட்டாள்தனமாக தமழ்நாட்டு பகுதிக்கு "திருவிதாங்கூர்" மன்னனுடன் ஒப்பந்தம் போட்டு விட்டான். இந்த உணமைகளை நாகர்கோவில் எம்.பி. நேசமணி, ௧௯௫௫ ஆம் ஆண்டு டிசம்பர் பதினாலாம் நாள் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அப்போது அவர் "திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சி தலைவர் ".

No comments:

Post a Comment